Courses: NIBM (National Institute of Business Management)

November 04, 2020

Courses at NIBM (National Institute of Business Management) 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


Courses: NIBM (National Institute of Business Management) Courses: NIBM (National Institute of Business Management) Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை...

November 04, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 28ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எஹலியகொடை பொலிஸ் பிரிவு, குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. இதேவேளை, 011 7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

  • பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 
  • பங்குச் சந்தையின் அனைத்து வித செயற்பாடுகளும் நாளை திங்கட் கிழமை (02) முதல் வழமைக்கு திரும்புவதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. 
  • கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையானது 125ஆக அதிகரிப்பு. 
  • கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • கொழும்பு-புதுகடை நீதிமன்ற வளாக பகுதிக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனையை 10 ஆவது நாளில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கினார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி நுவரெலியா பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள 15 நபர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென ஐக்கி தேசி கட்சி தெரிவிப்பு. 
  • நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களில் 90 வீதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்றால் நாட்டில் 21 ஆவது மரணம் சம்பவித்துள்ளது. வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 
  • இன்றைய தினம் 397 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 03, 2020

02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை...

November 03, 2020

#அரசியல், பொருளாதார சிக்கல்களை மிஞ்சிய கோவிட் 19

கோவிட் 19 ஐ மிஞ்சிய 20 என்ற தலைப்பில் கடந்த கடைசி கட்டுரையில் முதல் உபதலைப்பை இட்டிருந்தோம். இன்று அதன் மறுதலையான தலைப்பை இடும் அளவிற்கு கோவிட் 19 இன் தீவிரம் அதிகரித்துள்ளது. 
கோவிட் 19 இன் இரண்டாம் அலை மிக மோசமாக இலங்கையை தாக்கியுள்ளது. சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பரவலானது இரண்டாம் அலை காரணமாக தறிகெட்டு பரவும் நிலை உருவாகியுள்ளது. 
குறிப்பாக இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகையை விட கோவிட் 19 தொடர்பான விவகாரங்களே ஊடகங்களில் முதன்மை இடம் பெற்றன. 
#அமைச்சரவைக் கூட்டம்
கடந்த வாரத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வழமையாக ஓரிரு மணித்தியாலங்களில் நிறைவடையும் அமைச்சரவைக் கூட்டம் இம்முறை சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. கோவிட் 19 இன் இரண்டாம் அலை மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகை பற்றிய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளமையால் இது நீண்ட நேரம் நீடித்துள்ளது. இவை தொடர்பில் நீண்ட விளக்கங்களை ஜனாதிபதி வழங்கினார். 
எதிர்க்கட்சிகள் சொல்வது போன்று அமெரிக்க இராஜாங்க செயலரின் வருகை MCC ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கானது அல்ல என்றும், அது தொடர்பில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியதுடன், 
கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், முழு நாட்டையும் மீண்டும் லொக் டவுன் செய்யும் நோக்கம் இல்லையென்றும், நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். 

#பொம்பியோ வருகை
கடந்த புதன் கிழமை இரவு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தார். இந்தியா, மாலைதீவு மற்றும் இந்தோனேஷிய விஜயத்தில் திடீர் என்று இலங்கையையும் இணைத்துக் கொண்டு, சுமார் 12 மணிநேர விஜயமாக இலங்கைக்கு வந்து சென்றார் பொம்பியோ. புதன் கிழமை காலை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். 
MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் அல்லது அது தொடர்பான தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படலாம் என்று பலரும் எதிர்வு கூறிய போதிலும் நாம் ஏற்கனவே சொன்னது போன்று அவ்வாறான எவையும் இங்கே நடைபெறவில்லை. டிரம்ப் ஜனாதிபதியின் பின்னரான அமெரிக்க சீன உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமே இந்த பயணத்திற்கான காரணமாகும். 
பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர் "இருவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்" என்று சொன்னமை, "சீன கடன் பிடியில் இலங்கை சிக்க வைக்கப்பட்டுள்ளது" என்று சொன்னமை மற்றும் அவற்றுக்கான சீன அரசின் பதில்கள் என்பன சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. சந்திப்பின் போது "யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப சீனா எமக்கு உதவியது. அவ்வாறில்லாமல் சீனாவின் கடன் பிடியில் நாம் சிக்கவில்லை" என்று பொம்பியோவிடம் ஜனாதிபதி தெரிவித்தமை முக்கிய திருப்பமாக இருந்தது. 
அவ்வாறே அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இலங்கை தொடர்ந்தும் அணிசேராக் கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்தார். 

#பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக கோவிட் 19# 
இம்மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகின்றது. பொதுவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுவது வழமை. எனினும் இவ்வாரம் ஒரு நாளுக்கு அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது கோவிட் 19 காரணம் காட்டி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தினேஷ், ஜோன்ஸ்டன், கிரிஎல்ல, டலஸ், பீரிஸ், வாசு, அமரவீர, அலி சப்ரி, டிலான், ஹக்கீம், மஹிந்த சமரசிங்க ஆகியோர் பங்குபற்றிய கட்சித்தலைவர் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட் 19 சவாலிடையே பாராளுமன்றத்தை நடாத்திச் செல்வது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், வாரம் முழுவதும் பாராளுமன்ற கூட்டத்தை நடாத்திச் செல்வது பொருத்தமானது அல்ல என்று எல்லா கட்சித் தலைவர்களுமாற் போல் கருத்து தெரிவித்தனர். 
3 ஆம் திகதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மருத்துவ சட்டமூலத்தின் விதிகளை விவாதித்து நிறைவற்றிக் கொள்வது என்றும் 2 மணித்தியாளங்களுக்கு மட்டும் கூட்டத்தை மட்டுப்படுத்துவதுடன், வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களாக மாத்திரம் பாராளுமன்றிற்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே இவ்வாண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்புப் பிரேரணையை எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. 

#பட்ஜெட்க்கு தடையாகும் கோவிட் 19#
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. முன்னர் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஒரு வார காலமும், குழு நிலை விவாதம் ஒரு மாத காலமும் நடைபெறுவது வழக்கம். எனினும் இம்முறை அவற்றுக்கான கால எல்லைகள் குறைக்கப்படுவதற்கான சாத்தியமே உள்ளது. அவற்றிலும் சில அமைச்சுக்களின் செலவுத் தலைப்புகள் தொடர்பில் குழு நிலை விவாதம் நடத்தாமல், நிலையியற் குழுக்களுக்கு அனுப்பி கலந்துரையாடலின் பின்னர் குழு நிலையில் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தி வருகிறது.  

#சஜித் ஆனந்த தேரர் சந்திப்பு
 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டு மெதமூலன வலவ்வ ஜன்னலில் தொங்கி மக்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் போஷித்து, புது வழிகாட்டி, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு கொழும்பு அபயாராம விகாராதிபதி மேல் மாகாண சங்க நாயக்க முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் பங்களிப்பு மறுக்க முடியாதது. 
20 க்கு எதிராக பகிரங்கமாக முரண்பட்டு நின்ற தேரரை கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்தித்தமை முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. அதன் போது மத மறுமலர்ச்சிக்காக சஜித் மேற்கொள்ளும் "சசுனட அருண' வேலைத்திட்டம் குறித்தும் தேரருக்கு தெளிவுபடுத்தினார். கொரோனா, 20க்கு ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் சஜித் தேரரிடம் பேசினார். 

#சஜித்க்கு நன்றி தெரிவித்த சவேந்ர# 
இறுதி யுத்தம் நடைபெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி, இலங்கை இராணுவத்தின் முக்கிய படைப்பிரிவு ஒன்றின் கமாண்டராக கடமையாற்றிய தற்போதைய இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பயணத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. 
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது குறித்த தடையை நீக்க கோருமாறு எதிர்க்கட்சியினர் அரசிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் தொடர்ச்சியாக இது குறித்து பேசினார். இது குறித்து தமது நன்றிகளை சஜித்க்கு தெரிவித்துக் கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா. 

#ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமை யாருக்கு
கடந்த வாரம் ஐமச இன் கூட்டம் நடைபெற்றது. "Sir டயானா (கமகே) சொல்கிறார் இந்தக் கட்சி அவருடையது என்று" என ஆரம்பித்தார் ஹேஷா எம்பி. "கட்சி தாவியவர்களை கட்சியை விட்டு நீக்க எடுத்த முடிவு நல்லது. கட்சி தாவித் திரியும் தவளைகளுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்" என்று சொன்னார் சாமிந்த விஜேசிறி எம்பி. 
 "அது மட்டுமல்ல எம்மைப் பற்றியும் ஒவ்வொரு வதந்திகள் உலாவுகின்றன" என இணைத்து கொண்டார் மயந்த எம்பி. "ஆளாளுக்கு சொல்லும் கதைகளுக்கு நாம் பதிலளிக்க அவசியமில்லை. அவர்கள் பொய்களை ஏந்திக்கொண்டு சுற்றட்டும். இறுதியில் அவர்களுக்கு எஞ்சுவது பொய்களை எடுத்துக்கொண்டு சுற்றிய களைப்பு மட்டுமே" என சஜித் கூறினார். 
தொடர்ந்தும் "இந்த வதந்திகளை பரப்பும் நபர்கள் யார் என்பதையும், அவர்கள் என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். எமது வேலை மக்களை வெற்றியடையச் செய்வது" என்றும் கூறினார். 
 
#ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து சஜித்க்கு வந்த முறைப்பாடு
கம்பஹா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர் சஜித் ஐத் தொடர்பு கொண்டு தமது குறைகளைக் கூறி வருகின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் "நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நாட்டிற்கு வெளிநாட்டு செலாவனியைக் கொண்டு வருகிறோம். இப்போது எம்மை யாருமே கவனிப்பதில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. போடிங்களில் எம்மை வெளியேற்றி விட்டார்கள். வீதிக்கு இறங்கினால் போக முடியாது. நாங்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். குறைந்த பட்சம் அவர்களைப்பற்றியாவது யாரும் சிந்திப்பதில்லை" எனக் கூறினார். உடன் இது தொடர்பில் விசாரித்து அறிந்து கொண்ட சஜித் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சில பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். 
அத்துடன் இது தொடர்பில் ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கும் விளக்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன் சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் கட்டளை பிறப்பித்தார். இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. கொரோனா பரவலின் தீவிரம் இவ்வாரம் குறையலாம். கூடலாம். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசியல் விவகாரங்களின் சூடு தங்கியுள்ளது. காலம் பதில் சொல்லும். 
- fபயாஸ் MA f பரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

பல்கலைக்கழக அனுமதி: மேன்முறையீடு செய்தல் தொடர்பான அறிவித்தல்...

November 03, 2020

உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைவாகவும் முடிந்த வரையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கொள்கைக்கு அமைவாகவும் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 
அந்தவகையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மருத்துவ பீடத்திற்கு 371, பொறியியல் பீடத்திற்கு 405, சட்ட பீடத்திற்கு 126, உயிரியல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்நுட்ப பீடத்திற்கு 350, முகாமைத்துவ பீடத்திற்காக 900, கலைப்பீடத்திற்காக 815, விவசாயம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக 6,000 மாணவர்களும் இம்முறை மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான மேல் முறையீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ (www.ugc.ac.lk) இணையத்தளத்தின் ஊடாக அல்லது appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முலம் சமர்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்; சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக அனுமதி: மேன்முறையீடு செய்தல் தொடர்பான அறிவித்தல்... பல்கலைக்கழக அனுமதி: மேன்முறையீடு செய்தல் தொடர்பான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

இரண்டு வாரங்களில் பாடசாலை ஆரம்பமாகுமா?

November 03, 2020

பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி (Online) மூலம் நேற்று (2) நடைபெற்றது. 
இந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
இதில் தற்போதைய கொரோனா நிலையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பித்தலை பிற்போட தீர்மானிக்கப்பட்டது. 
அந்த வகையில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக 
அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 ஆனால் இரண்டு வாரங்களிலாவது பாடசாலைகளை மீள ஆரம்பிக்கலாமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் சுகாதாரத் துறையின் பல்வேறு கூற்றுக்கள் கருத்துக்களை அவதானிக்கும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையாகவே அது கருதப்படுகிறது. 
இதேவேளை ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சாதாரணதரப் பரீட்சையை உரிய தினத்தில் நடத்தலாமா என்பது கேள்விக்குறியே...
இரண்டு வாரங்களில் பாடசாலை ஆரம்பமாகுமா? இரண்டு வாரங்களில் பாடசாலை ஆரம்பமாகுமா? Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT)

November 02, 2020

Courses @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
Closing date: 27-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.

Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Courses: Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்...

November 02, 2020

07 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று (01) முதல் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் உம்ரா கடமையை நிறைவேற்ற சவுதி அனுமதி வழங்கியுள்ளது. 
முதல் நாளான நேற்று 
பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 10,000 யாத்ரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
வெளிநாட்டு யாத்ரீகர்கள் சௌதி அரேபியாவுக்கு வந்த பின்னர் 03 நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். 
அதேபோன்று 18-50 வரையான வயதுவயதுப்பிரிவினர் மாத்திரமே தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். 
சௌதியில் படிப்படியாக கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாட்டு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள பள்ளிவாயல்களையும் திறந்து வருகிறது. 
முன்னதாக, சௌதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் உம்ரா கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்... மீண்டும் உம்ரா கடமை.... அனுமதி கிடைக்கும் வயதுப் பிரிவினர் இவர்கள்தான்... Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்... இன்று நடைபெறுகிறது Online கூட்டம்....

November 02, 2020

3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். 
எனவே பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இன்று (2) நடைபெறவிருப்பதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா தெரிவித்தார். 
இதேவேளை தற்பொழுது மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான பீடத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்... இன்று நடைபெறுகிறது Online கூட்டம்.... பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்... இன்று நடைபெறுகிறது Online கூட்டம்....  Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா!

November 02, 2020

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வந்த வைத்தியருக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் இவருடன் சேவையாற்றிய இன்னும் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா! திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா! Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை...

November 02, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 27ம் நாள் அதாவது சனிக்கிழமை (31) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் இன்று (31) தொடக்கம் மீண்டும் திறப்பு. 
  • தற்போது இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. 
  • மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 
  • கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு. 
  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுப்பு. 
  • பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட இதுவரை தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 78 ஆக உயர்வு. 

  • இலங்கையில் 20ஆவது கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 12 ஐச் சேர்ந்த இந்தப் பெண்மணி ஒரு நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டது. 
  • மேல் மாகாணத்திற்கு உள்வரவோ அல்லது வௌியேறவோ விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மட்டுப்பாடு பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை அதிகரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான விஷேட புகையிரதம் மற்றும் பஸ் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிப்பு. 
  • வத்தள பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம். ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என அறிவிப்பு. 
  • பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொவிட்-19 வைரசு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுமானால் 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவிப்பு. 
  • கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் பல்வேறு இடங்களிலிருந்தும் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • பேருவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உயர்தர மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதற்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினம் 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 02, 2020

26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 26-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக...

November 01, 2020

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
கடந்த வருடத்தை விட இம்முறை 10,000 அதிகமாகும். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேரும் இம்முறை மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.