Vacancy: Ministry of Health

August 08, 2020


Vacancy in Ministry of Health.
Health System Enhancment Project
Post : Project Engineer.
Closing date: 16-08-2020.



Vacancy: Ministry of Health Vacancy: Ministry of Health Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Limited

August 08, 2020


Vacancies in Lanka Sathosa Limited.
Closing date: 18-08-2020.



Vacancies: Lanka Sathosa Limited Vacancies: Lanka Sathosa Limited Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

புதிய பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ..

August 08, 2020

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களில், 16 முஸ்லிம்கள், 25 தமிழர்கள் உள்ளிட்ட 41 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். 
தேசிய பட்டியலையும் சேர்த்து அமையவுள்ள பாராளுமன்றத்தில் 20 முஸ்லிம்கள், 26 தமிழர்கள் உள்ளிட்ட மொத்தமாக 46 தமிழ் பேசும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

46 பேரின் விபரம் இதோ.. 

யாழ்ப்பாணம் மாவட்டம் 
1. அங்கஜன் ராமநாதன் - 36,365 (SLFP) 
2. சிவஞானம் ஶ்ரீதரன் - 35,884 (ITAK/TNA) 
3. எம்.ஏ. சுமந்திரன் - 27,834 (ITAK/TNA) 
4. தர்மலிங்கம் சித்தார்த்தன் - 23,840.                        (ITAK/TNA) 
5. டக்ளஸ் தேவானந்தா - 32,146 (EPDP) 
6. கஜேந்திர குமார் பொன்னம்பலம் - 31,658 
    (AITC) 
7. சி.வி. விக்னேஸ்வரன் - 21,554 (TMTK) 

திகாமடுல்ல மாவட்டம் 
8. எச்.எம்.எம். ஹரீஸ் - 36,850 (SJB) 
9. பைஸல் காசிம் -29,423 (SJB) 
10. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் - 35,697 (NC) 
11. மொஹமட் முஸரப் -18,389 (ACMC) 

வன்னி மாவட்டம் 
12. சார்ள்ஸ் நிர்மலநாதன் - 25,668 (ITAK/TNA) 
13. செல்வம் அடைக்கலநாதன் - 18,563 (ITAK/TNA) 
14. எஸ். யோகராஜலிங்கம் - 15,180 (ITAK/TNA) 
15. குலசிங்கம் திலீபன் - 3,203 (EPDP) 
16. ரிஷாட் பதியுதீன் - 28,203 (SJB) 
17. காதர் மஸ்தான் - 13,454 (SLPP) 

மட்டக்களப்பு மாவட்டம் 
18. சிவனேசத்துரை சந்திரகாந்தன் - 54,198 (TMVP) 
19. சாணக்யா ராஹுல் - 33,332 (ITAK/TNA) 
20. கோவிந்தன் கருணாகரன் - 26, 382 (ITAK/TNA) 
21. எஸ். வியாழேந்திரன் - 22,218 (SLPP) 
22. ஹாபிஸ் நசீர் - 17,599 (SLMC) 

நுவரெலியா மாவட்டம் 
23. ஜீவன் தொண்டமான் - 109,155 (SLPP) 
24. மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902 (SLPP) 
25. பி. திகாம்பரம் - 83,392 (SJB) 
26. வீ. இராதாகிருஸ்ணன் - 72,167 (SJB) 
27. எம். உதயகுமார் - 68,119 (SJB) 

திருகோணமலை மாவட்டம் 
28. எம்.எஸ். தௌபீக் - 43,759 (SJB) 
29. இம்ரான் மஹ்ரூப் - 39,029 (SJB) 
30. ஆர். சம்பந்தன் - 21, 422 (ITAK/TNA) 

கண்டி மாவட்டம் 
31. ரஊப் ஹக்கீம் - 83,398 (SJB) 
32. அப்துல் ஹலீம் - 71,063 (SJB) 
33. எம். வேலுகுமார் - 57,445 (SJB) 

கொழும்பு மாவட்டம் 
34. எஸ்.எம். மரிக்கார் - 96,916 (SJB) 
35. முஜிபுர் ரஹ்மான் - 87,589 (SJB) 
36. மனோ கணேஷன் - 62,091 (SJB) 

பதுளை மாவட்டம் 
37. வடிவேல் சுரேஸ் - 49,762 (SJB) 
38. அரவிந்தகுமார் - 45,491 (SJB) 

கேகாலை மாவட்டம் 
39. கபீர் ஹஷீம் - 58,716 (SJB) 

புத்தளம் மாவட்டம் 
40. அப்துல் அலி சப்ரி - 33,509 (MNA) 

அநுராதபுரம் மாவட்டம் 
41. இஷாக் ரஹ்மான் - 49,290 (SJB) 

தேசியப் பட்டியல் (SLPP) 
42. அலி சப்ரி 
43. மொஹமட் முஸம்மில் 
44. மர்ஜான் பளீல் 
45. சுரேன் ராகவன் 

தேசியப் பட்டியல் (SJB) 
46. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.
புதிய பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ.. புதிய  பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ.. Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள்

August 08, 2020


இம்முறை பொதுத் தேர்தலில் தந்தை-மகன் 03 ஜோடிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
01. மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச. 
02. முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஷஷிந்ர ராஜபக்ச. 
03. முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோர்.

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள் தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்...

August 08, 2020


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விபரம் 
மைத்திரிபால சிறிசேன - பொலன்நறுவை. 
துமிந்த திஸாநாயக்க - அனுராதபுரம். 
மகிந்த அமரவீர - ஹம்பாந்தோட்டை 
லசந்த அழகியவண்ண - கம்பஹா 
நிமல் சிறிபால டி சில்வா - பதுளை 
சாமர சம்பத் - பதுளை 
தயாசிறி ஜயசேகர - குருணாகல் 
சாந்த பண்டார - குருணாகல். 
ஷான் விஜேலால் - காலி 
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - கேகாலை 
சாரதி துஷ்மான - கேகாலை 
ஜகத் புஷ்பகுமார - மொகராகலை 
காதர் மஸ்தான் - வன்னி 
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியை கைப்பற்றியதுடன் அங்கஜன் ராமநாதன் நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்... நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்... Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்..

August 08, 2020

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, 
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், 
சாகர காரியவசம், 
அஜித் நிவாட் கப்ரால், 
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, 
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, 
மஞ்சுள திஸாநாயக்க, 
பேராசிரியர் ரஞ்சித் பண்டார, 
பேராசிரியர் சரித ஹேரத், 
கெவிந்து குமாரதுங்க, 
மொஹமட் முசாமில், 
பேராசிரியர் திஸ்ஸ விதாரன, 
பொறியியலாளர் யாமினி குணவர்தன, 
கலாநிதி சுரேந்திர ராகவன், 
டிரான் அல்விஸ், 
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல, 
ஜயந்த கெடுகொட, 
மொஹமட் பலீல் மர்ஜான் 
ஆகியவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 
இந்த பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு SLPP கையளித்துள்ளது.

SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்.. SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்.. Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர்

August 08, 2020


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியலில் இருந்து கடந்த மாத ஆரம்பத்திலேயே தான் விலகிக் கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எனது இந்த முடிவை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன். 
கிரிக்கெட் விளையாட்டில் அதிக காலத்தை செலவழித்த நான் இதன் பிறகு எனது குடும்பத்துக்காக காலத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது பிரச்சாரத்தை கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்காக சிறந்தமுறையில் செய்தேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டை சிறந்த முறையில் வழிநடத்துவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட 17 பேர்கள் அடங்கிய தேசிய பட்டியல் உறுப்பினர்களில் திலக்கரட்ன டில்ஷானின் பெயர் அடங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர் தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள்

August 08, 2020


கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இரு சிறைக் கைதிகள் தெரிவாகியுள்ளனர். 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று சிறையில் இருந்தவாறு தெரிவாகியுள்ளார். 
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின ஆராதனைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பிள்ளையான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ...

August 05, 2020


2020 பொதுத்தேர்தல் தொடர்பாக உள்ள விஷேட அம்சங்களை இங்கு தருகிறோம். 
* Corona பரவலுக்கு மத்தியிலும் 71% வாக்களிப்பு பதிவான தேர்தல். 
* கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தென்னாசியாவில் நடைபெறும் முதலாவது தேர்தல். 
* வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல். 
* அடுத்த நாளே (6) வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும் தேர்தல். 
* சுகாதார ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட தேர்தல். 
* மாலை 5 மணி வரை இடம்பெற்ற தேர்தல். 
* 9 வருடங்களின் பின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வாக்களித்த தேர்தல். 
* மூன்று வாக்காளர்களுக்காக வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்ட தேர்தல். 
* தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பதால் சிலருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாத தேர்தல்.

2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ... 2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ... Reviewed by irumbuthirai on August 05, 2020 Rating: 5

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்...

August 04, 2020


தற்போது வெளிநாட்டுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டிருப்பதனால் இம்முறை பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தேர்தல் தொடர்பான மதிப்பீடுகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண கெட்டியாராச்சி தெரிவித்தார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City)..

August 04, 2020


கொழும்பில் துறைமுக நகருக்கு அருகாமையில் மற்றுமொரு துறைமுக நகர் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பந்துவிக்கிரம தெரிவித்துள்ளார். 
 கடலை நிரப்பி அமைக்கப்பட உள்ள இந்தத் துறைமுக நகரின் வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனால் கொழும்பு நகருக்கு புதிய நிலப் பிரதேசம் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


நிவ்ஸ்வய
கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City).. கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City).. Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை!

August 04, 2020


வெலிக்கடை சிறையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்கார பூனை சிறைச்சாலை சுற்று வட்டாரத்திலேயே நடமாடித் திரிவதை கண்டறிந்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாக உத்தியோகத்தர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை சுமார் 2 கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு சிம் அட்டைகள் மற்றும் ஒரு மெமரி கார்ட் என்பன கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
பின்னர் இந்த பூனை போலீசுக்கு கையளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே  அந்த அறையிலிருந்து நேற்றுமுன்தினம் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது!

August 04, 2020


நாளை இடம்பெறும் பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறும் அதேவேளை பி.ப. 4 மணி முதல் பி.ப. 5 மணி வரையான நேரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுகமடைந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே அவர்களுடைய வாகனங்களில் வருகை தந்து இந்த நேரத்திற்குள் வாக்களிக்கலாம் என தெரிவித்தார். 
 இதேவேளை மேற்படி சந்தர்ப்பங்களில் மாத்திரம் சுகாதார அதிகாரி ஒருவர் உதவி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வாக்காளர்களுக்கு விசேட வாக்களிப்பு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சுய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமையில் இவ்வாறு வாக்களிக்க முடியாதவர்களாக லங்காபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.