க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி:

August 22, 2020


2020இல் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். 
ஏற்கனவே விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 21 என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி: க.பொ.த. (சா.த) பரீட்சை 2020: நீடிக்கப்பட்ட விண்ணப்ப திகதி: Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்:

August 22, 2020

நடைமுறை உலகிற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 நேற்று முன்தினம் (20) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்களின் பகுப்பாய்வு அறிவையும், விமர்சன ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் விருத்தி செய்வது முக்கியமாகும்,
தற்போதுள்ள கல்வி கட்டமைப்பில் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பாட விதானங்கள் அமைய வேண்டிய விதம் பற்றிய கருத்துக்களை முன்வைக்குமாறு அமைச்சர், அதிபர்களைக் கேட்டுக் கொண்டதுடன். பாடவிதான விருத்தி தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: மாற்றப்படும் பாடத்திட்டங்கள்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்: Reviewed by irumbuthirai on August 22, 2020 Rating: 5

புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம்

August 20, 2020

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டம் - 2020
 
மேற்படி திட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்களை இங்கு தருகிறோம்.

2020-08-31 மு.ப. 10.00 இவர்கள் கல்வியமைச்சிற்கு சென்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெற்றிடமுள்ள பாடசாலைகளில் தமக்கு விருப்பமான பாடசாலையை குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 
நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டோரை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம் புதிதாக ஆசிரியர் நியமனம் பெறவிருப்போர் விபரம் Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

புதிய பாராளுமன்றத்தில்...

August 20, 2020


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. 
இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு பதவி வகிப்பவர்களை இங்கு தருகிறோம். 
சபாநாயகர் - மஹிந்த யாப்பா அபேவர்தன. 
குழுக்களின் பிரதித் தவிசாளர் - அங்கஜன் 
இராமநாதன். 
எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச. 
பிரதி சபாநாயகர் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய. 
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் - லக்ஸ்மன் கிரியல்ல.

புதிய பாராளுமன்றத்தில்... புதிய பாராளுமன்றத்தில்... Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்..

August 20, 2020

இன்றைய தினம் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு  ஆரம்பமானது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும். 
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார். 
கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்.. பாராளுமன்றத்திற்கு படகில் வந்த உறுப்பினர்.. Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்...

August 20, 2020


இன்று (20) ஆரம்பமாகும் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும். 
25 - 40 வயதுக்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திரு. வாசுதேவ நாணயக்கார, திரு. ஆர். சம்பந்தன், திரு. சீ. பி. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். 
இம்முறை பொதுத்தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக இதுவரையில் பெயரிடப்படவில்லை. 
இதனால் பாராளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ளும் 225 உறுப்பினர்களுள் 223 பேர் மாத்திரமே இடம்பெறுகின்றனர்.  
73 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இன்று இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இடம்பெறவில்லை. பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். 
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர மற்றும் விளக்கமறியலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்:

August 20, 2020


கொரோனா தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
இதனடிப்படையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மட்டும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு மாகாண செயலாளர்கள் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.த.தி.
சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்: சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்: கல்வியமைச்சின் தீர்மானம்: Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

August 19, 2020

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அறிமுகம் செய்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு இன்று (19) அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 
பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் பட்டதாரிகள் 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. 
இன்றைய தீர்மானத்தின்படி மேலும் பத்தாயிரம் பேர் அதனுடன் இணைக்கப்படவுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்று சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக குறிப்பிட்டார். 
இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில் வழங்குவதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது” என்று ஜனாதிபதி அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.


அ.த.தி.
மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on August 19, 2020 Rating: 5

Vacancies: Principal, Assistant Teachers & Laboratory Assistant

August 18, 2020


Vacancies for Principal, Assistant Teachers & Laboratory Assistant.




Vacancies: Principal, Assistant Teachers & Laboratory Assistant Vacancies: Principal, Assistant Teachers & Laboratory Assistant Reviewed by irumbuthirai on August 18, 2020 Rating: 5

இன்று முதல் ஆரம்பமாகும் பல்கலைக்கழகங்கள்...

August 17, 2020


களனி பல்கலைக்கழகத்தைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் இன்று முதல் மீளத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். 
மருத்துவ பீடங்களின் இறுதி வருட பரீட்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. கடந்த காலங்களில் இணையத் தளத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. தடைகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் இணையத் தள கற்கைகளில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். 
விடுதிகளில் இதுவரை ஓர் அறையில் ஒருவர் தங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வரையறையில்லாமல் வழமைபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். 
இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, விடுதி வசதியை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் நாளை மாலை 5 மணிக்கு முன்னராக விடுதிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அ.த.தி.
இன்று முதல் ஆரம்பமாகும் பல்கலைக்கழகங்கள்... இன்று முதல் ஆரம்பமாகும் பல்கலைக்கழகங்கள்... Reviewed by irumbuthirai on August 17, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம்: வெளியாகியது பெயர்ப் பட்டியல்:

August 17, 2020


நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இவ்வாறு நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை  தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையதளத்திற்கு சென்று குறித்த பெயர் பட்டியலை பார்வையிடலாம். 
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் குறித்த இணைய தளத்திற்கு செல்லலாம்.

அ.த.தி.
பட்டதாரி நியமனம்: வெளியாகியது பெயர்ப் பட்டியல்: பட்டதாரி நியமனம்: வெளியாகியது பெயர்ப் பட்டியல்: Reviewed by irumbuthirai on August 17, 2020 Rating: 5

மீண்டும் வந்தது சேனா!

August 16, 2020


- Fayas M Fareed.
பதுளை பாசறை மெடிகஹதென்ன பகுதியில் மீண்டும் சேனா படைப்புழுக்கள் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 
கடந்த வருடம் பல இடங்களில் பரவி பயிர்கள் நாசமகின. இந்நிலையில் மீண்டும் மேற்படி பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்புள்ள பகுதியில் இந்த படைப்புழுக்கள்  இனம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் இது உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மீண்டும் பரவி பல்லாயிரம் ஏக்கர் விவசாயங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் வந்தது சேனா! மீண்டும் வந்தது சேனா! Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

தலதா மாளிகையின் பதவியேற்பும்... இலங்கையில் பரபரப்பான அரசியலும்....

August 16, 2020


- A.F. Fayas.
புதிய அரசின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வு கடந்த புதன் கிழமை கண்டி வரலாற்று சிறப்பு மிக்க மகுல் மடுவவில் நடந்தது. 
அரச ஆட்சியின் பின்னர் அங்கே சத்தியப்பிரமாணம் நிகழ்வது இதுவே முதல் முறை. எனவே, அரச தரப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த எல்லா உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக எல்லோரும் அதில் பங்கு பற்றிய அதே நேரம் ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தமக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து முண்டியடித்ததை காணக்கிடைத்தது. 
அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உட்பிரவேசிக்கும் போதே ஒரு கோவை வழங்கப்பட்டது. அதில் அவர் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அவசியமான ஆவணங்கள் காணப்பட்டன. அவற்றை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அவர்களை சத்தியப்பிரமாணம் செய்பவர்களுக்காக ஒத்துக்கப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர். தமக்கும் ஏதேனும் அமைச்சு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருந்த பல சிரேஷ்ட உறுப்பினர்கள் தமக்கு கோவை தேடியத்தையும், அதிகாரிகளிடம் விசாரித்து பின்னர் மீண்டும் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூட விசாரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இதனால் தமது அபிலாஷைகள் நிறைவேறாத அதிருப்தியுடனே பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளே நுழைந்தனர். 
ஒரு சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர்களுக்கு ஒத்துக்கப்பட்டிருந்த இடத்தில் போய் அமர்ந்து பின்னர் பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அவரை அப்புறப்படுத்தினர். இதனால் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் 

பின் வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. விழாவிற்கு வந்த எஸ்.பி திஸாநாயக்கவிற்கு ஒரு கோவை வழங்கப்பட்டது. அவர் அதை எடுத்துக்கொண்டு போய் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தது குறைந்த பட்சம் இராஜாங்க அமைச்சாவது இருக்கும் என்ற நம்பிக்கையிலாகும். எனினும் அவருக்கு கிடைத்தது பெரும்பாலும் புதிய உறுப்பினர்களுக்கு பகிரப்பட்ட மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியாகும். முக்கியமாக ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேம்ஜெயந்த, டிலான் பெரேரா, ரஞ்சித் சியபலாபிடிய, சந்திம வீரக்கொடி போன்றோர் பின் வரிசைகளில் அமர்ந்திருந்தனர். 
 மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் முதலில் வழங்கப்பட்டன. பின்னர் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. விமலவீர திஸாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் உடனடியாகவே வெளியேறிச் சென்றதாகவும் தகவல் உள்ளது. லொஹான் ரத்வத்தே மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகிய இருவரும், விமல வீரதிஸாநாயக்கவும் கூட்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கூட நிற்காமல் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அதே போன்று விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஒத்துக்கப்பட்டிருந்தது. அதில் அதிருப்தியடைந்த அவர் விழாவில் பங்கேற்காமலே திரும்பிச் சென்றார். 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 4 கேபினட் அமைச்சுக்களையும், 4 இராஜாங்க அல்லது பிரதி அமைச்சுக்களையும் வேண்டி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அவர்களுக்கு 2 கேபினட் அமைச்சுக்களையும், 3 இராஜாங்க அமைச்சுக்களையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு இராஜாங்க அமைச்சே கிடைக்கப் பெற்றது. இது தொடர்பில் அவரும் திருப்தியுடன் இல்லை என்றே கூறப்படுகிறது. 
மைத்ரிக்கும் கேபினட் அமைச்சு ஒன்று கோரப்பட்டிருந்தது. எனினும் செவ்வாய்க்கிழமை ஆகும் போது அமைச்சர் பட்டியலில் அவர் சேர்க்கப்படவில்லை என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. பின்னர் வெளியான தகவல்களின் படி அவர் அமைச்சுப் பதவி வேண்டாம் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது. 
அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் வேகமாக பேசப்படும் நிலையில் நிறுத்தப்படும் யாப்பில் புதிதாக உருவாக்கப்படும் பதவி ஒன்று அவருக்கு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 
எது எப்படியோ அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் பற்கோவிலின் எண்கோண மண்டபத்தின் முன்னின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் பற்கோயிலுக்கு கூட்டாக சென்று ஆசிர்வாதம் பெற்றதுடன் கண்டியில் உள்ள பிரதான பெளத்த பீட தலைவர்களான மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமஞ்ஞ பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். ஜனாதிபதி, பிரதம கெட்டம்பெ விகாரைக்கும் சென்றனர். இவற்றுக்கிடையே சகலருக்கும் கண்டி ஜனாதிபதி மாளிகையில் மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
எப்படியோ பல வாத விவாதங்கள், திருப்தி அதிருப்திகள் மத்தியில் 8 ஆவது பாராளுமன்ற தேர்தலின் பின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் நிறைவுக்கு வந்தது. திங்கட்கிழமைக்கு முன்னர் கடமையை பொறுப்பேற்க வேண்டும் என்று சகலருக்கும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அடுத்த நாளே பலர் தமது கடமைகளை பொறுபோற்றனர். 
சுற்றுலா அமைச்சர் காலை 6.15 க்கு கடமையேற்றார். அவரின் இராஜாங்க அமைச்சர் டி.வி சானக வேறு வழியின்றி அப்போது இணைந்து கொண்டார். ஜி.எல்.பீரிஸ் இசுருபாயவில் கடமையை பொறுப்பேற்ற போது அவருக்கு முன் கல்வியமைச்சராக இருந்த டலஸ் அலஹபெருமவும் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட டலஸ் நேரடியாக தனது அமைச்சில் சென்று கடமையை பொறுப்பேற்றது தனக்கே உரிய பாணியில். ஆம் எல்லோரும் உறவினர் நண்பர்கள் சூழ கடமை ஏற்கும் போது தனியாக சென்று கடமையை ஏற்றுக கொண்டார். 
அரசியலமைப்பின் 19 ஆம் சீர்திருத்தம் கடந்த தேர்தலில் மிகப் பெரிய பேசு பொருளானது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று அதை இரத்து செய்வோம் என அரசின் முன்னணி தலைவர்கள் எல்லோருமாற் போல் கூறினார். 
தற்போது நீதியமைச்சர் கெளரவ அலி சப்ரி அவர்களின் கூற்றின் படி அது இரத்து செய்யப்பட மாட்டாது என்றே கருத முடிகிறது. இவ்விடயத்தில் அரசினால் 3 நடைமுறைகளை பின்பற்றி நடைவடிக்கைகளை முன்னெடுக்கலாம். 
1. பூரணமாக இரத்து செய்வது. இதன் மூலம் 18 ஆம் சீர்திருத்தம் மீண்டும் வலுவுள்ளதாக மாறும். 
2. புதிதாக சில சீர்திருத்தங்களை கொண்ட 20 ஆம் சீர்திருத்த சட்டத்தை கொண்டு வருதல். 
3. பூரணமாக புதிய யாப்பு ஒன்றை வரைதல். 
இதில் 3 ஆவது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதற்கு காலம் தேவைப்படும். ஜனாதிபதி பதவிக்காலம், பதவி வகிக்க கூடிய முறைகள் மாற்றப்பட மாட்டாது என்று நீதியமைச்சர் சொல்வதை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் 20 ஆம் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் சாத்தியமே மிக அதிகம். 
எதிர்க்கட்சிகளின் தேசியப்பட்டியல் விவகாரம் கடந்த வார அரசியல் அரங்கில் சூடு பிடித்த மற்றோரு விவகாரமாகும். இதில் ஒரு ஆசனம் பெற்ற ஐதேக தலைமைச் சண்டையில் யார் என்று தீர்மானிக்க கூட்டம் கூடுவதும் களைவதுமாக உள்ளது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்ட அம்பாறைக்கு அதை வழங்க தீர்மானம் மேற்கொள்ள, அது தனக்கு வேண்டும் என்று மாவை. சேனாதிராஜா தரப்பு சொல்ல, பெண் பிரதிநிதித்துவம் என்று மறைந்த பா.உ. ரவிராஜின் மனைவிக்கு என்று இன்னொரு தரப்பு சொல்ல கடைசியில் சுமந்திரனின் ஆதிக்கம் வென்றது. ஆசனம் அம்பாறைக்கு கிடைத்தது. 
தேசிய மக்கள் சக்தி எவ்வித சிக்கலும் இன்றி தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபான்மை கட்சிகள் ஆசனத்திற்காக கொடி பிடிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே, மாவட்ட ரீதியாக வெல்லப் போகும் ஆசனங்களை ஓரளவு கணித்த தலைமை அவ்வாறு வெல்லும் போது சில முக்கிய தலைமைகள் தோல்வி கண்டு விடாதிருக்க அவர்களை தேசிய பட்டியலில் இட்டு வைத்திருந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் மத்துமபண்டார, எரான் விக்ரமரத்ன போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களோடு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் க்கும் பதவி கொடுப்பது அவர்கள் தேவையாக இருந்தது. 
மறுபுறம் கூட்டணிக்கு அதிக வாக்குகளை ஈட்டிக்கொடுத்த கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலமுகா, அஇமகா போன்றவை எம்பி சீட் ஐ எதிர்பார்த்து இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு வழங்கினால் மற்றவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற நிலை. மூவருக்கும் வழங்கினால் கட்சிக்கான மறுபுறம் ஆசாத் சாலி. எனவே பிரதான கட்சிக்கு ஒன்றும் இல்லாமல் போகும் நிலை இருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 
 இவற்றை விட சுவாரசியமாக சென்று கொண்டு இருப்பது இம்முறை முதல் முறையாக களம் இறங்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் நிலை. கடைசி வரை மொட்டுவில் இடம் கிடைக்கும் என காத்திருந்த சில அரசியல் செயற்பாட்டு பிக்குகள் "பிக்குகளுக்கு வேட்புமனு வழங்குவதில்லை" என்று அக்கட்சி எடுத்த முடிவின் காரணமாக போட்டியிட கட்சி இன்றிய நிலையில் இருந்தனர். அப்போது எப்போது எவராலோ பதிவு செய்யப்பட்டு இருந்த இக்கட்சியில் கேட்க இவர்கள் தீர்மானிக்கின்றனர். செயலாளராக தமக்கு வேண்டிய பிக்கு ஒருவரை போட்டுகொண்டு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை இலக்காக கொண்டு பிரசாரங்களை ஆரம்பித்த குறித்த கட்சிக்கு கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பின்னடைவை உருவாக்கியது. 
ஏனென்றால் அவர்களின் இரு முக்கிய தலைவர்களான அதுரலியே ரத்ன தேரர் மற்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரும் முறையே குறித்த மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எனினும் அந்த சவாலை எதிர்கொண்டு ஏற்கனவே முஸ்லீம் வெறுப்பு பிரசாரம் வாயிலாக தாம் பெற்றிருந்த பிரபல்யத்தை பயன்படுத்தி எல்லா மாவட்டங்களிலும் சிறுக சிறுக சேர்த்த வாக்குகளால் ஒரு ஆசனம் அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு ஞானசார தேரரை நியமிப்பதாக ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டிருந்த போதிலும் தனக்கு முன்னனுபவம் உள்ளமையால் தான் செல்வதே பொருத்தம் என்று ரத்ன தேரர் தேர்தலின் பின் பல்டி அடித்தார். இவர்கள் இருவரிடையே ஆசன சண்டை நடக்க மறுபுறம் செயலாளராக இருந்த வேந்தினிகம விமலரத்ன தேரர் தன் பெயரை தேசியப்பட்டியல் உறுப்பினராக இட்ட கடிதத்தை ஆணைக்குழுவிற்கு அனுப்பி விட்டு தலைமறைவானார். 
பின்னர் குறித்த கட்சியின் தலைவர் செயலாளரை பதவி நீக்கம் செய்ததாக அறிக்கை விட, தலைமறைவாக இருக்கும் பிக்கு ஊடகங்களுக்கு தொடர்பு கொண்டு விளக்கங்கள் கூற விடயம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. 
குறிப்பாக ஞானசார தேரரை பாராளுமன்றம் செல்ல விடாமல் தடுக்க ஒரு குழு இயங்குவதாகவும், அந்த சதியை முறையடிக்கவே தான் செல்வதாகவும், சதி முறையடிக்கப்பட்ட பின்னர் தான் விலகி ஞானசார தேரருக்கு குறித்த ஆசனத்தை வழங்குவதாக அவர் கூற, ஞானசார தேரர் மற்றும் ரத்ன தேரர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட, இன்னும் ஒரு வேட்பாளர் காலியில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வார இறுதிவரை சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு குறைவிருக்கவில்லை. 
 புதிய வாரம் ஐதேக தலைமை விவகாரம், ஐதேக தேசியப்பட்டியல் விவகாரம், புதிய அமைச்சர்களின் செயற்பாடுகள், எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரம் என்பன சூடு பிடிக்கும். அத்துடன் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற அரசியல் குழுக்களின் பிரதி தலைவர் பதவிகள் தெரிவு செய்யப்படவுள்ளன. 
எதிர்க்கட்சி தலைவர் சஜித் என்று உறுதியான போதிலும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பதவிக்கு உள்ளே ஓரளவு போட்டி நிலவுகிறது. உள்ளே தீர்க்கப்படாவிட்டால் அடுத்த வாரம் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாகலாம்.
A.F. Fayas.

தலதா மாளிகையின் பதவியேற்பும்... இலங்கையில் பரபரப்பான அரசியலும்.... தலதா மாளிகையின் பதவியேற்பும்... இலங்கையில் பரபரப்பான அரசியலும்.... Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.