திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை...

November 02, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 27ம் நாள் அதாவது சனிக்கிழமை (31) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் இன்று (31) தொடக்கம் மீண்டும் திறப்பு. 
  • தற்போது இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. 
  • மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 
  • கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு. 
  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுப்பு. 
  • பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட இதுவரை தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 78 ஆக உயர்வு. 

  • இலங்கையில் 20ஆவது கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 12 ஐச் சேர்ந்த இந்தப் பெண்மணி ஒரு நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டது. 
  • மேல் மாகாணத்திற்கு உள்வரவோ அல்லது வௌியேறவோ விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மட்டுப்பாடு பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை அதிகரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான விஷேட புகையிரதம் மற்றும் பஸ் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிப்பு. 
  • வத்தள பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம். ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என அறிவிப்பு. 
  • பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொவிட்-19 வைரசு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுமானால் 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவிப்பு. 
  • கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் பல்வேறு இடங்களிலிருந்தும் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • பேருவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உயர்தர மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதற்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினம் 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 02, 2020

26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக...

November 01, 2020

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
கடந்த வருடத்தை விட இம்முறை 10,000 அதிகமாகும். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேரும் இம்முறை மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Savings Bank

November 01, 2020

Vacancies in the Sri Lanka Savings Bank. 
Closing date: 04-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri Lanka Savings Bank Vacancies: Sri Lanka Savings Bank Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா

November 01, 2020

பாராளுமன்றத்திற்கு சென்ற பிரபல பத்திரிகை ஒன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர் வேறொரு பத்திரிகையில் கடமையாற்றும் ஊடகவியலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை பாராளுமன்றம் இறுதியாக நடந்த இரண்டு தினங்களிலும் கடமைக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை...

November 01, 2020

கொரோனா அறிகுறிகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களால் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட ஹோமாகம, தொலஹேன ஹரித பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் 25 வயது கொண்ட 
விசேட தேவையுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. 
இந்த பெண்மணி மஹரகம பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை நிலையத்துக்கு சென்று மீனை கொள்வனவு செய்துள்ளார். அந்த விற்பனை நிலையத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் நேற்று காலை இந்த மகன் இறந்து கிடப்பது பிரதேசவாசிகளால் கண்டறியப்பட்டுள்ளது. 
தாயுடன் சேர்த்து பிள்ளையையும் அழைத்துச் சென்றிருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
- நிவ்ஸ்வய.
கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை...

November 01, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 26ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • அவசர நிலைமையின் போது சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதாவது வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

  • நேற்று (29) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் திங்கட் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் தெரிவிப்பு. 
  • ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில் விசேட சேவைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் 62 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் களுத்துறை மாவட்டத்தில் 27 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு. 
  • கொழும்பு சமுர்த்தி திணைக்களத்தில் சேவையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டது. 
  • குருநாகல் நகர சபை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குருணாகல், வில்கொட கிராமம் தனிமைப் படுத்தப்பட்டது. 
  • ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் கொழும்பிலுள்ள முன்னணி ஹோட்டலில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமணம் இன்று (30) நடைபெற்றது. பின்னர் போலீசார் தலையிட்டு அதை நிறுத்தினர். 
  • இன்று (30) காலை வரையான நிலவரப்படி இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தை தவிர ஏனைய 24 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • PCR பரிசோதனை என்ற போர்வையில் வீடொன்றுக்கு போலி PHI குழுவினர் வருகை தந்து தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் சம்பவம் நேற்று (29) மாலை மஹவ பிரதேசத்தில் பதிவாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான தரமான கருவிகள் நாட்டில் இல்லாத நிலையில் கொரோனா தொற்றினை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய ஏனைய நாடுகளிடம் அரசாங்கம் ஏன் உதவி பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 
  • இன்றைய தினம் 633 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

Vacancies: UNIVOTEC (University of Vocational Technology)

October 31, 2020

Vacancies in the UNIVOTEC (University of Vocational Technology) 
Closing date: 16-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: UNIVOTEC (University of Vocational Technology) Vacancies: UNIVOTEC (University of Vocational Technology) Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: National Water Supply & Drainage Board

October 31, 2020

Vacancies in the National Water Supply & Drainage Board. 
Closing date: 09-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: National Water Supply & Drainage Board Vacancies: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Lake House

October 31, 2020

Vacancies in the Lake House (The Associated Newspapers of Ceylon Limited) 
Closing date: 7 Working days from 25-10-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.
Vacancies: Lake House Vacancies: Lake House Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Telecom.

October 31, 2020

Vacancies in the Sri Lanka Telecom (SLT) 
Closing date: 10 days from 25-10-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri Lanka Telecom. Vacancies: Sri Lanka Telecom. Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Sri lanka Government Universities

October 31, 2020

Vacancies in the Sri lanka Government Universities. 
See the details below.


Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri lanka Government Universities Vacancies: Sri lanka Government Universities Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

October 31, 2020

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் எதிர்வரும் 01-03-2021 முதல் "இலங்கை, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்" என மாற்றப்படுகிறது. 
அந்த அடிப்படையில் இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் உருவாகிறது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5
Powered by Blogger.