திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-10-2020 நடந்தவை...
irumbuthirai
October 29, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 23ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
- வீட்டில் அல்லது சுகாதாரமற்ற நிறுவனங்களில் தனிமைப்படுத்திக்கொள்வது தொடர்பில் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி கோவை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டது.
- எதிர்காலத்தில், நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுறுதியானவர்களை, வைத்தியசாலை அல்லாத சிகிச்சை மையங்களில் தடுத்து வைத்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு.
- மாகும்புரவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.
- இதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதில் 10 பேர் STF ஐச் சேர்ந்தவர்களாகும்.
- இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களில் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களம் தெரிவிப்பு.
- மொரட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, ஹோமாகமை பொலிஸ் அதிகாரப்பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு.
- டாம் வீதி பொலிஸின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படு்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தின் உணவக கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் வார நாட்களில் திங்கட் மற்றும் விழாக் கிழமையும் கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வௌ்ளிக் கிழமையும் திறந்திருக்கும் என தெரிவிப்பு.
- பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து covid-19 பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
- பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 6 நாட்களுக்கு பின்னர் மீன்பிடி படகுகளில் இருந்த மீன்களினட கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (27) காலை ஆரம்பமானது.
- ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் உள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மாதந்த மின்சார கட்டணப் பட்டியலை அடிப்படையாக கொண்டு மின்சார துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென அமைச்சர் டளஸ் அழஹப்பெரும மின்சார சபைக்கு அறிவிப்பு.
- கொவிட்-19 தொற்றுறுதியான மூன்று பேர் இன்று உயிரிழந்தனர். இலங்கையில் கொவிட்-19 காரணமாக நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் (இவர் விசேட தேவை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது), கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவர், ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவருமே இவ்வாறு மரணமாகினர். அத்துடன் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்கள் 19 ஆக அதிகரிப்பு.
- இன்றைய தினம் 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அத்துடன் பேலிய கொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,396 ஆக அதிகரிப்பு. நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,870 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 29, 2020
Rating: