கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்

October 21, 2020

 


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை

October 21, 2020

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர  அறிக்கை Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...

October 21, 2020
P

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
இது தொடர்பான பயிற்சி செயலமர்வு கடந்த 17ஆம் திகதி 20 ம் திகதிகளில் நடைபெற்றது. நாளை ஆரம்பமாகும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 
27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. 
 மேலதிக விபரங்களுக்கு 0112785231 / 0112785216 / 0112784037 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்...

October 20, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார். 
இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் 'பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்' என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
நேற்று காலை தெஹிவலையில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பா.உ. ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 
27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதன்போது ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது. 
2019 ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்காளர்களை வாக்களிப்பதற்காக அரச பேருந்துகளில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

ரயில் சேவைகளில் மாற்றம்...

October 20, 2020

தற்போதைய கொரோனா நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று (20) தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதற்கமைவாக கொழும்பு கோட்டை - கண்டிக்கிடையிலும், 
மருதானை மற்றும் வெளியத்தைக்கு இடையிலும் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் சேவையில் ஈடுப்படாது. 
இதேபோன்று கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கிடையில் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை தினத்திலும் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக பிரிவு முகாமையாளர் பண்டார சந்திரசேன தெரிவித்தார். 
 கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவை தினத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கிடையில் சேவையில் ஈடுப்பட்ட புலத்திசி என்ற நகரங்களுக்கிடையிலான ரயில் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அவுகண ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுப்படும்.
அ.த.தி.
ரயில் சேவைகளில் மாற்றம்... ரயில் சேவைகளில் மாற்றம்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்?

October 20, 2020

இணைய வழியில் (Online) பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் மேற்கொண்டு கற்கைநெறிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் இந் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அ.த.தி.
Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை...

October 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 15ம் நாள் அதாவது திங்கட்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிப்பு. 

  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (20) காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி என அறிவிப்பு. 
  • ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் அதாவது Zoom முறையில் நடத்துதப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது. 
  • கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதனால் இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு. சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 
  • உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக அந்த நிலையங்களுக்கு ரூபா 15 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு. 
  • யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்..

October 20, 2020

எதிர்வரும் 23ஆம் திகதி மலையக உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் 
மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 
நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அ.த.தி.
நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை

October 20, 2020

2020 செப்டம்பர் மாதம் 30 திகதி காலாவதியாகவுள்ள வாகன சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுப்படியாகும் கால எல்லை டிசம்பர் மாதம் 31 திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குஹே மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அ.த.தி.
நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

October 20, 2020

உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன்படி, 
1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்  Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

October 20, 2020

 


தற்பொழுது நாடு முழுவதிலும் நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார். 

 அதேவேளை மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு ரூ. 15000 மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு: 

 நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார் 

 தற்பொழுது உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும். அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15, 000 வீதம் இந்த நியியுதவி வழங்கப்படும். 

 இந்த நிதியுதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலின் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 கல்வி அமைச்சின் சுகாதார அலகினால் வழங்கப்படும் இந்த நிதி; , தற்பொழுது சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள்;; உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முக கவசம், பாதுகாப்பான ஆடை அணிகளை அணிதல் மற்றும் கிருமிநாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக என்ற ரீதியிலாகும். 

 இதே போன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் க.பொ. த உயர் தர பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலய கல்வி பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகளைப் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அ.த.தி.)

தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு)

October 19, 2020

ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பம். 
நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனம்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 
தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளது. 
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் போது பயிலுனர்களுக்கு 22500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும். 
நிகழ்ச்சித்திட்டம் இவ்வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலின் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 
அனைத்து விண்ணப்பங்களையும் தமது பிரதேச கிராம அலுவலரிடம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விண்ணப்பதாரிகளை நேர்முக தேர்வுக்கு உற்படுத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 
தெரிவுசெய்யப்பட்ட எவரும் அரச அல்லது தனியார் துறை நிறுவனங்களில் தொழில் ஒன்றினை பெறாத குடும்ப உறுப்பினர்கள் ஆவர். 
ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர். 
ஆட்சேர்ப்பு செய்யப்படுவோர் அரச விவசாய காணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாயம் செய்யமுடியுமான காணிகளில் நவீன விவசாய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் வன சீவராசிகள், வனப் பாதுகாப்பு, நீர்ப்பாசன கமநல சேவைகள், விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர். 
 இதில் முதற்கட்டமாக 34,818 பேர் பயிற்சிக்காக அழைக்கப்பட உள்ளனர். 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (19) வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையை கீழே காணலாம்.


ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு) ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை...

October 19, 2020

பரீட்சை மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.