Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI)

October 17, 2020

Vacancies in the Tea Research Institute of Sri Lanka (TRI) 
Closing date: 26-10-2020. 
See details below.



Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Vacancies: Tea Research Institute of Sri Lanka (TRI) Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

23 வரை மூடப்படும் திணைக்களம்...

October 17, 2020

கொரோனா பரவல் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர்  23 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
23 வரை மூடப்படும் திணைக்களம்... 23 வரை மூடப்படும் திணைக்களம்... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு:

October 17, 2020

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது ஹனீபா முகமது அக்ரம் பயன்படுத்தி வந்த கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. கடந்தவரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்ட முகமது கனிபா முகமது அக்கிரம் மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: adaderana.
ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு: ஸஹ்ரான் பயன்படுத்திய வாகனம்: மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்பு: Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

கொரோனாவுக்கு மத்தியில் வழமைக்கு திரும்பும் சேவை...

October 17, 2020

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் 
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் வழமை போல் இடம்பெறவுள்ளன. 
 கொவிட்-19 வைரசு தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த 07ஆம் திகதி (07.10.2020) முதல் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள திணைக்கள கிளைகளில்; மேற்கொள்ளப்பட்டு வந்த சேவைகள்; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


(அ.த.தி)

கொரோனாவுக்கு மத்தியில் வழமைக்கு திரும்பும் சேவை... கொரோனாவுக்கு மத்தியில்  வழமைக்கு திரும்பும் சேவை... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு...

October 17, 2020

கேகாலை மாவட்டத்தின் ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு... மேலும் 06 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு....

October 17, 2020

கொழும்பு மாநகர சபையின் சேவைகளை பெறுவதற்காக கையளிக்கப்படவேண்டிய அனைத்து விண்ணப்பங்களும் கொழும்பு மாநாகர சபையின் பிரதான கட்டடத்துக்கு அருகாமையில் உள்ள 'சப்பிரி' பியஷ கரும பீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக விடேச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மாநகர சபை சேவைகளுக்காக பிரதான அலுவலகத்திற்குள் 
பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த சேவை தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறும். மதிப்பிட்டு வரியை கொழும்பு நகரத்தின் வங்கிக்கிளை ஒன்றின் ஊடாக மேற்கொள்ள முடியும். வரி மற்றும் வாடகை ஆகியவற்றை இணையவழி ஊடாக மேற்கொள்ள முடியும். இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் பொழுது ஏதேனும் பிச்சினைகள் எதிர்நோக்கப்படுமாயின் 011 567636 / 077399825 / 0718234717 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என்று கொழும்பு மாநாகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு.... கொழும்பு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு.... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா?

October 16, 2020

கடந்த 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் இன்று (16) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கை பின்வருமாறு: 
 2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று காலை 9.30 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக, அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களின் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சுகாதாரப் பிரிவினால் இந்த உடகவியலாளர்களுக்கு விரைவாக அறிவிக்கப்படும். 
இருப்பினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனையின் பெறுபேறு கிடைக்கும் வரையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களும் வெளி சமூக தொடர்புகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில்; இருக்குமாறு ஆலோசனை வழங்கி சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஊடகயிலாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 
 இதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவரா? Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Vacancies: Lanka Sathosa Ltd.

October 16, 2020

Vacancies in Lanka Sathosa Ltd. 
Closing date: 14 days from 11.10.2020. 
See the details below.

Source: Sunday Observer 11.10.2020.
Vacancies: Lanka Sathosa Ltd. Vacancies: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Courses: Government Universities

October 16, 2020

Courses from University of Peradeniya & University of Colombo.
See the details below:


Courses: Government Universities Courses: Government Universities Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

Degree Courses: The Open University of Sri Lanka

October 16, 2020

Applications are invited for the following Degree Courses. 
Bachelor of Science Honours in Nursing.
Bachelor of Pharmacy Honours.
Bachelor of Medical Laboratory Science Honours.
Bachelor of Science Honours in Phsychology.
See the details below


Degree Courses: The Open University of Sri Lanka Degree Courses: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை...

October 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 11ம் நாள் அதாவது வியாழக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.  
  • கட்டுநாயக்க பொலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று (15) காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல். 
  • இன்று (15)  காலை 5 மணிக்கு உள்ள நிலவரப்படி மொத்தமாக இன்னும் 170 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கக் கூடிய இடம் இருப்பதாக Covid-19 ஒழிப்பு தேசிய மத்திய நிலையம் தெரிவிப்பு.
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • கொழும்பு மாநகர சபையின் பொது உதவிப் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு. 

  • களுத்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு.
  • நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களை எதிர்வரும் 31 வரைமூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம். 
  • ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை நாளை தினம் (16) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு அனுமதித்துள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது. இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத கால சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது இரண்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் கொரோனா பரவலானது இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என விஞ்ஞான ரீதியாக தெளிவாவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.  
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக நாட்டில் இன்றைய தினம் 74 பேருக்கு கொவிட்-19 உறுதியானது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக உயர்வு. அதற்கமைய இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5244 அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள்

October 16, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று (16) காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் 14 மணித்தியாலங்கள் திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5

இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி...

October 16, 2020

நாட்டிலுள்ள சிறைக் கைதிகளுக்கு இன்று (16) முதல் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் இலவசமாக கதைப்பதற்கான வசதி வழங்கப்படவுள்ளது. 
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே சிறைச்சாலை திணைக்களத்துக்கு 
வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 ஸ்ரீலங்கா டெலிகொம்மிற்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு இந்த இலவச தொலைபேசி சேவை வழங்கப்பட உள்ளது. 
தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கைதிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் முகமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி... இன்று முதல் கைதிகளுக்கு இலவச தொலைபேசி வசதி... Reviewed by irumbuthirai on October 16, 2020 Rating: 5
Powered by Blogger.