திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை...

October 28, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 21ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு. 
  • கொவிட்19 அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக, விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவிப்பு. 

  • கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. 
  • கம்பஹா மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல்வரை அவ்வாறே தொடரும் என அறிவிப்பு. 
  • தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளைய தினம் (26) அத்தியவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் திறக்கப்படும் எனவும் அத்துடன் நாளைய தினம் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் திற்ந்து வைக்கப்படும் எனவும் இராணுவ தளபதி அறிவிப்பு. 
  • மிரிஹான பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று. இவர் பேலியகொட மீன் விற்பனை சந்தைக்கு சென்று வந்துள்ளார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கம்பஹா மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 
  • அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நீடிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஊரடங்கு நாளை (26) அதிகாலை 5 மணி வரை மாத்திரமே போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவிப்பு. 
  • பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றும் எந்தவொரு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு. 
  • நாளை (26) முதல் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரையோர புகையிரத பாதையில் நாளாந்த சேவையில் ஈடுப்படும் 6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும். உயர்தர பரீட்சை காலபகுதிக்கு அமைவாக மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் சில இடம் பெறவிருப்பதாகவும் தெரிவிப்பு. 
  • அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்பதால் உயர்தர மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளோடு தொடர்புபட்ட அதிகாரிகள் அந்தந்த மையங்களுக்கு அறிக்கை அளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்தார். 
  • இலங்கையில் COVID19 தொற்றால் 16 வது மரணம் பதிவாகியது. 70 வயதுடைய ஆண் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 
  • நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் தம்பான ஆதிவாசிகள் பழங்குடி கிராமத்திற்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்று பிற்பகல் முதல், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு, இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாது என அறிவிப்பு. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் ஆகியனவும் நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 351 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7875 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 28, 2020 Rating: 5

23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 27, 2020

23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 23-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancies: Lanka Sugar Company

October 27, 2020

Vacancies in the Lanka Sugar Company. 
Closing date: 10 days from 18-10-2020. 
See the details below.


Vacancies: Lanka Sugar Company Vacancies: Lanka Sugar Company Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancies: Sugarcane Research Institute

October 27, 2020

Vacancies in the Sugarcane Research Institute. 
Closing date: 09-11-2020. 
See the details below:



Vacancies: Sugarcane Research Institute Vacancies: Sugarcane Research Institute Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd.

October 26, 2020

Vacancy in the Sri Lanka State Trading Corporation Ltd. 
Closing date: 02-11-2020. 
See the details below.


Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd. Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd. Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்...

October 26, 2020

சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை பலி கொண்டு வருகிறது.  
இதற்கு பொலிஸ் ஊரடங்கு மூலம் வீட்டிலேயே முடங்குதல் ஒன்றே சிறந்த வழியாக பல நாடுகள் இன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  
வாழ்நாளில் முதல் முறையாக எதிர்கொண்ட இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசௌகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் அமைத்துக்கொண்டனர். 
அந்தவகையில் இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். 
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளனர்.
உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வருமாறு..
  • ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
  • அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது. 
  • உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.
  • உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வாளர்கள் 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

Vacancy: Global Fund Project (Ministry of Health)

October 26, 2020

Vacancy in Global Fund Project (Ministry of Health) 
Closing date: 01-11-2020. 
See the details below:


Vacancy: Global Fund Project (Ministry of Health) Vacancy: Global Fund Project (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

Vacancies: National Water Supply & Drainage Board

October 26, 2020

Vacancies in National Water Supply & Drainage Board. 
Closing date: 02-11-2020. 
See the details below:


Vacancies: National Water Supply & Drainage Board Vacancies: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை...

October 26, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 20ம் நாள் அதாவது சனிக்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • 49 காவல்துறை பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக, குறித்த சில புகையிரத நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றுக்கு மத்தியில் போக்குவரத்து துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து சங்கத்தினருக்கும், போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில், எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு. 

  • இலங்கையின் 15ஆவது கொரோனா மரணம் இன்று (24) பதிவாகியது. 56 வயதுடைய ஆண். குளியாப்பிட்டிய உனாலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர். குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமாகியுள்ளார். இவர் ஒரு இருதய நோயாளி எனவும் கூறப்பட்டது. 
  • சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டி தலதா மாளிகைக்கு வருபவர்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் பொறுப்பதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு. 
  • ஊரடங்கு உத்தரவை மீறியதன் காரணமாக இதுவரை 759 நபர்கள் 49 காவற்துறை பிரிவுகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு. 
  • கொதட்டுவ மற்றும் முல்லேரியா காவல்துறை பிரிவுகளுக்கு இன்று மாலை 7 மணிக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 
  • மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோர காவற்துறை பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • வாழைச்சேனை காவற்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • இன்றை தினத்தில் (24) மாத்திரம் மொத்தமாக 368 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்னர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

IDH வைத்தியசாலையிலிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோர்..

October 25, 2020

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு இதுவரை 16 மாணவர்கள் IDH வைத்தியசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றுவதாக Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 
இதேவேளை பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பயணிக்கும் புகையிரதங்களை தவிர ஏனைய புகையிரதங்கள் ஊரடங்கு பிரதேசங்களில் நிறுத்த படுவதில்லை என புகையிரத கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
IDH வைத்தியசாலையிலிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோர்.. IDH வைத்தியசாலையிலிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோர்.. Reviewed by irumbuthirai on October 25, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-10-2020 நடந்தவை...

October 25, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 19ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேருவளை மீனவத் துறை முகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளதையடுத்து பேருவளை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம். இதேவேளை, பேருவளை பிரதேச சபையையும், அளுத்கம மீன் வர்த்தக கட்டட தொகுதியையும் மூடுவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை. 
  • ஊரடங்கு உத்தரவை மீறிய 691 பேர் இதுவரை கைது என அறிவிப்பு. 
  • ஹோமாகம பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்றுறுதி. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற நிலையில் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற நபர் கைது. 26 வயதான குறித்த இளைஞன் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவிப்பு. 

  • காலி பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு கொவிட் 19 தொற்றுறுதியான ஒருவர் சென்றநிலையில் அந்த அஞ்சல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • கொவிட் 19 பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலங்களும் மீள் அறிவிப்பு வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு. எனினும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் காணப்படும் பிரதேச செயலக காரியாலத்தில் அமையப்பெற்றுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் வாயிலாக நடைபெறும் எனவும் அந்த ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட அந்த திணைக்களத்தின் ஏனைய சேவைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 0115 226126, 0115 226115, 0115 226100, 0115 226150 ஆகிய தொலைபேசி இலக்கங்களு்ககு தொடர்பு கொள்ளுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டது. 
  • சீன அரசாங்கம் 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவிப்பு. 
  • பாணந்துறை நகரத்தில் காணப்படும் அனைத்து மீன் விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடல். 
  • உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு. 
  • களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட்ட பிரதேச சபைக்குட்பட்ட குலாவிட்ட வடக்கு மற்றும் தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில்ல மற்றும் மகலன்தவ ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுள்ளதாக தெரிவிப்பு. 
  • உடன் அமலாகும் வகையில் எதிர்வரும் திங்கள் (26) காலை 5 மணி வரை களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை, அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல். 
  • இலங்கையில் இதுவரையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானோர் இன்றைய தினம் பதிவாகினர். அதாவது 866 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 25, 2020 Rating: 5

Vacancies: Coconut Development Authority

October 25, 2020

Vacancies in the Coconut Development Authority. 
See the details below:

Source: Sunday Observer 18.10.2020.

Vacancies: Coconut Development Authority Vacancies: Coconut Development Authority Reviewed by irumbuthirai on October 25, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Government Universities

October 24, 2020

Vacancies in Sri Lanka Government Universities. 
See the details below.



Vacancies: Sri Lanka Government Universities Vacancies: Sri Lanka Government Universities Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5
Powered by Blogger.