பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல்

October 05, 2020

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாக வழங்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பரீட்சை திணைக்களத்திற்கு வரும் பொது மக்கள் கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
மீண்டும் அறிவிக்கும் வரையில் திணைக்களத்தினால் ஒரு நாள் 
மற்றும் வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

October 05, 2020

உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டை களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பின் அதனை அவசரமாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் S. பிரணவதாசன் தெரிவித்துள்ளார். 
இதேபோன்று அனுமதி அட்டை இதுவரை கிடைக்கப் பெறாத மாணவர்கள் 
அதிபர் மூலமாக அவசரமாக அறிவிக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. 
தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இதற்கான அனுமதி அட்டை இன்றைய தினத்திற்குள் (05) கிடைக்கவில்லையாயின் www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்கள தளத்தில் தரவிறக்கம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும்

October 05, 2020

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
இதனையடுத்து நடைபெற்ற அதிரடி நிகழ்வுகள் வருமாறு: 
  • திவுலபிடிய, மினுவங்கொடை, வெயாங்கொட போன்ற பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு. 
  • நாட்டிலுள்ள சகல அரச, தனியார், கத்தோலிக்க மற்றும் சர்வதேச பாடசாலைகளும் திங்கள் (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடல். 
  • கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை. 
  • அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி வேண்டுகோள். 
  • மகர சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சிறை கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை. 
  •  களனி பல்கலைக்கழகம், நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் கம்பஹாவில் உள்ள விக்ரமராச்சி ஆயுர்வேத நிறுவனம் திங்கள் (05) முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவிப்பு. 
  • திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் உள்ள இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இலங்கை இராணுவம் அறிவிப்பு. 
  • சகல பாலர் பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடல்.
  •  
  • உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கை கேட்பவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என அறிவிப்பு. 
  • அரச நிறுவனங்களில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்களுக்கான தினம் இந்த வாரம் இடம்பெறமாட்டாது. 
  • பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என புகையிரத திணைக்களம் அறிவிப்பு. 
  • திவுலபிடிய பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று என அறிவிக்கப்பட்டு IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு. 
  • திவுலபிடிய பெண் பணிபுரிந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 1600 பேருக்கு திங்கட்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள திட்டம். 
  • மதரஸாக்களில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள். மற்றும் குர்ஆன் மத்ரஸா, ஹிப்ல் மத்ரஸா, பகுதிநேர மத்ரஸா, மக்தப் மற்றும் அஹதியா பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடல். 
  • ஊரடங்கு பிரதேசங்களில் வசிக்கும் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு.
  • Irumbuthirainews.
திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும் திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும் Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

Vacancy: American Embassy, Colombo.

October 03, 2020

Vacancy in the American Embassy, Colombo. 
Closing date: 06-10-2020. 
See details below:


Vacancy: American Embassy, Colombo. Vacancy: American Embassy, Colombo. Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Social Security Board

October 03, 2020

Vacancies in the Sri Lanka Social Security Board. 
Closing date: 12-10-2020. 
See the details below.


hy
Vacancies: Sri Lanka Social Security Board Vacancies: Sri Lanka Social Security Board Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: University of Kelaniya

October 03, 2020

Vacancies in the University of Kelaniya. 
Closing date: 15-10-2020. 
See the details below:

Vacancies: University of Kelaniya Vacancies: University of Kelaniya Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT)

October 03, 2020

Vacancies in the Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
See the details below:



Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Vacancies: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்

October 03, 2020

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
நேற்று (02) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த ஊடகப்பேச்சாளர் அவரின் விடுதலை எந்தவித அரசியல் 
பின்னணியும் கொண்டது அல்ல என தெரிவித்தார். 
மேலும் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடையும். இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் சுமார் 100 பேரை தடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 
ரிப்கான் பதியுதீன் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ் றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன

October 03, 2020

நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் இன்னும் 5 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம். 2025-ஆகும் பொழுது இந்த முழுக் கடனையும் செலுத்தி முடிக்கலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 நாட்டின் கடனை எவ்வாறு தீர்க்கலாம் என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. அந்த அடிப்படையில் 
முழுக் கடனையும் 2025-ஆகும் பொழுது இவ்வாறு செலுத்தி முடிக்கலாம். இவ்வாறு கஞ்சா பயிரிட்டால் அதற்கு பாதுகாப்பு படை மற்றும் STF என்போரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்தலாம். அதன் பின்னர் எங்களுக்கு முடியும் அதிலிருந்து தேவையான எண்ணை மற்றும் மருந்து என்பவற்றை வேறுபடுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் வருமானத்தை பெறலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் முழுக் கடனையும் கஞ்சா பயிரிடுவதன் மூலம் 05 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம் - அமைச்சர் பந்துல குணவர்தன  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம்

October 03, 2020

அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் எனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராயும் முகமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 
இந்த நிகழ்வில் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் கலந்து கொண்டார். மாறாக அரசுடன் இணைவதற்கான நடவடிக்கையோ அல்லது 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கையோ அல்ல என்பதை எங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Red Cross Society

October 01, 2020

Vacancies in the Sri Lanka Red Cross Society. 
Closing date: 09-10-2020.
See the details below:


Vacancies: Sri Lanka Red Cross Society Vacancies: Sri Lanka Red Cross Society Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Ltd.

October 01, 2020

Vacancies in the Lanka Sathosa Ltd. 
see the details below:

Vacancies: Lanka Sathosa Ltd. Vacancies: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்..

October 01, 2020

அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் இம்முறை சுமார் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Online முறை மூலம் கோரப்பட்டிருந்த இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும். இம்முறை சுமார் நான்காயிரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டீச்மோ)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏராளமான விண்ணப்பங்கள்.. Reviewed by irumbuthirai on October 01, 2020 Rating: 5
Powered by Blogger.