புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்...

September 04, 2020


நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இன்னும் 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்... புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்... Reviewed by irumbuthirai on September 04, 2020 Rating: 5

02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 03, 2020
02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம்.  
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 02-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 03, 2020

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், தடைதாண்டல் பரீட்சை உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 28-08-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்..

September 03, 2020


அடுத்த வருடம் ஜனவரி மாதம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு  ஜனவரி முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும். 
க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி 1 முதல் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்.. ஜனவரி 1 முதல் கற்றல் விடுமுறை பெறவிருக்கும் மாணவர்கள்.. Reviewed by irumbuthirai on September 03, 2020 Rating: 5

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்...

September 01, 2020
எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர்  20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
(அ.த.தி)
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்... வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தம்... Reviewed by irumbuthirai on September 01, 2020 Rating: 5

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்..

September 01, 2020


வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதேவேளை தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். 
கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு. 
• எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும். 
• விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை. 
• சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல். 
• வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல். 
• விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.  

பயிற்சிக்காக தெரிவு செய்தல். 
• ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும். 
• விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும். 
• தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும். 
• சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும். 

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 
• 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. 10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும். குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு, தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
31.08.2020

(அ.த.தி.)
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்.. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விஷேட அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on September 01, 2020 Rating: 5

26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

August 31, 2020


26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet decision
26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 26-08-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 31, 2020 Rating: 5

கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல..

August 30, 2020

கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை  தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர். 
இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில், குறிப்பிட்ட இந்த பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.
அ.த.தி.
கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல.. கண்டியில் உணரப்பட்டது நில நடுக்கம் அல்ல.. Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

Courses From Government Universities

August 30, 2020


Courses From Government Universities
See the full details below.
















Courses From Government Universities Courses From Government Universities Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University

August 30, 2020

Degree Programmes in the Sir John Kotalawela University.
Bank loan facility for free laptop.
Closing date: 25-09-2020.
See the full details below:


Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University Degree Programmes (with facility for free laptop): Sir John Kotalawela University Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா?

August 30, 2020


கடந்த பொதுத் தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கையில் இலங்கையின் அரசியல் புலத்தில் சூடு பிடித்த விவகாரம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான பிரச்சினை. 
கடந்த நல்லாட்சி அரசில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை, இந்தியா, ஜப்பான் கூட்டு வர்த்தக முயற்சியாக முன்னெடுக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையே சிக்கலுக்கான மூல காரணம். கொழும்பு துறைமுகம் பன்னெடுங்காலமாகவே கப்பல் போக்குவரத்திற்கு புகழ் பெற்றதாக காணப்பட்டது. இதன் ஆதிக்கத்திற்காக ஒரு காலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் சண்டையிட்டுக் கொண்டன. காலனித்துவ யுகத்தின் பின்னர் இத்துறைமுகம் தேசிய மயப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன. 
ஒரு காலம் உலகில் கொள்கலன் கையாள்கையில் உலகின் 7 ஆம் இடத்தில் இத்துறைமுகம் இருந்தது. காலப் போக்கில் பிராந்திய பொருளாதார நிலைமை மாற்றங்கள் இந்த நிலையில் மாற்றங்களைக் கொண்டு வந்த போதிலும் கொழும்பு துறைமுகமானது உலக அளவில் மிக முக்கிய துறைமுகமாக உள்ளது. கொள்கலன் கையாள்கையில் அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தின் அளவு விசாலமானதாக உள்ளது. ஜப்பானின் டோக்கியோ, இந்தியாவின் மும்பை துறைமுகங்களை விட அதிக கொள்கலன்களைக் கையாள்கிறது. 

#சீனாவின் ஆதிக்கம்# 
இவ்வாறான நிலையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இருக்கும் இலங்கையின் அமைவிடம் காரணமாக பல்வேறு சர்வதேச சக்திகள் இலங்கை துறைமுகங்களை இலக்கு வைத்து காய் நகர்த்தி வருகின்றன. 
அவ்வகையில் சீன அரசு இலங்கையின் ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி துறைமுகம் ஒன்றை அமைக்க கடன் வழங்கியதுடன், அந்த கடனை மீள செலுத்துவதில் உள்ள சிரமத்தை கருத்திற் கோண்டு, அதை 99 வருட குத்தகைக்கும் எடுத்துள்ளது. அத்துடன் கொழும்பு தெற்கு முனையத்தையும் குத்தகைக்கு பெற்றுக் கொண்டுள்ளது. 

#கிழக்கு முனையத்திற்காக இந்திய முயற்சி# 
இந்நிலையிலேயே இந்தியா கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த கடும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இணங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் துறைமுகத்திற்கு உரிமை கோர முடியாது. அதற்காக பிரிதொரு


ஒப்பந்தம் அவசியம் என்ற போதிலும் இராஜதந்திர அழுத்தங்கள் வாயிலாக அதனை அடைந்து கொள்ள இந்தியா பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கிறது. 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்லப் பிள்ளையான அதானி குழுமமே இதன் உரிமையை பெற முயன்றது. ஏற்கனவே, பல இந்திய உற்பத்திகள் கூட இலங்கையின் துறைமுகங்கள் வாயிலாகவே சர்வதேச சந்தைக்கு செல்லும் நிலையில் இந்திய அரசு இவ்வாறான ஒன்றுக்கு முயற்சிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 
இந்தப் பின்னணியிலேயே துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இரட்சத பழு தூக்கிகள் மூன்றும் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தன. துறைமுக ஊழியரின் கடும் எதிர்ப்பினால் அது தரையிறக்கப்பட்டது. 
அதன் பின்னர் அப்போதைய துறைமுகங்கள் அமைச்சர் திரு. ஜொன்ஸ்டன் பெர்னான்டோவினால் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு வழங்கி துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் கடன்களை நீக்க வேண்டும் என்று ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, மீண்டும் துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகம் இருக்கும் நிலை வரை சென்றது. 
இவ்வாறு பல வழிகளில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த முயன்ற இந்தியா அது சாத்தியமில்லாமல் போகும் நிலை உருவாகி வருவதை உணர்ந்துள்ளது. 

#இந்தியாவின் பிரமாண்ட மாற்றுத் திட்டம்# 
இந்நிலையில் இந்தியா அதன் மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதுவும் மிகப் பிரமாண்டமாக. இந்தியாவுக்கு சொந்தமான நிகோபார் தீவுகளில் பிரமாண்டமான துறைமுகம் ஒன்றை சுமார் 10 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். 
பழைய பட்டுப் பாதை வர்த்தகத்தை மீளமைத்தல், கடல் வழி பட்டுப் பாதை, இணைக்கப்பட்ட முத்துமாலை என்ற பெயர்களில் கப்பல், வர்த்தக ஏகாதிபத்தியத்தை பிராந்தியத்தில் நிலை நிறுத்தும் சீனாவின் திட்டத்திற்கு இது பாரிய சவாலாக மாறலாம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்தியாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் நிக்கோபார் தீவுகளில் தீர்வையற்ற சுதந்திர களஞ்சியசாலை வசதிகளுடன் கூடிய துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

#வங்கக்கடலில் இந்திய சீனப் பலப் பரீட்சை# 
உருவாகும் இந்த துறைமுகமானது கிழக்கு, மேற்கு கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகங்களாகக் காணப்படும் உலகின் மிகப் பெரிய துறைமுகமாக ஷங்ஹாய் போன்றவற்றிற்கு பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாத போதும் இலங்கையின் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, 
ஏற்கனவே, சீனா இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுகங்களை உருவாக்கி வங்காளவிரி குடாவில் இந்தியாவின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் ஒடுக்க முயற்சிக்கும் நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவின் மேற்படி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பெருமளவு குறைக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. 
உலக சனத்தொகையில் 36% ஐத் தன்னகத்தே கொண்ட மேற்படி இருநாடுகளுக்கும் இடையே இராணுவ, பொருளாதார ரீதியாக பல முரண்பாடுகள் உள்ளன. 
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லையில் சீன இராணுவ பிரவேசம் நிகழ்ந்ததாக தெரிவித்த இந்தியா பதில் தாக்குதல்களையும் நடாத்தி இருந்தது. அவ்வாறே சீனாவின் பல மென்பொருள்களுக்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்பட்டது. 
இவ்வாறான நிலையில் வளைகுடாவில் அதிகரித்து வரும் சீன செல்வாக்கை கட்டுப்படுத்துவது, இலங்கையில் துறைமுகங்களில் சீனா மேற்கொண்டுள்ள பொருளாதார முதலீடுகளை பலனற்றதாக ஆக்குவது, துறைமுகத்தை தர மறுக்கும் இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வருவது அல்லது துறைமுகத்திற்கு உணரக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற பாரிய திட்டங்களுடன் இந்தியா இந்த பிரமண்டமான திட்டத்திற்கு தயாராகி வருகிறது. 
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா? அது வங்காளவிரி குடா கடலில் இராணுவ சமநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?, இலங்கையின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற விடயங்களுக்கு காலம் பதில் சொல்லும். 
- fபயாஸ் MA fபரீட்.

இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா? இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா? Reviewed by irumbuthirai on August 30, 2020 Rating: 5

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி

August 29, 2020


02-09-2020 முதல் திசம்பர் வரையான காலப்பகுதிக்கான பாடசாலை நாட்காட்டியை இங்கு தருகிறோம்.

தவணை விடுமுறை, பரீட்சை திகதிகள் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி Reviewed by irumbuthirai on August 29, 2020 Rating: 5

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு:

August 28, 2020


ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். 
இம்முறை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி மீண்டும் ஜனவரி 4 ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: 2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 28, 2020 Rating: 5
Powered by Blogger.