Vacancies: Sri Lanka Telecom.

October 31, 2020

Vacancies in the Sri Lanka Telecom (SLT) 
Closing date: 10 days from 25-10-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri Lanka Telecom. Vacancies: Sri Lanka Telecom. Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Sri lanka Government Universities

October 31, 2020

Vacancies in the Sri lanka Government Universities. 
See the details below.


Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri lanka Government Universities Vacancies: Sri lanka Government Universities Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

October 31, 2020

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் எதிர்வரும் 01-03-2021 முதல் "இலங்கை, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்" என மாற்றப்படுகிறது. 
அந்த அடிப்படையில் இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் உருவாகிறது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை...

October 31, 2020

ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றத்திற்கான (ஒத்துமாறல்) விண்ணப்பம் ஒன்றை Online முறையில் கல்வியமைச்சு அறிமுகம் செய்துள்ளது. 
ஆசிரியர்களின் இடமாற்றத்தை இலகுபடுத்தும் 
நோக்கில் கல்வியமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  
NEMIS ற்குரிய Username மற்றும் Password ஐப் பயன்படுத்தி இத்தளத்தில் நுழைந்து விவரங்களை பதிவிடலாம். 
கீழுள்ள லிங்கை பயன்படுத்தி உரிய விண்ணப்பத்திற்கு செல்க. 
ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை... ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை...  Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை

October 31, 2020

இலங்கையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் பத்தாயிரத்தை கடந்தது. 
அதாவது நேற்று (30-10-2020) இரவு 9.55 வரையான நிலவரப்படி இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக காணப்பட்டது. 
நேற்றைய தினம் மாத்திரம் 633 நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை 10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்...

October 30, 2020

#பிரான்சில் கோவிட்-19 ஐ மிஞ்சிய இஸ்லாமோபோபியா
கோவிட் 19 இன் தாக்கம் ஐரோப்பாவில் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக எதிர்நோக்கியிருக்கும் குளிர் காலத்தில் இது உச்சமடையலாம் என்று எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில் ஐரோப்பாவில் தற்போது மோசமாக கோவிட் 19 தாக்கம் உள்ள பிரான்ஸ் அநாவசியமான இராஜதந்திர சிக்கல் ஒன்றிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 
சில தினங்களுக்கு முன்னர் பிரன்சிய கேலிச்சித்திர பத்திரிகை ஒன்று இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக அன்பு வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மத் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இன் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கேலிச்சித்திரங்களை வைத்து கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தியுள்ளார் ஒரு பேராசிரியர். அந்த வகுப்பில் உள்ள முஸ்லீம் மாணவர்களை மிக இழிவுபடுத்தி பேசியும் உள்ளார். தொடர்ந்து அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

#இஸ்லாமோபோபிய பிடித்த பிரான்சிய அதிபர்
குறித்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரன்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பல கருத்துக்களை பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 
முஸ்லிம்களாக பிரான்சின் பிரிவினைவாதிகள் என்றும், மத சகிப்புத் தன்மையற்றவர்கள் என்றும் மிக மோசமாக அவரது வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. 
 
#முஸ்லீம் நாடுகளில் எதிர்வினை
அதன் தொடர்ச்சியாக முஸ்லீம் நாடுகளில் பிரான்ஸ் மீது கடும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது. துருக்கி பிரான்ஸிற்கான தனது தூதரை திருப்பி அழைத்து தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதுடன் பிரான்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் ஐ மிகக்கடுமையான விமர்சித்தார் துருக்கி அதிபர் எர்டோகான். 
அத்துடன் தன்னுடைய உரையில் 
பிரான்சிய பொருட்களை புறக்கணிக்குமாறு முஸ்லீம் உலகிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்தும் உள்ளார். பிரான்சிய அதிபரும் இதற்கு பதிலடி கொடுக்க விவகாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. 
குறிப்பாக மத்திய கிழக்கின் முஸ்லீம் நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பிரான்சிய பொருட்களை அகற்ற ஆரம்பித்தன நிர்வாகங்கள். இந்த அலை மத்திய கிழக்கை தாண்டி பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மலேஷியா என முழு முஸ்லீம் உலகிலும் பரவ ஆரம்பித்த போது பிரான்ஸ் "பொருள் புறக்கணிப்பை கைவிட அரசுகள் மக்களிடம் கோர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் விடயம் இன்னும் தீவிரமானதே தவிர குறையவில்லை. 

#இஸ்லாத்தை ஏற்ற பிரான்சிய பணயக் கைதி
ஏன் திடீர் என்று இவ்வாறான சிக்கல் ஒன்றில் பிரான்ஸ் வலிந்து சிக்கியது என்பது ஒன்றும் புதிரல்ல. 
மாலி என்பது ஒரு ஆப்பிரிக்க நாடு. ஒரு காலத்தில் அது பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னரும் அதன் வளங்களை உறிஞ்சும் அட்டையாகவே பிரான்ஸ் இருந்து வந்தது. மாலியில் உருவான இஸ்லாமியவாத கிளர்ச்சி ஆயுதக் குழுக்கள் இதற்கு தடையாக இருந்தன. 
இவ்வாறான சூழலில் பிரான்சிய பெண் ஒருவர் மாலி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்படுகிறார். 4 ஆண்டுகள் பணயக் கைதியாக இருந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை பெற்று பிரான்ஸ் வந்த அவர் கோலாகலமாக வரவேற்கப்பட்டதுடன், அந்த நிகழ்வின் பின் இஸ்லாம் மதத்திற்கு தாம் மாறுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். இது பிரான்சில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
அவர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக சொல்லப்படும் கடிதம் ஒன்று மிக அவதானத்தை ஈர்த்தது. இந்தப் பின்னணியிலேயே கார்டூன் விவகாரம் பூதாகரமாக மாற்றப்படுகிறது. 

#கேலிச்சித்திரமான எர்டோகான்
இதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம் துருக்கிய அதிபர் எர்டோகான் ஐ இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் ஒன்றை அதே பத்திரிகை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாட்டுத் தலைவர்களை வெளிநாட்டு ஊடகங்கள் கேலிச்சித்திரங்களாக வரைவதை நாகரிகமான செயலாக கருத முடியாது. உள்நாட்டில் அரசியல் போட்டியில் அவை வரையப்பட்ட போதிலும் வெளிநாடுகளில் அவ்வாறு வரைவதையும் அதற்கு ஆட்சியாளர்கள் முட்டுக் கொடுப்பதையும் எங்கும் காண முடியாது என்ற போதிலும் பிரான்சிய ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதனை சரி கண்டுள்ளனர். 
இதன் விளைவாக துருக்கி கொதித்துப் போயுள்ளது. இது சில வேளை துருக்கியில் உள்ள ஐரோப்பிய முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
துருக்கி நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும். பொருளாதார ரீதியான நலிந்து போய் ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்ட தேசம், இன்று ஐரோப்பாவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தையுடைய நாடாக மாறியுள்ளது. இதனால் 
பல ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் துருக்கியில் உள்ளன. 
அதேநேரம் அண்மையில் மத்திய தரைக்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரும் இயற்கை வாயுப் படுக்கையின் உரிமை தொடர்பில் ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், சைப்ரஸ் போன்றவற்றோடு துருக்கி முரண்பாடுகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

#பிரான்சில் வெடித்த குண்டு
இந்த பின்னணியில் நேற்றைய தினம் பிரான்சின் நகரொன்றில் குண்டு ஒன்று வெடித்தத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையே என்று பிரான்சின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய வெறுப்பு செயற்பாடுகளின் பின்விளைவு இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத செயற்பாடுகளே என்பதை பிரான்ஸ் போன்ற ஒரு பலம்மிக்க இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் விளங்காதிருக்க மாட்டார்கள். எனவே, பிரான்ஸ் வேறு ஏதோ ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. 
-  fபயாஸ் MA f பரீட்.
பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு...

October 30, 2020

PCR பரிசோதனை என்ற போர்வையில் வீடொன்றுக்கு போலி PHI குழுவினர் வருகை தந்த சம்பவம் மஹவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்று (29) மாலை 3.30 மணியளவில் மஹவ, கெத்தபஹூவ என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு 
பொது சுகாதார பரிசோதகர்கள் எனக்கூறி பெண்ணொருவர் உட்பட மூவர் வந்துள்ளனர். பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்தொன்றை குடிக்க கொடுத்துள்ளனர். 
அதை குடித்ததும் நித்திரையான அவர்கள் மீண்டும் அடுத்த நாள் காலையில் எழும்பி பார்த்த பொழுது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 
நாடு உள்ள நிலைமையில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு... PCR பரிசோதிப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலி PHI குழு... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை...

October 30, 2020

பாரம்பரிய உள்நாட்டு மருத்துவ முறையின் மூலம் கொரோனா தொற்று நோயாளிக்கான சிகிச்சையின் மூலம் நல்ல பெறுபேறுகளை பெற்றுகொள்ள முடியும் என்பது நாளாந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த வகையில் தனிமைப்டுத்தலில் ஈடுப்படுத்தபட்டுள்ளவர்களுக்காக சுதேச மருந்து வகைகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 
இன்று கண்டியில் நடைபெற்ற செயலமர்விற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
சுதேச வைத்திய முறையை பயன்படுத்துவதில் சிலர் பெருமளவு விருப்பம் கொள்ளாதது கவலைக்குறிய விடயமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை... தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆரம்பமானது சுதேச மருந்து பாவனை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை...

October 30, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 25ம் நாள் அதாவது வியாழக்கிழமை (29) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேலியகொடை மீன் சந்தையில் காணப்படும் காவல் துறை பாதுகாப்பு அரணில் கடமையாற்றிய காவல் துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையை தொடர்ந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அங்கு கடமையாற்றிய 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 
  • வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் போது மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு சீட்டினை ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என அறிவிப்பு. 
  • தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த பெண்ணிண் உடல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரது PCR பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை. 

  • ப்ரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்றுதியானது. 
  • கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான போதியளவு கருவிகள் நாட்டில் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. 
  • களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. அந்தவகையில் மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • பொகவந்தலாவ, கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இரு பெண்களுக்கு கொரோனா உறுதியானது. இவர்கள் பேலியகொடை கொத்தணியோடு தொடர்புள்ளவர்கள். 
  • இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
  • நேற்று (28) ஜப்பான் செல்லவிருந்த காலி, லபுதுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • பேலியகொடை கொவிட் கொத்தணியை விட பாரிய அளவிலான கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் சுகாதார அமைப்புக்கு அதனை தாங்கிக்கொள்ள சக்தி இல்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • பிரண்டிக்ஸ் கோவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்யும் கொழும்பு குற்றவியல் பிரிவிடம் இருந்து வேறு ஒரு பிரிவினருக்கு குறித்த விசாரணைகளை மாற்றுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 
  • நுவரெலியாவில் உல்லாசப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார். 
  • தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் மற்றும் அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதி. 
  • நாரஹேன்பிடயில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு மற்றும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலம்´ த்தினுள் கிடைத்த அனுபவங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்று திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இன்றைய தினம் (29) 586 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews 
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

Vacancy: Global Fund Grant (Ministry of Health)

October 30, 2020

Vacancy in the Global Fund Grant (Ministry of Health) 
 Closing date: 08-11-2020. 
See the details below.


Vacancy: Global Fund Grant (Ministry of Health) Vacancy: Global Fund Grant (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

Vacancies: UNHCR

October 30, 2020

Vacancies in the UNHCR. 
Closing date: 08-11-2020. 
See the details below.


Vacancies: UNHCR Vacancies: UNHCR Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை...

October 30, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 24ம் நாள் அதாவது புதன்கிழமை (28) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், வழமையான அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது. வெளி நபர்கள் அந்த வீடுகளுக்கு செல்ல முடியாது. மற்றும் குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர், காவல்துறை பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும், குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பாராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான நிலையில், அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகைளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம். 
  • முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்றும் கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் உள்ளவர்கள் மட்டும் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவிப்பு. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

  • கொட்டகல - பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் - யொக்ஸ்போர்ட் பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் பேலியகொட கொத்தணியோடு தொடர்புள்ளவர். 
  • மேல் மாகாணம் முழுவதும் நாளை (29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 02 வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஆலோசனை வழங்கினார். 
  • களுபோவில போதனா வைத்தியசாலையின் காது, தொண்டை மற்றும் மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ஒருவரின் தந்தைக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது, 
  • தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த 3 மாத சிசு ஒன்றுக்கும் அதன் தாய்க்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்தார். 
  • நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமானது என்பதால் மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். 
  • நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடையாக அமையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து மாணவர்களுக்கு ஆக கூடிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
  • இன்றைய தினம் 335 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை...

October 29, 2020

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை Z-Score வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது. 
ஆனால் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தினை கையேற்பதற்கு அதிகாரிகள் முன்னிலையாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
-ஹிரு
UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... UGC ற்கு வழங்கப்பட்ட முறைப்பாடு.. பொறுப்பேற்க எவருமில்லை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5
Powered by Blogger.