தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்
irumbuthirai
October 12, 2020
களுத்துறை, இலங்கை போலீஸ் கல்லூரியில் தனிமைப்படுத்தலில் இருந்த மினுவாங்கொடை போலீஸ் நிலையத்தில் போலீஸ் சாரதியாக கடமையாற்றிய நபர் கடந்த வெள்ளி இரவு தப்பிச் சென்றுள்ளார்.
பொலீஸ் கல்லூரி வளாகத்திலிருந்து களுத்துறைக்கு முற்சக்கர வண்டியில் சென்ற இவர் மதுபானம் அருந்தி களுத்துறை, கமகொட, ரஜவத்த பிரதேச வீடொன்றுக்கு அருகாமையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்ட வீட்டார்
களுத்துறை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்.
அங்கு வந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதும் தான் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
பின்னர் இவரையும் இவரை அழைத்து வரச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர், போலீஸ் கான்ஸ்டபிள், சாரதி ஆகியோர் போலீஸ் கல்லூரிக்கே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தகவல் வழங்கிய குறித்த வீட்டார் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர் சென்ற முற்சக்கர வண்டி சாரதியை போலீசார் தேடுகின்றனர்.
இதேவேளை குறித்த போலீஸ் நபர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
நிவ்ஸ்வய.
தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்
Reviewed by irumbuthirai
on
October 12, 2020
Rating: