தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில்

September 27, 2020

விஷேட கருவிகளைக் கொண்டு தேங்காய்களை அளக்கும் செயற்பாட்டை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நாடுபூராகவும் மேற்கொண்டு வருவதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பான முன்னெடுப்புகளை மாவட்ட ரீதியாக மேற்கொள்ளும்படி அதிகார சபையின் தலைவர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் டி.எம்.எஸ். திசாநாயக்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இது தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில் 13 அங்குலத்தை விட கூடிய தேங்காய்கள் ரூ.70 ற்கும் 12 - 13 வரை அங்குலம் கொண்ட தேங்காய்கள் 65 ரூபாய்க்கும் 12 அங்குலத்தை விட குறைந்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி

September 27, 2020

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். 
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப் பட்டியலில் தனக்கு ஒன்றை வழங்குவதாக சொன்ன ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. எனவே ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விருப்பதாக அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.
சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா

September 27, 2020

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து பெட்ரோலியத்தை கொண்டுவந்து திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிரதேச சுகாதார வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் தொற்று நோயியல் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் டிலோஜன் தெரிவித்துள்ளார். 
தற்போது கப்பலை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் அதுவரை கப்பலை கடற்படையினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா   Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே

September 27, 2020

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பால்மா உற்பத்தியில் தன்னிறைவு கண்டு வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
எங்களது நாட்டில் சுமார் இரண்டரை இலட்சம் பால் தரும் மாடுகள் காணப்படுகின்றன. மொத்த பால் தேவையில் 35 வீதமானவை 
மாத்திரமே எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. நியூசிலாந்தில் இருந்து அதிகமாக பால்மாக்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கைதான். 
ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பு பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடு ஆகும். எனவே அந்த அடிப்படையில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம்

September 27, 2020

 


துபாயில் அமைந்துள்ள ICC தலைமையகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தலைமையகம் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
ICC ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை இந்நிகழ்வு ஐபிஎல் போட்டிகளுக்கு பாதகமாக அமையாது என சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி இந்தியாவின் ANI செய்தி வெளியிட்டுள்ளது.
Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ

September 27, 2020

வீதி சட்டங்களை மீறும் சாரதிகளுக்கான விசேட புள்ளி முறையை அமல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு குற்றங்களின் போதும் புள்ளிகள் குறைக்கப்பட்டு முழுமையாக புள்ளிகள் குறைக்கப்பட்டதும் ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும். மீண்டும் தகுதிகான் பரிசோதனைகளின் பின்னரே சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 
அதேவேளை 82 லட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ள நாட்டில் அதற்கேற்ப வீதி ஒழுங்கமைப்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை. கொழும்பிற்கு மாத்திரம் நாளாந்தம் 05 மார்க்கங்கள் மூலமாக சுமார் ஐந்து லட்சம் வாகனங்கள் வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses in the Government Universities

September 27, 2020

Courses in the Government Universities. 
Master Degree, 
External Degree, 
Diploma, 
Postgraduate Diploma, 
Advanced Certificate Courses. 
See the details below:






Courses in the Government Universities Courses in the Government Universities Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses @ NIBM Digital Campus

September 27, 2020

Online courses at the National Institute of Business Management (NIBM). 
See the details below:

Courses @ NIBM Digital Campus Courses @ NIBM Digital Campus Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

NAITA: Application for Evaluators

September 27, 2020

National Apprentice Industrial Training Authority (NAITA) 
Application for Evaluators. 
Closing date: 07-10-2020. 
See the details below:


NAITA: Application for Evaluators NAITA: Application for Evaluators Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 26, 2020

25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 25-09-2020 (In three languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், 
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.

September 26, 2020

நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் ஒருபோதும் தலையிடாதென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.  அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர். Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி

September 26, 2020

"2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் பில்கிஸ் என்ற 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார். 
கடந்த ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட 
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது. 
இதில் பில்கிஸ் உட்பட  நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். அவர்களுக்கு இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் ஆதரவாக இருந்தார்கள். 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்து, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர். 
ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது" என பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப் எழுதியுள்ளார். 
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி "அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா?

September 25, 2020

தான் பாடிய பாடல்களை அழியாத நினைவுகளாக தந்துவிட்டு பிரிந்து சென்றார் எஸ். பி. பாலசுப்ரமணியம் 
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இறக்கும்போது வயது 74. 
 ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவிட்-19 நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வந்தது. 
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடந்த 4ஆம் தேதி முடிவு வந்தது. 
இந்த நிலையில், 
இன்று (25.09.2020) காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இதய சுவாச நிபுணர்கள் கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
இரு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், 
எனது தந்தையின் உடல்நிலை மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. அவர் எங்களை எல்லாம் அடையாளம் கண்டுள்ளார். விசில் அடிக்கிறார், பாடலை ஹம்மிங் செய்கிறார், அவரது பிறந்த நாளை கூட கொண்டாடினோம் என்று தெரிவித்தார். 
கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், போராடி மாண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 
அவருக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை" என்று மருத்துவர் தெரிவித்தார். 
காற்றில் கலந்து வந்த பாடல்கள் மூலம் எல்லோர் உள்ளங்களிலும் இடம் பிடித்த அவரை காற்றில் கலந்து வந்த வைரஸ் கொண்டு சென்றது.
SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? Reviewed by irumbuthirai on September 25, 2020 Rating: 5
Powered by Blogger.