13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்...
irumbuthirai
October 18, 2020
13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி
இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த பெண் அப்பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் அண்மையில் கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீதும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்...
Reviewed by irumbuthirai
on
October 18, 2020
Rating:
