இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிகள்: ஒத்துழைக்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை:

September 05, 2020

விளையாட்டுத் துறை அமைச்சில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் ராஜாங்க அமைச்சர் திருமதி சீதா அரம்பே பொலவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிப் பாடநெறிகளைப் பயில விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   
இதனூடாக உலகத் தொழிற்சந்தைக்கு ஏற்றவிதத்தில் பாடநெறிகளை தெரிவு செய்வதற்கு அவர்கள் வழிகாட்டப்படுவார்கள் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் குறிப்பிட்டார். 
இதுமட்டுமன்றி இளைஞர் யுவதிகளை தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பது இவ்விரு அமைச்சுக்களினதும் பொறுப்பாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிகள்: ஒத்துழைக்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை: இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிகள்: ஒத்துழைக்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை: Reviewed by irumbuthirai on September 05, 2020 Rating: 5

புதிய ஆசிரியர் நியமனத்துக்கான (சபரகமுவ மாகாணம்) போட்டிப் பரீட்சை - 2020 (விபரம் மற்றும் விண்ணப்பம் இணைப்பு)

September 05, 2020


சப்ரகமுவ மாகாணத்தின் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான இரண்டு வருட டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2020. 
இதில் 29 பாடங்கள் மற்றும் மாணவர் ஆலோசனை உட்பட 30 விடயங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
விண்ணப்ப முடிவு திகதி: 30-09-2020. 
கீழே உள்ள இரு லிங்குகளை கிளிக் செய்து விபரங்களை பார்வையிடுக.


விண்ணப்பத்தைப் பார்வையிட கீழே கிளிக் செய்க.

புதிய ஆசிரியர் நியமனத்துக்கான (சபரகமுவ மாகாணம்) போட்டிப் பரீட்சை - 2020 (விபரம் மற்றும் விண்ணப்பம் இணைப்பு) புதிய ஆசிரியர் நியமனத்துக்கான (சபரகமுவ மாகாணம்) போட்டிப் பரீட்சை - 2020 (விபரம் மற்றும் விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 05, 2020 Rating: 5

ADMISSION OF STUDENTS TO THE ADVANCED TECHNOLOGICAL INSTITUTES (SLIATE)- 2020 (With Details and Online Application)

September 04, 2020


Applications are called for Higher National Diploma (HND) programmes conducted by the Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) from those who have successfully completed the G.C.E.(A/L) Examination in 2019 or preceding years. 

Application Method: Online

Closing date: 06/10/2020 

Click the link below for more details: 


2019 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னராக க.பொ.த. உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி  செய்தவர்களிடமிருந்து
இலங்கை உயர் கல்வி தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் உயர் தேசிய டிப்ளோமா (HND) கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
விண்ணப்பிக்கும் முறை: Online
இது தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



ADMISSION OF STUDENTS TO THE ADVANCED TECHNOLOGICAL INSTITUTES (SLIATE)- 2020 (With Details and Online Application) ADMISSION OF STUDENTS TO THE ADVANCED TECHNOLOGICAL INSTITUTES (SLIATE)- 2020 (With Details and Online Application) Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

கல்வியியற் கல்லூரிக்கான புதிய அனுமதி - 2020 (மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு)

September 04, 2020

மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயில்வதற்காக 2018 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் 2020 
 Admission of Student Teachers to National Colleges of Education to follow a three year Pre-Service National Diploma in Teaching Course based on G.C.E. (A/ L) results in 2018 – 2020

Closing Date: 25-09-2020. 
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மும்மொழிகளிலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிடுக.
Click the link below for full details in three languages:

Gazette in three languages
கல்வியியற் கல்லூரிக்கான புதிய அனுமதி - 2020 (மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) கல்வியியற் கல்லூரிக்கான புதிய அனுமதி - 2020 (மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

04-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 04, 2020

04-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி - 2020, 
உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கான (ATIs) மாணவர்களின் அனுமதி 
உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

04-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 04-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு...

September 04, 2020

பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் எதிர்காலத்தில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு... பாடவிதானங்களில் செய்யப்படும் திருத்தங்கள்... மாவட்ட ரீதியாக கருத்தரங்கு... Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்...

September 04, 2020


நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இன்னும் 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்... புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்... Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 03, 2020
02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம்.  
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 03, 2020

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், தடைதாண்டல் பரீட்சை உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்..

September 03, 2020


அடுத்த வருடம் ஜனவரி மாதம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு  ஜனவரி முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும். 
க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி 1 முதல் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்.. ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்.. Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்...

September 01, 2020
எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர்  20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
(அ.த.தி)
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்... வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்... Reviewed by irumbuthirai on September 01, 2020 Rating: 5

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்..

September 01, 2020


வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதேவேளை தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். 
கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு. 
• எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும். 
• விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை. 
• சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல். 
• வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல். 
• விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.  

பயிற்சிக்காக தெரிவு செய்தல். 
• ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும். 
• விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 
• தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும். 
• சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும். 

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 
• 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. 10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும். குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு, தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
31.08.2020

(அ.த.தி.)
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்.. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on September 01, 2020 Rating: 5

26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

August 31, 2020


26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet decision
26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.