மீண்டும் ஆரம்பமாகும் அரசின் உத்தியோகபூர்வ SMS சேவை
irumbuthirai
September 21, 2020
அரச தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும் துரிதமான செய்தி வேவையாக முன்னெடுக்கும் நோக்கிலான குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான வைபவம்
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமையில் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் வளவில் நாளை செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு
ஆரம்பமாகும்.
உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மொபிடெல் மற்றும் டயலொக் போன்ற
கையடக்க தொலைபேசி வலைப்பின்னல் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மொபிடெல் வலைப்பின்னலில் REG (space)என்று டைப் செய்து 2299 என்ற இலக்கத்திற்கும்,
டயலொக் வலைப்பின்னலில் info என்று டைப் செய்து 678 என்ற இலக்கத்திற்கும்
எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் உங்களது கையடக்க தொலைபேசியில் உடனடியாக பெற்றுக்கொள்ள
முடியும்.
(அ.த.தி.)
மீண்டும் ஆரம்பமாகும் அரசின் உத்தியோகபூர்வ SMS சேவை
Reviewed by irumbuthirai
on
September 21, 2020
Rating: