விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ
irumbuthirai
September 27, 2020
வீதி சட்டங்களை மீறும் சாரதிகளுக்கான விசேட புள்ளி முறையை அமல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு குற்றங்களின் போதும் புள்ளிகள் குறைக்கப்பட்டு முழுமையாக புள்ளிகள் குறைக்கப்பட்டதும் ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும். மீண்டும் தகுதிகான் பரிசோதனைகளின் பின்னரே சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேவேளை 82 லட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ள நாட்டில் அதற்கேற்ப வீதி ஒழுங்கமைப்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை. கொழும்பிற்கு மாத்திரம் நாளாந்தம் 05 மார்க்கங்கள் மூலமாக சுமார் ஐந்து லட்சம் வாகனங்கள் வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ
Reviewed by irumbuthirai
on
September 27, 2020
Rating: