Vacancies: UNHCR

October 30, 2020

Vacancies in the UNHCR. 
Closing date: 08-11-2020. 
See the details below.


Vacancies: UNHCR Vacancies: UNHCR Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை...

October 30, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 24ம் நாள் அதாவது புதன்கிழமை (28) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், வழமையான அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது. வெளி நபர்கள் அந்த வீடுகளுக்கு செல்ல முடியாது. மற்றும் குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர், காவல்துறை பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும், குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பாராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான நிலையில், அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகைளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம். 
  • முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்றும் கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் உள்ளவர்கள் மட்டும் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவிப்பு. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

  • கொட்டகல - பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் - யொக்ஸ்போர்ட் பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் பேலியகொட கொத்தணியோடு தொடர்புள்ளவர். 
  • மேல் மாகாணம் முழுவதும் நாளை (29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 02 வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஆலோசனை வழங்கினார். 
  • களுபோவில போதனா வைத்தியசாலையின் காது, தொண்டை மற்றும் மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது, 
  • தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த 3 மாத சிசு ஒன்றுக்கும் அதன் தாய்க்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்தார். 
  • நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமானது என்பதால் மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். 
  • நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடையாக அமையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து மாணவர்களுக்கு ஆக கூடிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
  • இன்றைய தினம் 335 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை...

October 29, 2020

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை Z-Score வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது. 
ஆனால் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தினை கையேற்பதற்கு அதிகாரிகள் முன்னிலையாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
-ஹிரு
UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-10-2020 நடந்தவை...

October 29, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 23ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • வீட்டில் அல்லது சுகாதாரமற்ற நிறுவனங்களில் தனிமைப்படுத்திக்கொள்வது தொடர்பில் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி கோவை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டது. 
  • எதிர்காலத்தில், நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுறுதியானவர்களை, வைத்தியசாலை அல்லாத சிகிச்சை மையங்களில் தடுத்து வைத்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு. 
  • மாகும்புரவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார். 

  • இதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதில் 10 பேர் STF ஐச் சேர்ந்தவர்களாகும். 
  • இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களில் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களம் தெரிவிப்பு. 
  • மொரட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, ஹோமாகமை பொலிஸ் அதிகாரப்பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. 
  • டாம் வீதி பொலிஸின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படு்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தின் உணவக கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் வார நாட்களில் திங்கட் மற்றும் விழாக் கிழமையும் கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வௌ்ளிக் கிழமையும் திறந்திருக்கும் என தெரிவிப்பு. 
  • பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து covid-19 பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். 
  • பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 6 நாட்களுக்கு பின்னர் மீன்பிடி படகுகளில் இருந்த மீன்களினட கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (27) காலை ஆரம்பமானது. 
  • ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் உள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மாதந்த மின்சார கட்டணப் பட்டியலை அடிப்படையாக கொண்டு மின்சார துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென அமைச்சர் டளஸ் அழஹப்பெரும மின்சார சபைக்கு அறிவிப்பு. 
  • கொவிட்-19 தொற்றுறுதியான மூன்று பேர் இன்று உயிரிழந்தனர். இலங்கையில் கொவிட்-19 காரணமாக நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் (இவர் விசேட தேவை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது), கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவர், ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவருமே இவ்வாறு மரணமாகினர். அத்துடன் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்கள் 19 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அத்துடன் பேலிய கொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,396 ஆக அதிகரிப்பு. நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,870 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை...

October 29, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 22ம் நாள் அதாவது திங்கட்கிழமை (26) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹா மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை இன்றைய தினம் (26) காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறப்பதற்கு அனுமதி. அத்துடன் அரச, தனியார் வங்கிகளைத் திறக்கவும் அனுமதி. 
  • போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலம் மற்றும் வேரஹெர அலுவலகம் என்பவற்றை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு. அத்துடன் போக்குவரத்து வைத்திய பரிசோதனைகளுக்கான நுகேகொடை மற்றும் வேரஹெர அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

  • கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொடருந்து சேவைகள் தவிர்ந்த பிரதான மார்க்கம் புத்தளம் மார்க்கம் மற்றும் களனிவெளி மார்க்கம் என்பனவற்றில் இடம்பெறவுள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று முதல் ரத்து. 
  • இன்றும் நாளையும் (26&27) பாராளுமன்றம் மூடப்படுவதாகவும் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் எந்த ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடமை புரியும் STF உறுப்பினர்கள் உள்ள ஜயவர்தனபுர முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக தற்போது STF ன் தலைமையகத்திலுள்ளவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவிப்பு. முன்னதாக மட்டகளப்பில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட மருத்துவமனைகளின் வெளிநோயாளர்களுக்கு, நாளை (27) முதல் மருந்துகள் தபால் மூலமாக வீடுகளுக்கே விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு. 
  • அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதன் காரணமாக ராஜகிரிய, களனி மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த முகாம்களில் சேவையில் ஈடுபடும் 10 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் இன்று அடையாளம் காணப்பட்டனர். 
  • நுவரெலிய-கொட்டகலை பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
  • கொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 
  • கொரோனா வைரஸ் நாட்டில் இன்னும் சமுகப்பரவலுக்கு உள்ளாகவில்லை என்று, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான நிபுணர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான 6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. 
  • புதிய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையாற்றியவராவார்.  
  • இன்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5

The University of Sri Jayawardenapura (MBA/MSc -2021)

October 28, 2020

MBA / MSc -2021 in the University of Sri Jayawardanapura. 
Closing date: 30-11-2020. 
See the details below.


The University of Sri Jayawardenapura (MBA/MSc -2021) The University of Sri Jayawardenapura (MBA/MSc -2021) Reviewed by irumbuthirai on October 28, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை...

October 28, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 21ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு. 
  • கொவிட்19 அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக, விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவிப்பு. 

  • கொழும்பு மாவட்டத்தில், கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் இன்று மாலை 6 மணிமுதல் மீள் அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. 
  • கம்பஹா மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல்வரை அவ்வாறே தொடரும் என அறிவிப்பு. 
  • தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளைய தினம் (26) அத்தியவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் திறக்கப்படும் எனவும் அத்துடன் நாளைய தினம் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் திற்ந்து வைக்கப்படும் எனவும் இராணுவ தளபதி அறிவிப்பு. 
  • மிரிஹான பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று. இவர் பேலியகொட மீன் விற்பனை சந்தைக்கு சென்று வந்துள்ளார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கம்பஹா மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 
  • அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நீடிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஊரடங்கு நாளை (26) அதிகாலை 5 மணி வரை மாத்திரமே போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவிப்பு. 
  • பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றும் எந்தவொரு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு. 
  • நாளை (26) முதல் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரையோர புகையிரத பாதையில் நாளாந்த சேவையில் ஈடுப்படும் 6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும். உயர்தர பரீட்சை காலபகுதிக்கு அமைவாக மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் சில இடம் பெறவிருப்பதாகவும் தெரிவிப்பு. 
  • அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்பதால் உயர்தர மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளோடு தொடர்புபட்ட அதிகாரிகள் அந்தந்த மையங்களுக்கு அறிக்கை அளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்தார். 
  • இலங்கையில் COVID19 தொற்றால் 16 வது மரணம் பதிவாகியது. 70 வயதுடைய ஆண் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 
  • நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் தம்பான ஆதிவாசிகள் பழங்குடி கிராமத்திற்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்று பிற்பகல் முதல், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு, இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாது என அறிவிப்பு. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் ஆகியனவும் நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 351 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7875 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 25-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 28, 2020 Rating: 5

23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 27, 2020

23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 23-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancies: Lanka Sugar Company

October 27, 2020

Vacancies in the Lanka Sugar Company. 
Closing date: 10 days from 18-10-2020. 
See the details below.


Vacancies: Lanka Sugar Company Vacancies: Lanka Sugar Company Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancies: Sugarcane Research Institute

October 27, 2020

Vacancies in the Sugarcane Research Institute. 
Closing date: 09-11-2020. 
See the details below:



Vacancies: Sugarcane Research Institute Vacancies: Sugarcane Research Institute Reviewed by irumbuthirai on October 27, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd.

October 26, 2020

Vacancy in the Sri Lanka State Trading Corporation Ltd. 
Closing date: 02-11-2020. 
See the details below.


Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd. Vacancy: Sri Lanka State Trading Corporation Ltd. Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்...

October 26, 2020

சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை பலி கொண்டு வருகிறது.  
இதற்கு பொலிஸ் ஊரடங்கு மூலம் வீட்டிலேயே முடங்குதல் ஒன்றே சிறந்த வழியாக பல நாடுகள் இன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  
வாழ்நாளில் முதல் முறையாக எதிர்கொண்ட இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசௌகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் அமைத்துக்கொண்டனர். 
அந்தவகையில் இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். 
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளனர்.
உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வருமாறு..
  • ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
  • அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது. 
  • உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.
  • உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வாளர்கள் 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

Vacancy: Global Fund Project (Ministry of Health)

October 26, 2020

Vacancy in Global Fund Project (Ministry of Health) 
Closing date: 01-11-2020. 
See the details below:


Vacancy: Global Fund Project (Ministry of Health) Vacancy: Global Fund Project (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5
Powered by Blogger.