ஒரு வருடமாக சிகிச்சையளித்து வந்த போலி பெண் வைத்தியர்: சருமத்தை வெள்ளை நிறமாக்கும் சிகிச்சையில் மாட்டிக்கொண்டார்:
irumbuthirai
September 18, 2020
வேறு ஒரு வைத்தியரின் பதிவு இலக்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரையுடன் சுமார் ஒரு வருடமாக மருந்து விநியோகித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளதாக மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் திக்வலை பிரதேசத்தில் 32 வயதான பெண்ணையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர். இவர் காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்காக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
அதேவேளை சருமத்தை வெள்ளை நிறமாக மாற்றுதல் தொடர்பான சிகிச்சை தொடர்பில் இணையதளத்தில் இவரின் விளம்பரத்தைப் பார்த்து விட்டு புத்தளத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்த உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னர் குறித்த வைத்தியர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அது தொடர்பில் ஆராய்ந்த போது அவர் போலி வைத்தியர் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மீகஹவத்த பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் காரணமாக பொலிசாரினால் குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்டு போலி பெண் வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலி முத்திரைகள் ஆவணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு வருடமாக சிகிச்சையளித்து வந்த போலி பெண் வைத்தியர்: சருமத்தை வெள்ளை நிறமாக்கும் சிகிச்சையில் மாட்டிக்கொண்டார்:
Reviewed by irumbuthirai
on
September 18, 2020
Rating: