பல்கலைக்கழக அனுமதி: மேன்முறையீடு செய்தல் தொடர்பான அறிவித்தல்...
irumbuthirai
November 03, 2020
உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைவாகவும் முடிந்த வரையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கொள்கைக்கு அமைவாகவும் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அந்தவகையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மருத்துவ பீடத்திற்கு 371, பொறியியல் பீடத்திற்கு 405, சட்ட பீடத்திற்கு 126, உயிரியல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்நுட்ப பீடத்திற்கு 350, முகாமைத்துவ பீடத்திற்காக 900, கலைப்பீடத்திற்காக 815, விவசாயம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக 6,000 மாணவர்களும் இம்முறை மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான மேல் முறையீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ (www.ugc.ac.lk) இணையத்தளத்தின் ஊடாக அல்லது appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முலம் சமர்பிக்க முடியும் என்று
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்; சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக அனுமதி: மேன்முறையீடு செய்தல் தொடர்பான அறிவித்தல்...
Reviewed by irumbuthirai
on
November 03, 2020
Rating: