Vacancy: American Embassy (Tamil Translator)

July 18, 2020


The American Emabassy (Colombo)
Vacncy for Tamil Translator.
Monthly gross salary: Rs. 111, 819/-
Closing date: 24-07-2020.
For more details see the advertisement below:



Vacancy: American Embassy (Tamil Translator) Vacancy: American Embassy (Tamil Translator) Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்:

July 18, 2020

Covid-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 
Covid-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளததை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அறிக்கையிடுவதில் சில சமூக ஊடகங்கள் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் தவறான அர்த்தப்படுத்தலுடன் பிரச்சாரம் செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயத்திற்கு அமைவாக 2020 ஜுலை மாதம் 15ஆம் திகதி திறன் அபிவிருத்தி ,தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை ஆவணம் தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் கீழ்வருமாறு அமைகிறது என்பது வலியுறுத்தப்படுகிறது. 
முதலாளிமார் , ஊழியர் தொழிற் சங்கம் மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி , தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய கொவிட் 19 தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜுன் முதலான 2 மாதங்களுக்கு வேலையில்லாமையினால் ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவர்கள் இறுதியாக பெற்ற முழுமையான சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்கு அமைவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 என்ற இரண்டிலும் பார்க்க நன்மை பயக்கும் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும் இதற்கமைவாக செயல்பட்டு 2020 ஜுலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்காக ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் எட்டப்பட்ட உடனபாட்டு தொடர்பான தகவல்கள் திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 

நாலக கலுவௌ 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்: கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்: Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்..

July 17, 2020

அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத பட்டியலுக்கான தொகையை, மார்ச், ஏப்பிரல், மே மாதங்களிலும் அறவிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இதற்காக 
இந்த நிலையில், இந்த சலுகைகள் வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அ.த.தி.

மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்.. மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்.. Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு:

July 17, 2020


க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதற்கான  விண்ணப்பங்களை அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு தபால் மூலம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 
பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாப் பத்திரங்களை இணையத்தளத்தில் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு: க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு: Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்)

July 17, 2020


தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியானது. 
இதில் தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் உட்பட இன்னும் பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இந்த விஷேட வர்த்தமானியை மும்மொழிகளிலும் தருகிறோம். 
தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (The Corona Virus Disease 2019 (COVID 19) (Elections) Regulations, No. 1 of 2020)
English
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Sinhala
தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை:

July 17, 2020


உயர்தர தொழில்நுட்ப கற்கை நெறியை தொடர்வதற்காக தரம் 12 மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்றும் இறுதி தினம் 

2020 ஜுலை மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் கற்கைநெறிகள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பட்டியலையும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். www.mov.gov.lk கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பதாகும். 
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கமான 0112787136 மூலம் தொடர்புகொண்டு கேட்டறிய முடியும்.
அ.த.தி.
தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை: தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை: Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 17, 2020


15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

Covid-19 காலப்பகுதிக்கு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குதல், 
மின் கட்டணத்திற்கான புதிய சலுகை, 
உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஸ்தாபித்தல்,
உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்காவை அமைத்தல்
உட்பட இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை!

July 16, 2020


மின்சார சபைக்கு அரசாங்கம் வழங்கிய எரிபொருள் சலுகையின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு, பாவனையாளர்கள் அவர்களின் பெப்ரவரி மாத மின்சாரக் கட்டணத்தின் அளவை செலுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
ஆனால் இந்த சலுகை கால மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு. 

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
1. மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல். 
2. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
3. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமதத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அ.த.தி.
மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! Reviewed by irumbuthirai on July 16, 2020 Rating: 5

Vacancies: Ceylon Fisheries Corporation

July 14, 2020


Vacancies in Ceylon Fisheries Corporation.
Closing date: 30-07-2020.
For more details see the advertisement below:


Sunday observer.

Vacancies: Ceylon Fisheries Corporation Vacancies: Ceylon Fisheries Corporation Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

July 14, 2020


தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்று(14) முதல் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நிலையங்களில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம்

July 14, 2020


உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமை படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு:

July 14, 2020


ஆரோக்கியமான அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. 
இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப் பொருளான குர்குமின் ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. 
எனவே இந்த குர்குமின் இரத்தம் மற்றும் எலும்பு மச்சைகளில் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

BBC
புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி

July 14, 2020


PCR பரிசோதனைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமாகியுள்ளார். 
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது 8வது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
34 வயதுடைய இந்த கைதியின் பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று கிடைக்கப் பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிவ்ஸ்வய.
பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5
Powered by Blogger.