Vacancies: Sri Lanka Red Cross Society

October 01, 2020

Vacancies in the Sri Lanka Red Cross Society. 
Closing date: 09-10-2020.
See the details below:


Vacancies: Sri Lanka Red Cross Society Vacancies: Sri Lanka Red Cross Society Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Ltd.

October 01, 2020

Vacancies in the Lanka Sathosa Ltd. 
see the details below:

Vacancies: Lanka Sathosa Ltd. Vacancies: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்..

October 01, 2020

அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் இம்முறை சுமார் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Online முறை மூலம் கோரப்பட்டிருந்த இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும். இம்முறை சுமார் நான்காயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டீச்மோ)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ..

October 01, 2020

எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தபால் தினத்திற்கு அமைவாக தபால் வார நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5 - 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 
இம்முறை More than post என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தேசிய இலத்திரனியல் முகாமைத்துவ வாரத்தை இலங்கை மத்திய சுற்றாடல் சபையும் இலங்கை தபால் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. 
இந்த வார காலப்பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் வீடுகளில் உள்ள இலத்திரணியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார். 
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 
வீடுகளில் சேரும் இலத்திரணியல் கழிவுப்பொருட்களை தபால் வாரம் இடம் பெறும் காலப்பகுதியில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரையில் பொது மக்கள் தபால் அலுவலக வளவுக்கு அவற்றை கொண்டு வந்து வழங்க முடியும். 
இவ்வாறு கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை வைத்திருப்பதற்கு தபால் அலுவலக வளாகத்தில் இடவசதி இல்லையாயின் சம்மந்தப்பட்ட உள்ளுராட்சிமன்ற நிறுவனங்கள் அல்லது பிரதேச செயலகங்களுடன் இணைந்து அதற்கான இடத்தை தயார் செய்யுமாறு அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்ததார்.
இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ.. இலத்திரனியல் கழிவுப் பொருட்களை இனி தபால் நிலையங்களுக்கு வழங்கலாம்... அறிவித்தல் இதோ.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள்

September 30, 2020

இந்நாட்டின்  பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கும், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (NAITA) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும் என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Alaina B.Teplizt ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் எதிர்வரும் காலப்பகுதிகளில் புதிய அரசாங்கத்தினால் கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தர முடியும் என்பதனையும், ஒத்துழைப்பு அவசியமாகும் துறைகள் பற்றிய தகவல்களை அதற்கென பெற்றுத் தருமாறும் இதன் போது தூதுவர் மேலும் தெரிவித்தார்.
ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள் ஆங்கிலக் கல்வி உட்பட இலங்கையின் கல்வி கட்டமைப்புக்கு அமெரிக்காவின் உதவிகள் Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்..

September 30, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை மறுதினம் (02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 
இன்று (30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன 20க்கு எதிரான மனுக்கள்.. Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு:

September 30, 2020

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
நேற்றிரவு (29) ரத்மலானையில் இடம்பெற்ற குறித்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி இவ்வாறு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
தான் எந்த வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் எனவும், எவருக்கும் அச்சமடையப் போவதில்லை எனவும் இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர், தெரிவித்தார்.
சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு: சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு: Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை

September 30, 2020

அனர்த்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
இந்த நடைமுறையின் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் விடயங்களைக் கண்டறிவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விஷேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. 
அண்மையில் கண்டி, பூவெலிகடயில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டிடங்கள் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அனுமதியைப் பெற்ற கட்டிடங்கள் என அடையாளம் காணப்படிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

மாடறுப்பு தடை ஏன்? (அமைச்சரவை தீர்மானம் இணைப்பு)

September 30, 2020

பசு வதையை தடை செய்யும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை கீழே காணலாம். 

இலங்கையில் பசு வதையை தடை செய்தல் 

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். 
பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் 
ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 • பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல். 
 • பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 
 • விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 
 • இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்
மாடறுப்பு தடை ஏன்? (அமைச்சரவை தீர்மானம் இணைப்பு) மாடறுப்பு தடை ஏன்?  (அமைச்சரவை தீர்மானம் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

28-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 30, 2020

28-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
28-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 28-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

கொங்கோ, அங்கோலா போன்ற நாடுகளின் தரத்திற்கு இறங்கிய இலங்கை

September 29, 2020

உலக பிரபல நிறுவனமான மூட்ஸ் அமைப்பு இலங்கையின் பொருளாதார நிலையை வைத்து அதனை கீழ் நிலைக்கு பட்டியல்படுத்தியுள்ளது. 
B2 தரத்திலிருந்து Caal என்ற தரத்திற்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களாக மிகவும் மந்தமான பொருளாதார மறுசீரமைப்பு, வரவு செலவு திட்ட பற்றாக்குறை, மோசமான நிறுவன செயற்பாடுகள் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
அந்த அடிப்படையில் கொங்கோ, அங்கோலா, ஈராக், மாலி, கெபோன், பாபடோஸ் போன்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளளடக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் நிதியமைச்சு தெரிவிக்கையில் இவ்வாறு தரம் குறைக்கப்பட்டது வருத்தத்திற்குரிய அம்சம். இருந்தாலும் இதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
கொங்கோ, அங்கோலா போன்ற நாடுகளின் தரத்திற்கு இறங்கிய இலங்கை கொங்கோ, அங்கோலா போன்ற நாடுகளின் தரத்திற்கு இறங்கிய இலங்கை  Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5

ஒருவருக்கு பெற முடியுமான அதிகூடிய சிம் அட்டைகள்...

September 29, 2020

ஒருவருக்கு ஆகக் கூடுதலாக 05 சிம் அட்டைகளுக்கு மேல் பெற முடியாத வகையில் பாதுகாப்பு முறையை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 வேறு நபர்களின் பெயர்களில் எடுக்கப்பட்ட சிம் அட்டைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கை ஒன்றின் போது சிம் அட்டைகளை கொள்வனவு விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு நபர்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டை பிரதிகளை வைத்திருந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)
ஒருவருக்கு பெற முடியுமான அதிகூடிய சிம் அட்டைகள்... ஒருவருக்கு பெற முடியுமான அதிகூடிய சிம் அட்டைகள்... Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5

கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல்

September 29, 2020

கடந்த 20ஆம் திகதி அதிகாலை கண்டி, பூவெலிக்கடை பகுதியில் உடைந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடத்தின் உரிமையாளரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கது. 
மேற்படி உரிமையாளர் இன்று காலை கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
அனுர லேவ்கே என்ற பெயருடைய மேற்படி உரிமையாளர் விகாரை ஒன்றின் முன்னாள் தியவதனே நிலமே பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)
கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல் கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல் Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5
Powered by Blogger.