பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக இரு விடயங்களை தவிர ஏனையவற்றில் அரசியல்வாதிகள் பங்களிக்க சந்தர்ப்பம்..
irumbuthirai
September 13, 2020
ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி விடயமும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக இரு விடயங்களை தவிர ஏனையவற்றில் அரசியல்வாதிகள் பங்களிக்க சந்தர்ப்பம்..
Reviewed by irumbuthirai
on
September 13, 2020
Rating: