ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா?

October 16, 2020

கடந்த 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் இன்று (16) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கை பின்வருமாறு: 
 2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று காலை 9.30 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக, அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களின் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சுகாதாரப் பிரிவினால் இந்த உடகவியலாளர்களுக்கு விரைவாக அறிவிக்கப்படும். 
இருப்பினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனையின் பெறுபேறு கிடைக்கும் வரையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களும் வெளி சமூக தொடர்புகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில்; இருக்குமாறு ஆலோசனை வழங்கி சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஊடகயிலாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 
 இதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Ltd.

October 16, 2020

Vacancies in Lanka Sathosa Ltd. 
Closing date: 14 days from 11.10.2020. 
See the details below.

Source: Sunday Observer 11.10.2020.
Vacancies: Lanka Sathosa Ltd. Vacancies: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Courses: Government Universities

October 16, 2020

Courses from University of Peradeniya & University of Colombo.
See the details below:


Courses: Government Universities Courses: Government Universities Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Degree Courses: The Open University of Sri Lanka

October 16, 2020

Applications are invited for the following Degree Courses. 
Bachelor of Science Honours in Nursing.
Bachelor of Pharmacy Honours.
Bachelor of Medical Laboratory Science Honours.
Bachelor of Science Honours in Phsychology.
See the details below


Degree Courses: The Open University of Sri Lanka Degree Courses: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை...

October 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 11ம் நாள் அதாவது வியாழக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.  
  • கட்டுநாயக்க பொலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல். 
  • இன்று (15)  காலை 5 மணிக்கு உள்ள நிலவரப்படி மொத்தமாக இன்னும் 170 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கக் கூடிய இடம் இருப்பதாக Covid-19 ஒழிப்பு தேசிய மத்திய நிலையம் தெரிவிப்பு.
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • கொழும்பு மாநகர சபையின் பொது உதவிப் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு. 

  • களுத்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு.
  • நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களை எதிர்வரும் 31 வரைமூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம். 
  • ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை நாளை தினம் (16) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு அனுமதித்துள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது. இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத கால சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது இரண்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் கொரோனா பரவலானது இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என விஞ்ஞான ரீதியாக தெளிவாவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.  
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக நாட்டில் இன்றைய தினம் 74 பேருக்கு கொவிட்-19 உறுதியானது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக உயர்வு. அதற்கமைய இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5244 அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள்

October 16, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று (16) காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் 14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி...

October 16, 2020

நாட்டிலுள்ள சிறைக் கைதிகளுக்கு இன்று (16) முதல் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் இலவசமாக கதைப்பதற்கான வசதி வழங்கப்படவுள்ளது. 
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே சிறைச்சாலை திணைக்களத்துக்கு 
வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 ஸ்ரீலங்கா டெலிகொம்மிற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு இந்த இலவச தொலைபேசி சேவை வழங்கப்பட உள்ளது. 
தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கைதிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் முகமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி... இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்?

October 16, 2020

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் இலவச சீருடை இவ்வருடம் டிசம்பர் 31 க்கு முன் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இம்முறை 04 அரச நிறுவனங்களின் கீழ் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் மீட்டருக்கும் அதிகமான துணி விநியோகிக்கப்பட உள்ளது.
இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்? இலவச சீருடை பாடசாலைகளுக்கு எப்போது வரும்? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா?

October 16, 2020

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணை பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரியின் கணவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என திணைக்களம் நேற்று (15) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
குறித்த அதிகாரியின் கணவருக்கு செய்யப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? பரீட்சைத் திணைக்கள ஊழியரின் கணவருக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்?

October 16, 2020

2019 இல் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
 தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 
இந்த வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தாமதமாகும். இருப்பினும் அதை எப்போது வெளியிடுவது என இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 
கொரோனா நிலைமைகளினால் வெட்டுப்புள்ளிகளை தயாரிப்பது தாமதமானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தயார்: எப்போது வெளியிடப்படும்? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை...

October 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 10ம் நாள் அதாவது புதன்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது.37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • தங்குமிட விடுதிகளில் இருந்து பணிக்கு செல்பவர்கள் அங்குள்ள ஏனையவர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்க வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரல். 
  • கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதியளவு வைத்தியசாலை வசதி உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மத்துகம பகுதியை சேர்ந்த தாதிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 

  • கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒவ்வொரு கிளினிக் பிரிவிற்குமான தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அறிவித்தலை வெளியிட்டது. நோயாளர்கள் குறித்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு உரிய முறையில் சேவையைப் பெறலாம். 
  • கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாளை (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு. 
  • சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் நாளை (15) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 130 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

October 16, 2020

கொரோனா வைரஸ் பரவலை (Covid-19) தடுப்பதற்குரிய ஒழுங்கு விதிகள், சட்ட திட்டங்கள் என்பன அடங்கிய விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. 
ஒவ்வொரு சந்தர்ப்பங்கள், இடங்களிலும் எவ்வாறான ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றும் அதை மீறும் பட்சத்தில் எத்தகைய தண்டனை வழங்கப்படும் போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) வெளியானது கொரோனா விதிமுறைகளுக்கான விஷேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல்.

October 15, 2020

காலத்திற்கு காலம் உலகில் வல்லரசுகள் தோன்றி தன் ஆதிக்கத்தின் கீழ் ஏனைய நாடுகளை அடிமையாக்கி வைத்திருப்பது வாடிக்கை. 
மத்திய காலத்தின் பின்னர் உருவான காலனித்துவ யுகத்தில் ஸ்பெயின், போர்த்துக்கல் என ஆரம்பித்து பின்னர் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக பிரித்தானியா உருவானது வரலாறு. அமெரிக்க புரட்சியின் பின்னர் வீறுகொண்டெழுந்த அமெரிக்கா முதல் உலக யுத்தம் நிறைவடையும் போது பிரித்தானியாவுக்கு சமனான வல்லரசாய் மாறி இருந்தது. 
முதல் உலக யுத்தத்தில் பயங்கர அடி வாங்கி யுத்தத்தில் இருந்து விலகி, புரட்சி மூலம் சோஷலிச ராஜ்யமான உருவான சோவியத் ரஷ்யா 2ம் உலக உலக யுத்தம் நிறைவடையும் போது அமெரிக்காவுக்கு சமனான வல்லரசாய் பரிணாமம் கண்டது. ஆயுதம் , பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, விளையாட்டு என எல்லாத்துறையிலும் இரு நாடுகளும் சமபலத்துடன் திகழ்ந்து, 
1980 ஆம் தசாப்தத்தின் பிற்பகுதி, 90 களின் ஆரம்பத்தில் சோவியத் பல நாடுகளாக உடைந்த தகர்ந்து போனதுடன் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாய் உருவெடுத்தது. 
1990 களில் ஆட்சியில் கமியூனிசத்தை வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் லிபரல் கொள்கையும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த சீனா அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு வல்லரசாக உருவாகி உள்ளது. 
 
#சீனாவின் உத்தி# 
அமெரிக்கா தனது நலன்களுக்காக உலகம் பூராக இராணுவத் தளங்களை பேணி வருகிறது. CIA மூலம் பல்வேறு நாடுகளில் அரசியல் செய்தும் வருகிறது. அதன் மூலம் உலக அரங்கில் எல்லா நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்கிறது. 
ஆனால் சீனா சற்று வித்தியாசமாக 
இதே செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்று யுத்தம் மூட்டல், தலைவர்களை கொலை செய்தல், உள்நாட்டு சதிகளை உருவாக்கி தன் சொல் கேட்கும் பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கல் போன்றவாராக இல்லாமல் பொருளாதார நலன்களைக் கொண்டு நாடுகளை தம் வசப்படுத்தும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மூலதனப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி, கடன் சுமையில் சிக்க வைத்து, தன்னுடைய இலக்குகளை அடைந்து கொள்ளும் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது. 

 #இந்திய சீன முரண்பாடு# 
சீனாவை பொறுத்தவரை ஆசியாவில் சீனாவின் சவால் இந்தியா. சீனாவிற்கு நிகரான தொழிற்படையுடன் இருக்கும் உலகின் ஒரே நாடு. ஏற்கனவே, எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் யுத்தம் செய்தும் உள்ளன. மறுபுறம் திபெத் மீது சீனா உரிமை கொண்டாடுவதால் சீனாவை எதிர்க்கும் திபெத் மதகுரு தலாய்லாமா உட்பட பெரும் எண்ணிக்கையானோருக்கு இந்தியா அடைக்களம் வழங்கியும் உள்ளது. 
தெற்காசியா வலயத்தில் இந்தியா எப்போதும் பெரியண்ணன்தான். அதன் நலன்களுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் குட்டி வைக்க இந்த அண்ணன் பின்வாங்கியதில்லை. இலங்கையின் அமெரிக்க சார்பு கொள்கை காரணமாக குட்டிய பெரிய குட்டே இலங்கையின் உள்நாட்டு போரை தூண்டி விட்டமை. 
எனினும், இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் நிரந்தர எதிரி. ஒருபுறம் சீனாவும், இன்னொரு புறம் பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்க வலயத்தின் சண்டியனான இந்தியாவின் தெற்காசிய பலத்திற்கு சவாலாகவும், இந்து சமுத்திரத்தின் இந்திய நலன்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் சீனா வியூகம் அமைக்க ஆரம்பித்தது. 
ஏற்கனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் பாகிஸ்தானுடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்த சீனாவுக்கு, அபிவிருத்திக்கான மூலதன பற்றாக்குறையுடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்று உண்டியல் ஏந்தித் திரிந்த ஷேக் ஹசினாவும், மஹிந்த ராஜபக்ஷவும் நண்பர்களாகி போயினர். விளைவு பங்களாதேஷ், இலங்கை என்று இந்தியாவை சுற்றி தனது அரசியல், பொருளாதார, யுத்த மூலோபாய நலன்களை உருவாக்க ஆரம்பித்தது சீனா. 
எங்கே இலங்கையுடன் முரண்பட்டால் மேலும் சீனா பக்கம் இலங்கை சென்று விடுமோ என்று அஞ்சிய இந்தியா ஏட்டிக்குப் போட்டியாக முதலீடு செய்தும் பார்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு திரைக்கு பின்னால் இயங்கியும் பார்த்தது. சீனாவின் காய் நகர்த்தலுக்கு மத்தியில் எல்லாமே புஷ்வாணமாய் போனது. 

 #மூக்குடைபட்ட அமெரிக்கா# 
மறுபுறம் உலக அரங்கிலும் சீனா தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. டிரம்ப் போன்ற முன்யோசனை அற்ற தலைவர்கள் அதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட சிறுப்பிள்ளைத்தனமான நடத்தைகள் சீனாவை பாதிக்கவில்லை. 
இப்பின்னணியில் அத்திலாந்திக் கரையின் இருமுனைகளை இணைத்து ரஷ்யாவை கட்டுப்படுத்த நேட்டோவை உருவாக்கியது போல இந்துமாக் கடலின் இரு முனைகளை இணைத்து ஒரு இராணுவக் கூட்டை உருவாக்கி சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்தியப் பெருங்கடலின் இந்தியாவும், பசுபிக் எல்லையின் அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இணைந்து ஏனைய நாடுகளை இணைத்துக் கொண்டு முன்னெடுக்க இந்த திட்டம் தீட்டப்பட்டது. 
இதன் முதல் கூட்டம் கடந்த டிசம்பரில் புதுடில்லியில் மேற்படி 3 நாடுகளோடு அமெரிக்கவினதும் வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்கள் பங்குபற்றும் கூட்டமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்தியா சற்று பின்வாங்கியது. 
சீனாவில் ஆரம்பித்த கோவிட் 19 கொரோணா சீன பொருளாதாரத்தை சுழற்றிப் போடும் என்று இந்தியா கற்பனை பண்ணி இருக்கலாம். எனினும் மார்ச் ஆகும் போது கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது சீனா. குறிப்பாக வுஹான் நகர் தவிர வேறு இடங்களில் பாரிய தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க எல்லாம் செய்து கொண்டது சீனா. 
மறுபுறம் கோவிட் 19 இனால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும் வரை காத்த இந்தியா, அமெரிக்காவின் நிலை படுமோசமானது. ஏற்கனவே, 1964 ல் சீனாவுடன் யுத்தம் செய்து மூக்குடைபட்ட இந்தியா லடாக்கில் மீண்டும் அவமானப்பட்டது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வலுவாக உள்ள சீனாவுடன் மேலும் பகைக்க இந்தியா கொஞ்சம் தயக்கம் காட்டியது. 
 இன்னொரு புறம் அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, சீனாவுடன் மிக நெருங்கிய வர்த்தக தொடர்புகள் உண்டு. அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக உருவாகும் கூட்டு ஒன்றின் மூலம் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு தன்னுடைய இறைச்சி, பால் மற்றும் கனிம வளங்களுக்கான சந்தையை இழக்க அவுஸ்திரேலியா தயாராக இல்லை. 
ஜப்பானின் நிலையும் அதுவே. ஏனென்றால் உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 
இந்நிலையிலேயே குவார்ட் என்று அறியப்பட்ட மேற்படி நான்கு நாடுகளின் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று சொல்லிக் கொண்ட போதிலும் 4 நாடுகளினதும் வெளியுறவுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மட்டுமே பங்குபற்றினர். கூட்டத்தின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை கூட வெளியிட இவர்களால் முடியவில்லை. தனித்தனியான அறிக்கைகள் வெளிப்பட்டிருந்தன. 
 இன்னொரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்தை விட குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், டிரம்ப் தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஒத்துழைப்புக்களை விட பொருளாதார அழுத்தங்கள் மூலம் சீனாவை கட்டுப்படுத்தும் கொள்கையை செயற்படுத்தலாம் என்பதால் அவசரப்பட்டு இராணுவ கூட்டு ஒன்றுக்கு செல்வதை தவிர்ப்பதே நலம் என அந்த மூன்று நாடுகளும் கணக்குப் பண்ணி இருக்கலாம். அந்த அடிப்படையில் சீனாவுக்கு எதிராக பிராந்தியத்தின் 3 பெரிய பொருளாதார வல்லரசுகளையும் கொம்பு சீவி விட டிரம்ப் அரசு முயன்று தோல்வி கண்டுள்ளது என்றும் சொல்லலாம். 
எனினும், நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றால் இதே திட்டத்தை மீண்டும் தூசு தட்டி எடுக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. 

#இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்
இக்கூட்டம் நடந்த நேரத்திலேயே சீனாவின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தார். அது சர்வதேச அரங்கில் முக்கிய நிகழ்வாக நோக்கப்பட்டது. அவ்வாறே அந்த விஜயத்தின் பின்னர் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை ரூஹுனு மாகம்புற துறைமுகத்தில் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 
அதன் பின்னர் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ முன்னர் திட்டமிடப்படாத ஒரு பயணமாக இலங்கைக்கும் வருவார் என்ற தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, சீனா இலங்கைக்கு கடன் உதவி என்ற பெயரில் ஏமாற்றி வருகிறது என்ற அர்த்தம் தொனிக்கும் கருத்து ஒன்றை அமெரிக்க உயர் ஸ்தானிகர் கூறியும் இருந்தார். 
 கோவிட் 19 க்கு மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்க தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் அதே வேளை, கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள சீனா வளர்ச்சி இல்லாத போதிலும் நிலையாக நிற்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக அமெரிக்க, சீன அரசியல் வலுச் சமநிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். அத்தோடு கோவிட் 19 இந்திய பொருளாதாரத்தை அழிக்கலாம். 
ஆசிய அரசியல் அரங்கில் குறிப்பாக இந்து சமுத்திர அரசியலில் இந்தியாவை இலகுவாக விஞ்சும் சக்தியை சீனாவுக்கு வழங்கலாம். மேற்படி பின்னணியில் இலங்கையில் பாத்திரம் உலக அளவில் வலுவாக உணரப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீன-இந்திய-அமெரிக்க போட்டியில் உதைக்கப்படும் Football இலங்கை... 
-  fபயாஸ் MA fபரீட்
குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.