பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை...

October 19, 2020

பரீட்சை மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்...

October 19, 2020

இம்முறை (2020) நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். 
குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.
பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்... பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு

October 19, 2020

ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் நடத்துதப்படவுள்ளது. 
ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒரு இடத்தில் ஒன்று கூடுவது சுகாதார அடிப்படையில் ஆபத்தானதாக அமையலாம் என்பதினால் இம்முறை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக 
கலந்துரையாடலை இணைய (Online) வழி முறையில் நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர்களிடம் பொருத்தமான கேள்வி மற்றும் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்களை முன்வைக்கவிரும்பும் ஊடகவியலாளர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இதை Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதற்கமைவாக இந்த ஊடக கலந்துரையாடல் மற்றும் இதில் ஒன்றிணைய எதிர்பார்க்கும் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளரின் பெயர், ஊடக நிறுவனம் ,கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி முதலான தகவல்களை 076 9736 357 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தி யொன்றின் SMS ) மூலம் இன்று சமர்ப்பிக்குமாறு வேண்டப்பட்டது. 
 இதில் Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக ஊடக கலந்துரையாடல் மற்றும் தொடர்புபடுவதற்குத் தேவையான லிங்க் (Link) தொடர்புகளை ஒவ்வொரு ஊடகவியலாளர்களினதும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 
சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக Cabinet Briefing என்ற பெயரில் WhatsApp group ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இதற்கு மேலதிகமாக இந்த ஊடகவியலாளர் கலந்துரையாடல் www.news.lk என்ற இணையதளம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகப்புத்தக பக்கத்திலும் (Facebook page) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அ.த.தி.
முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை

October 19, 2020


அரசியலமைப்பிற்கான 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பாக உருவாகியுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 

ஆளும் கட்சிக்குள்ளேயே 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. சிலர் 20 என்றால் என்னவென்றே தெரியாது என்று தெரிவித்திருந்தனர். இதனால் 20 குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு ஆளும்கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. பிரதான மேசையில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர் ஜிஎல், அலி சப்ரி, தினேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். 20 தொடர்பில் ஆரம்ப தெளிவை அமைச்சர் ஜிஎல் வழங்கினார். 

"நாங்கள் 20 ஐ கொண்டு வந்ததன் நோக்கம் 19 ஐ நீக்குதல். 19 இனால் நாடு பின்நோக்கிச் சென்றது. அராஜகம் தலை தூக்கியது. அதனால் அதனை நீக்க வேண்டும். கடந்த தேர்தலில் நாம் இதனை மக்களிடம் சொன்னோம். இது புதிய யாப்பை கொண்டு வரும் செயன்முறையின் ஒரு படி" என நீண்ட விளக்கம் அளித்து அமர்ந்தார். 

பின்னர் அமைச்சர் அலி சப்ரி சில வீடியோக்களை 

ஒளிபரப்பி தன் விளக்கத்தை அளித்தார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 19 ஆம் திருத்தம் தொடர்பில் சொன்ன விடயங்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோரின் வீடியோக்கள் அதில் உள்ளடங்கி இருந்தன. 19ஐ கொண்டு வந்தவர்களே அதன் குறைகளை சொல்லி உள்ளனர் என்றும் கூறினார். 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது மக்களின் விமர்சனத்திற்குரிய விடயமாக மாறியுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக விளக்கினார் அமைச்சர் சப்ரி. குறிப்பாக கணக்காய்வு ஆணைக்குழு, இரட்டைப் பிராஜாவுரிமை பற்றியும் அவர் விளக்கினார்.  

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் ஒருவர் சமூகத்தில் 20 க்கு எதிராக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களே என்று கூறியதுடன், பிரச்சினைகளை வெளியே சென்று பேசாமல் உள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வாசுதேவ "அதனால்தான் இது கூட்டப்பட்டுள்ளது. இங்கே பேசி தீர்ப்போம்" என்று சொன்னார். 

 அதன் பின்னர் 20 தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வரும் மிகப் பலம் வாய்ந்த ஆளும் கட்சி உறுப்பினரான அமைச்சர் விமல் விரவங்ச பேசினார். கொண்டு வரப்பட்டுள்ள முன்மொழிவில் உள்ள குறைபாடுகளே இந்த சிக்கலை உருவாக்கியதாக அவர் கூற பதிலளித்த ஜனாதிபதி "பொது மக்கள் மத்தியில் 20 குறித்த பிழையான பிம்பத்தை உருவாக்கியது நம்ம ஆட்களே" என்று கூறினார். 

அதன் பின்னர் கெவிது குமாரதுங்க உரையாற்றினார். அவர் 20 ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். நாங்கள் மக்களுக்கு வாக்களித்தது புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதாக. 20 ஐ அல்ல. என்று உரையாற்றுகையில் பின்வரிசை உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு விளைவித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும் அதையும் தாண்டி அவரின் உரை அமைந்தது. அப்போது ஜனாதிபதி குறுக்கிட்டு பேசினார். "எனக்கு மக்கள் ஆணை வழங்கியது இந்த நாட்டை கட்டியெழுப்ப. மக்கள் சொன்னது இந்த நாட்டை எவ்வாறேனும் செய்யுங்கள் என்று. நான் போய் மக்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் மக்களின் சிறு பிரச்சினையை சொன்னாலும் சுற்றுநிறுபங்களை காரணம் காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். சுற்று நிறுபங்கள் அதிகாரிகளை இறுக்கி வைத்துள்ளன. அப்படி என்றால் நாங்கள் யாப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம்" என்று சற்று கடுமையாக பேசினார். "ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசி பேசி இருந்தோமானால் எமக்கும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நடந்தது போலவே நடக்கும். எனக்கு வேண்டியது நாட்டை கட்டி எழுப்ப. அதற்கான தடைகளை நீக்குவோம். புதிய யாப்பை கொண்டு வருவதற்கு நான் வாக்குறுதி தருகிறேன். தற்போது செய்வது 19 ஐ நீக்குதல். புதிய யாப்பை கொண்டு வர எல்லோரும் கலந்துரையாடி செய்வோம். 19 வெற்றிகரமானது என்றால் தற்போது இந்த ஆசனத்தில் இருப்பது ரணில். இல்லையென்றால் சஜித். முன்னாள் பிரதமருக்கு வெல்லக் கூட முடியாமல் போனது. 19 ஐ வைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது" என்றும் கூறினார். 

பின்னர் பல பின்வரிசை உறுப்பினர்களும் 19 ஐ நீக்குவதன் அவசியம் குறித்து பேசினர். அதன் பின் எழுந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் இதனை நீக்க நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் என்று கூறினார். 

அதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் விமல் "ஜனாதிபதி அவர்களே இந்த ஆள் சொல்வதை நம்ப முடியாது. நான் அமைச்சரவையில் 20 இல் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனம் செய்து விட்டு வெளியே வந்த போது இவர் எனக்கு வெல் டன் விமல். எங்களால் இப்படி பேச முடியாது என்று சொன்னார். அதனால் இவ்வாறான துரோகிகள் சொல்வதை கேட்க வேண்டாம்" என்று கூறினார். உடனே குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த அந்த சொற்கள் காரம் கூடியவை. எனவே விமல் தயவுசெய்து அவற்றை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் எனக் கோர விமல் அதை ஏற்று அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொண்டார். 

பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கருத்து தெரிவித்தார். "18 கொண்டுவரப்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன். எனினும் ஆதரவாக வாக்களித்தேன்" என்று சொன்னார். 

தொடர்ந்தும் பலர் பேசினார். ஜனாதிபதி, பிரதமர் அவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக பேசிய ஜனாதிபதி "நாம் புதிய யாப்பை கொண்டு வரவில்லை. 19 ஐ நீக்க மாத்திரமே முயல்கிறோம். மக்களுக்கு நான் கொடுத்த வாக்கு உள்ளது. நாட்டை கட்டியெழுப்ப. அதற்கான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகள் பயப்படுகின்றனர். அவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய இயலாது. நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு எனக்கு ஒத்தாசை வழங்குங்கள்" என்று கூறினார். 

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் 20 ஐ கடுமையாக விமர்சித்து வரும் விஜேதாச ராஜபக்ஷ ஆகிய இருவரும் கலந்து கொண்ட போதிலும் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. 

 #20 அடுத்த வாரம் பாராளுமன்றில்

20 ஐ அடுத்த வாரமே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருதல் அரசின் நோக்கமாகும். உயர் நீதிமன்றத்தின் கருத்து ஏற்கனவே சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 20 ஆம் திகதி அதனை சபாநாயகர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். எனினும் அதில் உள்ள சில விடயங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கசிந்தும் இருந்தன. 20 இற்கான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்தை முன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நடவடிக்கையை அரசும் ஆரம்பித்துள்ளது. அரசுக்கு சரியா 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 20 ஐ நிறைவேற்றிக் கொள்ள அது போதுமானது. எனினும் மஹிந்த யாபா சபாநாயகர் ஆனமையினாலும், விஜேதாச ராஜபக்ஷ 20 க்கு எதிராக இருப்பதாலும் அரசின் உறுப்பினர் எண்ணிக்கை 148 ஆகவே உள்ளது. இதனால் இன்னும் 2 பேர் எதிர்தரப்பில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. அதற்கான வேலைகளை ஏற்கனவே பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து விட்டார். 

#வெளிவராத சு.க அறிக்கை.# 

20 தொடர்பில் ஆராய்வதற்காக சு.க ஒரு குழுவை நியமித்திருந்தது. தகவல்களின் அடிப்படையில் அந்த குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் வீட்டில் ஒரே ஒரு தடவை மட்டுமே கூடியது. 20 க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிலரும், அதில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களும் முன்வைத்தனர் எனவும் அறியக் கிடைக்கிறது. 

எவ்வாறாயினும் அந்த குழுவின் அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு கட்சிக்கு வழங்கப்பட்டு விட்டது. எனினும், இது இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. 

#பின்வரிசை உறுப்பினர்கள் பசில் சந்திப்பு

ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம் பிரச்சினைகள் குறித்து காலந்துரையாடியமை குறித்து கடந்த வாரம் பதிந்தோம். அவர்கள் இவ்வாரம் பசில் ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் வைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். வீரசுமன வீரசிங்ஹ, ஜகத் குமார, பிரமித பண்டார தென்னக்கோன், பிரேம்நாத் தொளவத்த உட்பட பின்வரிசை உறுப்பினர்கள் அதில் இணைந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசில் பதவிகளை வகிக்காதவர்களாவர். அங்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளை இந்த பின்வரிசை உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொள்தல் தொடர்பானதாகும். பசில் ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவித்தார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் பொது மக்கள் சந்திப்புகள் கொரோனா காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் என எல்லா இடங்களிலும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சஜித் கோரியிருந்தார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அலுவலக ஆளணியினரில் பலரை வீட்டில் இருந்தே பணியாற்ற சஜித் அனுமதி வழங்கியிருந்தார். இதேவேளை பகிரங்க கூட்டங்கள் நடைபெறாத போதிலும் சில உள்ளக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 

 "கொரோனா தடுப்பு தொடர்பில் அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை போன்றுதான் விளங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசினார். அரசுக்கு பதில் இருக்கவில்லை. மனுஷ நாணயக்காரவும் பாராளுமன்றத்தில் கேட்டார் எனினும் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை" என்று ஹரின் பெர்னாண்டோ கூறினார். இந்தியாவில் இருந்து வந்து Brandix தொழிற்சாலைக்கு சென்றதாக சொல்லப்படும் நபர்கள் பற்றியும் இங்கே பேசப்பட்டது. இது தொடர்பில் ஆளும் தரப்புடன் தொடர்பில் உள்ள சிலருக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. அதாவது PHI இன் தொடர்பு இல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா? என மனுஷ நாணயக்கார தனக்கு கிடைத்த தகவல்களை கூறினார். 

அப்போது சஜித் "கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தேடிப்பார்க்க வேண்டும்" என்று கூறினார். 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான விடயங்களும் இங்கே கலந்துரையாடப்பட்டன. 

 #சஜித்க்கு வந்த அழைப்பு

இதற்கிடையில் சஜித் பிரேமதாசவுக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் சிலர் அழைப்பு ஒன்றை எடுத்தனர். "சேர் எங்களுக்கு PCR பரிசோதனை செய்ய ஒருநாள் வரச்சொன்னார்கள். அன்று சோதனை செய்யாமல் அனுப்பி விட்டனர். மீண்டும் வரச்சொன்னார்கள். ஒரு மணி நேர அவகாசத்தில். நாங்கள் கொண்டு வர வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வதற்காவது இவர்கள் அவகாசம் தரவில்லை" என்று கூறினார். "அது மட்டும் அல்ல சேர். திடுப் என வந்து ஒரு நிமிடத்தில் தயாராக சொல்லி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நாங்கள் பலவந்தமாக கொரோனாவை உருவாக்கவில்லை. அவர்கள் எம்மை கொலைகாரர்கள் போல் நடத்தினர்" என்றும் கூறினார். 

 "கடந்த முறை படைவிரர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு பின்னர் மக்கள் கல்லால் எறிந்து விரட்டும் நிலை உருவானது. செய் நன்றி தெரியாத மக்கள் உள்ளனர். உங்களுக்காக நான் என்னால் இயன்றதை செய்கிறேன்" இத்துடன் நில்லாமல் பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடினார். 

 #காணாமல் போன ரிஷாட்

ரிஷாட் பதியுதீன்... இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நாமம். 2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வசிக்கும் மன்னார் வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து செல்ல அரச செலவில் பஸ்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் போலீஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து பதியுதீன் பற்றிய புதிய நாடகம் ஆரம்பமானது. 

பிடியாணை பெறப்பட்டு 6 விஷேட போலீஸ் குழுக்கள் தேடி வந்த நிலையில் இன்று (19) காலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தன் மீது விதிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக அவர் நிதிமன்றத்தையும் நாடியுள்ளார். மிகப் பெரிய ஒரு அரசியல் நாடகமே இது என சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி செயற்பாட்டு அரசியலிலும் கதைக்கப்பட்டு வருகிறது. 

20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ரிஷாட் இன் ஆதரவை அரசு பெற்றுக்கொள்ள உள்ளதாக கதைகள் உலாவும் நிலையில் அரசியல் அரங்கில் ஒரு ட்விஸ்ட் ஆக இது இழுபட்டு செல்கிறது. இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் இந்த அரசியல் ட்விஸ்ட் முடிந்ததா அல்லது புதிய ஒரு ட்விஸ்ட் இற்கான ஆரம்பமா என்பதை இவ்வாரம் அவதானிக்கலாம். 

 #பிரசன்னவின் கோரிக்கை

கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிலை தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா விளக்கினார். அதன் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

 #20க்கு எதிரான பிக்குகள்

இந்த ஆட்சி உருவாக்குவதில் திரைமறைவில் மட்டுமன்றி திரைக்கு முன்னாலும் முக்கிய பங்காற்றியவர்கள் பெளத்த பிக்குகள். தற்போது 20 ஆம் திருத்தத்திற்கு எதிராக அவர்களில் முக்கியமான சிலர் வெளியே வர ஆரம்பித்ததுள்ளனர். 

குறிப்பாக 2015 தோல்வியடைந்து மெதமுலன திரும்பிய மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வந்து மீண்டும் அரசியல் செய்ய வைத்த முறுத்தெட்டுவே ஆனந்த பிக்கு முக்கியமானவர். அபயாராம பிக்கு என பலரும் அறிந்திருப்பர். 

ஏற்கனவே, ரமான்ய, அமரபுர நிக்காயகளின் செயலாளர் தேரர்கள் கூட்டு அறிக்கை விடுத்திருந்த நிலையில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் அல்லே குணவங்ச ஆகிய இந்த ஆட்சியை உருவாக்கிய முக்கிய தேரர்கள் இருவரும் 20க்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஊடக சந்திப்பை நடாத்தி உள்ளனர். 

குறிப்பாக 20 அம்ச கோரிக்கை ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பிக்குகளுடன் விளையாட வேண்டாம் என்றும் கடும் தொனியில் தெரிவித்தார் அல்லே குணவங்ச தேரர். 

 #20 ஐ எதிர்க்கும் கணக்காய்வாளர் தொழிற் சங்கங்கள்

20 இன் மூலம் கணக்காய்வு தொடர்பில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் தொழிற்சங்கங்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தின. அதன் போது அரச கம்பனிகளின் கணக்காய்வை கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திடம் இருந்து பெற்று தனியாரிடம் வழங்க 20ஆம் திருத்தம் வழி ஏற்படுத்துவதாகவும், அதன் மூலம் அவை பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை விட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டியதுடன், ஸ்ரீலங்கன் போன்ற ஒரு நிறுவனத்தின் கணக்காய்வை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டால் சுமார் 600 மில்லியன் அளவில் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும் என்றும் தற்போது அரசுக்கு சொந்தமாக உள்ள 153 கம்பனிகளினதும் கணக்காய்வுக்காக எத்தனை கோடி ரூபாய்கள் தனியார் துறைக்கு செல்லும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், வியத் மக மூலம் அரசுடன் நல்லிணக்கம் கொண்ட சில வாண்மையாளர்களின் நலனே இதில் உள்ளன என்று அரசை நேரடியாக குற்றம் சாட்டினர். 

அத்தோடு இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இங்கே உள்ள எந்த சட்டமும் தடையாக இல்லையென்றும், அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைக்க காலத்திற்கு காலம் ஒவ்வொன்று செல்வதாகவும் தெரிவித்தனர். 

 தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு என்ற அமைப்பும் சில தினங்களுக்கு முன்னர் கோட்டே ரெயில் நிலையத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. 

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் அதில் முன்னின்று செயற்பட்டார். இவர்கள் ஞாயிறன்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களுக்கு சென்று 20 க்கான தமது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

 அடுத்த வாரம் இந்த தொடர் எழுதும் போது 20 காண வாக்கெடுப்பு நிறைவடைந்திருக்கும். பிக்குகளின் எச்சரிக்கையை மீறி 20 ஐ நிறைவேற்ற அரசு முயலுமா? அல்லது திருத்தங்களை மேற்கொண்டு எதிர்ப்பவர்களை திருப்திப்படுத்த முயற்சிக்குமா என்ற தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம். 

-  fபயாஸ் MA fபரீட்.

அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை...

October 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 14ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அடுத்தவாரம் வினைத்திறனாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், அது மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை கட்டுப்படுத்துவதற்கான பிரதான புள்ளியாக அமையும் என்று, கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு. 

  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்க அரசு தீர்மானம். அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் 34 மற்றும் 36 ம் இலக்க வார்டுகள் தற்காலிகமாக மூடல். 

  • கம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று என அறிவிப்பு. அத்துடன் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்காக ஐ.டி.எச். மருத்துவமனையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு. 

  • மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். 

  • கொழும்பு, ஆமர் வீதி காவல்நிலையத்தின் காவற்துறை அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர் இருவருக்கு கொரோனா தொற்றுதியானதை தொடர்ந்து, குறித்த காவல்நிலையத்தின் 16 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிப்பு. 

  • இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 

  • மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளருக்கு கொவிட்-19 தொற்றுதியானது. 

  • வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிவரும் ஊழியர் இருவர் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 

  • கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 7 மாணவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதி என அறிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குளியாபிடிய பகுதியிலுள்ள கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு. 

  • இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் சேர்த்து 18.10.2020 இரவு 09:30 வரையான தகவல்களின்படி இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5538 ஆக உயர்வு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு...

October 19, 2020

 


பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஏற்கனவே 5 போலீசார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் தற்போது இரண்டு பேரை குறைத்துள்ளதாக அறியமுடிகிறது.
 
Source: newswire
குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு... குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...

October 19, 2020

 


மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 11 பெண்களும் 
அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். 
இவர்கள் கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த சுற்றுலாவிற்கு சென்ற சாரதியே அண்மையில் தொற்றுக்கு உள்ளான மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் சாரதி ஆகும். மத்துகம பிரதேசத்தில் இதுவரை 29 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி நேற்று அறிவித்தார்.
தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்... தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது

October 19, 2020

 


குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவத்தின் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி தொற்று உறுதியானது. 
இதனைத் தொடர்ந்து 
அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 
 இதன் அடிப்படையிலேயே கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு...

October 19, 2020

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 PCR இயந்திரங்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் இலங்கை கடற்படைக்கு வழங்கியது. 
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 PCR இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 PCR இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, 
இந்த இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 19, 2020

16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 16-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

Vacancies: Health System Enhancement Project (Ministry of Health)

October 19, 2020

Vacancies in Health System Enhancement Project (Ministry of Health) 
Closing date: 26-10-2020. 
See the details below.


Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை...

October 18, 2020



திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 13ம் நாள் அதாவது சனிக்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டில் இன்னும் சமூக பரவலை ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றின் பரம்பலை இதுவரையில் சரியாக இனங்காணவில்லை எனவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை முடக்க வேண்டிய அவசியம் உள்ளதுடன், நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் PCR பரிசோதனை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தனியார் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு. 

  • இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவிப்பு. 
  • கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு. 
  • கொரோனா தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிப்பு. 
  • மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவானமை தொடர்பில் விசாரணை செய்ய அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இன்றைய தினம் (17) 121 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை கொத்தணி 2014 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 18, 2020

Vacancies in Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 30-10-2020. 
See the details below.

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5
Powered by Blogger.