மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை!

July 16, 2020


மின்சார சபைக்கு அரசாங்கம் வழங்கிய எரிபொருள் சலுகையின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு, பாவனையாளர்கள் அவர்களின் பெப்ரவரி மாத மின்சாரக் கட்டணத்தின் அளவை செலுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
ஆனால் இந்த சலுகை கால மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு. 

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
1. மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல். 
2. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
3. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமதத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அ.த.தி.
மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! Reviewed by irumbuthirai on July 16, 2020 Rating: 5

Vacancies: Ceylon Fisheries Corporation

July 14, 2020


Vacancies in Ceylon Fisheries Corporation.
Closing date: 30-07-2020.
For more details see the advertisement below:


Sunday observer.

Vacancies: Ceylon Fisheries Corporation Vacancies: Ceylon Fisheries Corporation Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

July 14, 2020


தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்று(14) முதல் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நிலையங்களில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம்

July 14, 2020


உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமை படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு:

July 14, 2020


ஆரோக்கியமான அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. 
இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப் பொருளான குர்குமின் ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. 
எனவே இந்த குர்குமின் இரத்தம் மற்றும் எலும்பு மச்சைகளில் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

BBC
புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி

July 14, 2020


PCR பரிசோதனைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமாகியுள்ளார். 
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது 8வது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
34 வயதுடைய இந்த கைதியின் பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று கிடைக்கப் பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிவ்ஸ்வய.
பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை

July 14, 2020

Covid-19 பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
ஏற்கனவே ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 
சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய வியாபார நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 
ஆகையால், உடனடியாக இந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி:

July 14, 2020


கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
அந்தவகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதரிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டைச் சேர்ந்த செய்தி முகாமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. 
இத்தகவலை institute for translations medicine and biotechnology நிறுவன இயக்குனர் வாடிம் டாரஷோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளோம். மாஸ்கோவில் உள்ள செச்சனோவ் அரச மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களை கொண்டு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ஆம் தேதியும் இரண்டாவது குழுவினர் ஜூலை 20ஆம் தேதியும் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
எனினும் இந்த தடுப்பு மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

BBC
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி: உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி: Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்!

July 13, 2020


கொரோனா வைரஸ் பரவல் நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்க அல்லது ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்போர் கல்வி அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கமான 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அ.த.தி.
கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்! கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு)

July 13, 2020


அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேசிய தேர்தலின் போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் கணக்கிடாத வகையில் சுயமாக வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
ஊழியர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தொழில் தருனர்களால் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலதிக விளக்கங்களும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. 
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்:

July 12, 2020


கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி அதாவது Pocitive என வழங்கப்பட்ட பெறுபேறுகளை அரசாங்கம் ஏற்க மறுத்ததையடுத்து இனிமேல் பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்வதில்லை என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 
 இந்த செய்தியை The Sunday Morning என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு!

July 12, 2020


ராஜாங்கன பிரதேச செயலாளர் பிரிவின் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார். 
குறித்த பிரதேசத்திலுள்ள குடும்பங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு:

July 12, 2020


விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளை உரிய தினத்தில் திறந்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதுள்ள கொரோணா பரவல் நிலைமை காரணமாக நாளை அதாவது திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.


விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5
Powered by Blogger.