கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்...

October 15, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. 
அதாவது சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த 3ம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு 
ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 
அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... கடும் தண்டனை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்கள்... Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்:

October 15, 2020

கம்பஹா மற்றும் கொழும்பில் இரு வெவ்வேறு பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சையின் போது Smart Watch பயன்படுத்தியுள்ளார். 
இதைக் கண்ட மேற்பார்வையாளர் அதை பறிமுதல் செய்ததோடு 
மீண்டும் பரீட்சை எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை பொலிஸில் பதிவு செய்துள்ளதாகவும் அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மற்றுமொரு சம்பவத்தில் கொழும்பில் பரீட்சார்த்தி ஒருவர் தனது Smart Phone மூலம் தனது வினாத்தாளை படம்பிடித்து இன்னொருவருக்கு அனுப்பும் பொழுது பிடிபட்டுள்ளார். 
 இந்த தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: கம்பஹா மற்றும் கொழும்பில் உயர்தர பரீட்சார்த்திகள் செய்த வேலை: விசாரணைகள் ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்...

October 14, 2020

பாடசாலை மாணவர்களின் ஊடகத்துறை கல்வியை மேம்படுத்துவதற்காக மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு 25 வெகுஜன ஊடக பாடசாலைகள் நாடு முழுவதிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி. சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்றது. 
இதன் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 
பாடசாலைக் கல்வியின் போது மாணவர்களுக்கு 
வெகுஜன ஊடகம் தொடர்பான தெளிவு மற்றும் ஊடக நெறிமுறைகள் தொடர்பாக உரிய கல்வியை வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாவட்ட மட்டத்தில் ஊடக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கை கேந்திரமாகக் கொண்டு யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக கல்வி அறிவை மேம்படுத்துவதை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
மேலும் அரசாங்க தகவல் திணைக்களம் குறுஞ்செய்தி சேவையைப் போன்று சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு மேலதிகமாக ஏனைய ஊடக நிறுவனங்களை தொடர்புபடுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அ.த.தி.
நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... நாடு முழுவதிலும் 25 ஊடக பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை...

October 14, 2020

 


அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் மத்துகம - கொழும்பு பஸ் வண்டியின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் அதன் உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ஜி. டி. லயனல் தெரிவித்துள்ளார். 
இவர்கள் மூவரும் தாமாகவே முன்வந்து நாகொட வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
அதேபோன்று இந்த பஸ் வண்டியில் பயணித்த 
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதேபோன்று நடத்துனரின் மனைவி கடமை புரியும் மத்துகமையில் அமைந்துள்ள தனியார் வங்கி தனது சுய விருப்பில் இன்று (14) கொடுக்கல்-வாங்கல்களுக்காக மூடப்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... அதிவேக நெடுஞ்சாலை பஸ் உரிமையாளர், ஓட்டுனர், நடத்துனர்க்கும் கொரோனா: பயணித்த தாதியின் நிலை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை:

October 14, 2020

Online முறையில் பொது மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார். 
தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தனது அமைச்சுக்கு வருவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் சந்திப்புக்காக பொதுமக்கள் தமது பிரச்சினையை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி ஆகும் பொழுது குறித்த ஒன் லைன் முறையில் தெரிவிக்க வேண்டும். 
இதற்காக கீழே உள்ள லிங்கை பயன்படுத்தலாம்.
Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு

October 14, 2020

2019ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது. 
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்னவினால் குறித்த காசோலை பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது. 
2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5,993 பிள்ளைகளுக்காக முதல் கட்டமாக புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்நிதி மக்கள் வங்கிக்கு வழங்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொழில் அமைச்சராக விளங்கிய 1994ஆம் ஆண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
அதற்கேற்ப 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய ஆண்டுதோறும் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகள் 9 ஆயிரம் பேருக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 இந்த வேலைத்திட்டமானது மக்கள் வங்கியினூடாக 
செயற்படுத்தப்படுவதுடன், மக்கள் வங்கியினால் புலமைப்பரில் பெறும் பிள்ளைகளுக்காக குறித்த நிதி சிசு உதான சேமிப்பு கணக்கில் வைப்பிலிடப்படும். புலமைப்பரிசில் பெறும் அனைத்து பிள்ளைகளுக்கும் கணக்கு திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் வங்கியினால் மலலசேகர சிங்கள ஃ ஆங்கில அகராதியொன்று பரிசளிக்கப்படுவதுடன், சிசு உதான கணக்கிற்கு வழங்கப்படும் சாதாரண வட்டி விகிதத்தினை விட அதிக சதவீதம் இந்த கணக்குகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும். 
இந்த நிகழ்வில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்ன மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணம் பிரதமரிடம் கையளிப்பு Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு...

October 14, 2020

அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான பத்திரிகை செய்தியை இங்கு தருகிறோம்.

-காலைக்கதிர் 14-10-2020.
பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு... பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைப்பு... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை...

October 14, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 9ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிள் சேவையாற்றக்கூடிய ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் புதுப்பித்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று (12) மாலை 6.30 மணி அளவில் மீண்டும் குறித்த 2 கிராமங்கள் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மன்னாரின் பல பாகங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 
  • ஹொரண வைத்தியசாலையில் மேலும் 5 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 வைத்தியர்களும் அடங்குவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறான சகல தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஹொரண வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது. 41 பேர் முதல் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே தற்போதைய நிலையில் ஹொரண வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இல்லை´ என ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவிப்பு. 

  • மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்ததாக செய்தி வெளியானது. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக உயிரிழந்த, வெளிநாட்டில் பணியாற்றிய இலங்கை தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்பீடுகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உயிரிழந்த 14 பேர் சம்பந்தமான ஆவணங்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உயிரிழந்த 14 தொழிலாளர்களில் 12 பேர் ஆண்கள் என்பதோடு இருவர் பெண்களாவர். அவர்களில் ஒன்பது பேர் சவுதி அரேபியாவிலும், நான்கு பேர் குவைத்திலும், ஒருவர் டுபாயிலும் உயிரிழந்துள்ளனர். 
  • கடந்த ஜூலை மாதம் மாலைத்தீவில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் நபரொருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கஹவத்தை வெல்லந்துர பிரதேசத்தை சேர்ந்த இவர் மீண்டும் மாலைத்தீவிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19க்கு மத்தியிலான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் பரிப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை வரி நீக்கப்பட்டது. 
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரிப்பு. இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இன்றைய தினம் (13) மேலும் 145 ஆல் அதிகரிப்பு.
  • Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை

October 14, 2020

 


விண்ணப்ப முடிவு திகதி: 23-10-2020. 
முழு விபரங்களை கீழே காணலாம்.



Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்:

October 14, 2020

இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற மாணவியொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை ஆம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான பத்திரிகை செய்தியை இங்கு தருகிறோம்.


-thinakaran 13.10.2020.
பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்: பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பிற்போடப்பட்ட பரீட்சைகள்

October 14, 2020

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் திட்டமிடப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு பின்னரே பரீட்சைகள் தொடர்பாக மீள அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படும் பரீட்சைகள் 
ஒரு வார கால முன்னறிவித்தலே இணையதளத்தில் அறிவிக்கப்படும். 
ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு, மீள்பதிவு, மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: teachmore
பிற்போடப்பட்ட பரீட்சைகள் பிற்போடப்பட்ட பரீட்சைகள் Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 13, 2020

12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை...

October 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 8ம் நாள் அதாவது திங்கட்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமானது. இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 362,824 மாணவர்கள்கள் தோற்றுகின்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிப்பு. 
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பானதுறை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாணவியும் இவரும் பல்கலைக்கழக விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கந்தான, நாகொட பகுதியில் உள்ள இலங்கை மின்சார (தனியார்) நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி அதிகாரி ஒருவரின் மகள் பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலையில் கடமையாற்றியதாக தெரிவிப்பு. 
  • தொழில் திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் செய்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் காரணமாக சேவைகளைப் பெற கொழும்பின் நாரஹன்பிட்டியவில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டே தொழில் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து சேவைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிப்பு. 

  • மன்னார் மாவட்டத்தில் நேற்று மூடப்பட்ட இரு கிராமங்களும் இன்று (12) மீண்டும் திறப்பு. 
  • சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முதலாவது பிசிஆர் பரிசோதனையில் இனங்காணப்பட்ட போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு. 
  • மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள ருகுணு பல்கலைகழக மாணவி ஒருவரின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாணவி மற்றும் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த 27 ஆம் திகதி குறித்த தந்தை மாணவியை பார்ப்பதற்காக விடுதிக்கு வருகை தந்ததாகவும் அவர் கந்தான பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிப்பு. 
  • ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு. 
  • தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, கொவிட் - 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை நாளை (13) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஶ்ரீலங்கன் சரக்கு பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 
  • தொம்பே, பூகொட பகுதியை சேர்ந்த ஆடை கைத்தொழிற்சாலை ஊழியரான பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • மினுவங்கொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்தது. அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4844 ஆக அதிகரித்தது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.