ஒன்றரை இலட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு! வெளிவந்த முக்கிய தகவல்கள்!!

August 14, 2020


பாராளுமன்ற பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த, 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். 
 50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மிகுதி 100,000 தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்களை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
 கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்று ஓரிரு வாரங்களில் பட்டதாரிகள் 50,000 பேருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார். 
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரி தெரிவு செய்தல் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 
குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக பல்துறை அபிவிருத்தி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின்படி வறுமையற்ற இலங்கை நாட்டை உருவாக்குவதே இவ் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 2020 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். 
இதனால் இவ்வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடனே அரசியலமைப்பின் 08வது பிரிவின்படி நிறைவேற்றுத்துறையை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.   
நிர்வாக பொறிமுறை முறையாக ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் 150,000 தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்தார். 
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் 

ஞாயிறு (16) ஜனாதிபதி அலுவலக இணையத்தளத்தில் வெளியிடப்படும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களை அனுப்புதல் திங்கள் (17) ஆரம்பிக்கப்படும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 01 தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டும். 
தகுதி பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் பட்டியலில் இல்லாதவிடத்து ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான தொழில்களில் அமர்த்துதல் அந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

அ.த.தி.

ஒன்றரை இலட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு! வெளிவந்த முக்கிய தகவல்கள்!! ஒன்றரை இலட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பு! வெளிவந்த முக்கிய தகவல்கள்!! Reviewed by irumbuthirai on August 14, 2020 Rating: 5

EPF செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

August 14, 2020


ஊழியர் சேமலாப நிதியை (EPF) செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். 
நேற்று தொழில் அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர் , தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார். தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா மேலும் தெரிவித்தார்.

EPF செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! EPF செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! Reviewed by irumbuthirai on August 14, 2020 Rating: 5

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பாக...

August 14, 2020


சகல பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று(14) தெரிவித்துள்ளது. 
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பாடசலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுமார் 3 மாத காலங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இணையத்தளங்கள் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் வைத்திய பீடம் உள்ளிட்ட ஏனைய பீடங்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் கூறினார். சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். 
விடுதிகளில் முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு மாணவருக்கு ஒரு அறை மாத்திரம் என்ற முறை தற்பொழுது கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்திருப்பதனால் மாணவர்கள் வழமை போன்று விடுதிகளில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். 

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பாக... பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் தொடர்பாக... Reviewed by irumbuthirai on August 14, 2020 Rating: 5

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள்...

August 14, 2020

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25க்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 

பெயர் விபரங்கள் பின்வருமாறு. 
01.  திரு.டப்ளியு.எம்.டீ.ஜே.பெர்ணான்டோ 
       அமைச்சரவைச் செயலாளர் 
02.  திரு.ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிரி 
       நெடுஞ்சாலைகள் அமைச்சு  
03.  திரு.எஸ்.ஆர். ஆடிகல 
       நிதி அமைச்சு 
 04. திரு.ஜே.ஜே.ரத்னசிறி 
      அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 
05. திரு.ஜகத் பீ. விஜேவீர 
      வெகுசன ஊடக அமைச்சு 
06. திரு. ரவீந்திர ஹேவாவிதாரன 
      பெருந்தோட்டத்துறை அமைச்சு 
07. திரு. டீ.எம். அனுர திசாநாயக்க 
      நீர்ப்பாசன அமைச்சு 
08. திரு. டப்ளியு..ஏ சூலாநந்த பெரேரா 
      கைத்தொழில் அமைச்சு 
09. திருமதி. வஸந்தா பெரேரா 
      மின்சக்தி அமைச்சு  
10. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி 
     சுற்றுலா அமைச்சு 
11. திரு.ஆர்.ஏ.ஏ.கே. ரணவக 
      காணி அமைச்சு 
12. திரு. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரன 
      தொழில் அமைச்சு 
13. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க 
      கடற்றொழில் அமைச்சு 
14. மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன 
      பாதுகாப்பு அமைச்சு 
15. திரு. எம்.கே.பீ. ஹரிஷ்சந்திர 
      வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு 
16. திரு. என்.பீ.மொன்டி ரணதுங்க 
      போக்குவரத்து அமைச்சு 
17. கலாநிதி பிரியத் பந்து விக்ரம 
      நீர்வழங்கல் அமைச்சு 
18. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன 
      வர்த்தக அமைச்சு 
19. மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்ஹ 
      சுகாதார அமைச்சு 
20. மேஜர் ஜனரால் (ஓய்வுபெற்ற) ஏ.கே சுமேத பெரேரா 
      கமத்தொழில் அமைச்சு 
21. திரு. அனுராத விஜேகோன் 
      இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 
22. திருமதி. கே.டீ.ஆர் ஒல்கா 
      வலுசக்தி அமைச்சு 
23. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொழம்பகே 
      வெளிநாட்டலுவல்கள் அமைச்சு 
24. வைத்தியர் அனில் ஜாசிங்க 
      சுற்றாடல் அமைச்சு 
25. பேராசிரியர் கபில பெரேரா 
     கல்வி அமைச்சு 
26. திரு சிறிநிமல் பெரேரா 
      நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு

மேற்படி நியமனத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள்... அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள்... Reviewed by irumbuthirai on August 14, 2020 Rating: 5

புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

August 10, 2020

புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அதன் கீழ் உள்ளடங்கும் நிறுவனங்கள் போன்ற பல விபரங்களை உள்ளடக்கி வெளியான விஷேட வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Special Gazette
புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த

August 10, 2020


இலங்கையின் 14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விஹாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 
மஹிந்த ராஜபக்ஷ 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகி முதற் தடவையாக பாராளுமன்றதில் பிரவேசித்தார். 1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர் 14வது பிரதமர் என்ற ரீதியில் நேற்று அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தார். 
தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினரராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் மஹிந்த ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு. மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று அமோ வெற்றி பெற்றார்.இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகள் இதுவாகும். 
இரண்டு தடவைகள்; ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட் டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். 
2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதிவரை முதல் முறையாக இலங்கையின் பிரதமராக செயற்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார். 
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். 
நேற்றைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த 4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

August 10, 2020

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் பெயர், மாவட்டம், கட்சி அல்லது சுயேட்சைக் குழு என்பவற்றை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) 2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

07-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 10, 2020

07-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

ஆசிரியர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்தல் 
உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
07-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 07-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Cricket

August 08, 2020


Vacancies in the Sri Lanka Cricket



Vacancies: Sri Lanka Cricket Vacancies: Sri Lanka Cricket Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

Vacancies: Japan Embassy

August 08, 2020


Vacancies in Japan Embassy.
Posts: Driver & Technician.
Closing date: 10-08-2020.



Vacancies: Japan Embassy Vacancies: Japan Embassy Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

Vacancy: Chief Internal Auditor: SMB

August 08, 2020


Vacancy in the State Mortgage & Investment Bank.
Post: Chief Internal Auditor
Closing date: 17-08-2020.



Vacancy: Chief Internal Auditor: SMB Vacancy: Chief Internal Auditor: SMB Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

Vacancy: University of Moratuwa

August 08, 2020


Vacancy in University of Moratuwa
Closing date: 28-08-2020.



Vacancy: University of Moratuwa Vacancy: University of Moratuwa Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

Vacancy: State Mortgage & Investment Bank

August 08, 2020


Vacancy in the State Mortgage & Investment Bank
Closing date: 14-08-2020.



Vacancy: State Mortgage & Investment Bank Vacancy: State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.