28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம்
irumbuthirai
September 24, 2020
28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் நேற்று ஒன்று கூடியது. 1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும்.
ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென தெரிவித்தார்.
28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம்
Reviewed by irumbuthirai
on
September 24, 2020
Rating: