பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை
irumbuthirai
September 16, 2020
Ministry of Education |
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் முக்கியஸ்தர்களுக்கும் அறிவித்துள்ளது.
அந்த வகையில் பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றொர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் போது இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரிற்கு பொறுப்பானதாகும்.
அதேவேளை மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆக கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனை
Reviewed by irumbuthirai
on
September 16, 2020
Rating: