20ஐ தோற்கடிக்க SLFP ஐ சந்தித்த SJB
irumbuthirai
September 29, 2020
20ஆவது திருத்தத்தை தோற்கடிக்கும் முகமாக அதற்கெதிராக வாக்களிக்கும்படி கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இரண்டு மூன்று தடவைகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் தலைவரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது 20ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரான அம்சங்களை கொண்டு இருப்பதாகவும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் இவர்களால் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த உயர் தலைவர் எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்ததாகவும் இது தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20ஐ தோற்கடிக்க SLFP ஐ சந்தித்த SJB
Reviewed by irumbuthirai
on
September 29, 2020
Rating: