Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

November 06, 2020

Vacancies in the Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 20-11-2020. 
See the details below.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

November 06, 2020

Vacancy in the Urban Development Authority 
Closing date: 10 days from 01-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


oop
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancies: Ceylon Shipping Corporation Ltd.

November 06, 2020

Vacancies in the Ceylon Shipping Corporation Ltd. 
Closing date: 14-11-2020. 
See the details below:


Vacancies: Ceylon Shipping Corporation Ltd. Vacancies: Ceylon Shipping Corporation Ltd. Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

November 06, 2020

ஜுமுஆத் தொழுகை தொடர்பான வழிகாட்டலை அ.இ.ஜ.உலமா பின்வருமாறு தனது ஊடக அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 

ACJU/FRL/2020/21-238 
2020.11.05 
1442.03.17 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ 

எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19 

இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது. 

நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். 

வஸ்ஸலாம். 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் 
செயலாளர், பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

மீண்டும் நாடு பூராகவும் ஆரம்பமானது கிளினிக் மருந்து விநியோகம்: விபரம் இதோ....

November 05, 2020

ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் தம்மிடம் இல்லாத கிளினிக் நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக மீண்டும் நேற்று(04) தொடக்கம் நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பமானது. 
இதற்கு நோயாளர் வதிவிடத்தின் முகவரி, தொலைபேசி விபரங்கள் அவசியம். தமது க்ளினிக் சிகிச்சை புத்தகத்துடன் சரியான முகவரியை வழங்கவில்லையாயின், தொலைபேசி மூலம் நீங்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைக்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை பூரணப்படுத்த முடியும். 
அப்பொழுது உங்களது வைத்தியசாலை பணியாளர்கள் உங்களுக்கான மருந்து பொதிகளை தயார் செய்து முகவரி, தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு தபாலை விநியோகிக்கும் பணியாளர்களிடம் ஒப்படைப்பர். இதனை தொடர்ந்து தபாலை விநியோகிக்கும் பணியாளர்கள் மூலம் உங்களது வீட்டிளிலேயே மருந்துகளை கொண்டு வந்து ஒப்படைக்கப்படும்.
மீண்டும் நாடு பூராகவும் ஆரம்பமானது கிளினிக் மருந்து விநியோகம்: விபரம் இதோ.... மீண்டும் நாடு பூராகவும் ஆரம்பமானது கிளினிக் மருந்து விநியோகம்: விபரம் இதோ.... Reviewed by irumbuthirai on November 05, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-11-2020 நடந்தவை...

November 04, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 30ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வயது இடைவெளியானது பாரிய தாக்கத்தை செலுத்தாது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாப்பிரேம தெரிவிப்பு. 
  • நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்தது. 
  • கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறைபடுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழிகாட்டல் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டு, அது சுகாதார அமைச்சருக்கும் கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டுமையத்தின் பிரதானிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

  • வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (09) மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த அவசியமாயின், அது குறித்து தாங்கள் தொழில்நுட்ப பரிந்துரைகளை அவதானித்து செயற்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். 
  • பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இலங்கையில் மேலும் இருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த 68 மற்றும் 61 வயது பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதைதொடர்ந்து இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. 
  • 3 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை ஒலி/ ஔிபரப்பு செய்யும் கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு. 
  • யட்டியாந்தோட்ட, இங்கிரியாவத்த பகுதியை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் தந்தை இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 
  •  ஹட்டன் நகரில் தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 
  • நான் கடலுக்கு பலியானால் கொரோனா தொற்றை நாட்டிலிருந்து ஒழிக்க முடியுமாயின், அதற்கும் நான் தயார் என இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். 
  • கொவிட்-19 பரவல் காரணமாக தொழிற்துறையினருக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக 0713 976 406, 0113 158 117, 0770 820 775 ஆகிய இலக்கங்களை கைத்தொழில் அமைச்சு வெளியிட்டது. 
  • வைத்திய கட்டளைச் சட்டத்திற்கு அமைவான இரண்டு கட்டளைச் சட்டங்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
  • கிளிநொச்சியில் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் 25 மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரை 24 மாவட்டங்களிலேயே கொரோனா பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. 
  • இன்றைய (3) தினத்தில் 409 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

Covid-19: துரித தொலைபேசி இலக்கங்கள்

November 04, 2020

Covid-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு துரித தொலைபேசி இலக்கங்களை (Hotline) அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு: 
கடமை அதிகாரி - (Duty Officer) – 011 2860002 / 0112860003 / 0112860004 மின்னஞ்சல் முகவரி (E-mail) – covid195120@gmail.com 

கடற்படை மற்றும் விமானப்படை கடமை அதிகாரி - 011 4055932 (Navy and Air Force Duty Officer) 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு – 011 3688664 / 0113030864 (Epidemiology Unit of the Ministry of Health) 

இதற்கமைவாக கொவிட் 19 வைரசு மற்றும் அது தொடர்பான அவசர மற்றும் முக்கிய அறிவிப்பு / விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட உரிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்
Covid-19: துரித தொலைபேசி இலக்கங்கள் Covid-19: துரித தொலைபேசி இலக்கங்கள் Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-11-2020 நடந்தவை...

November 04, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 29ம் நாள் அதாவது திங்கட்கிழமை (02) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் 14 பேருக்கு கொரோனா உறுதி. 
  • மேல் மாகாணத்தில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை அமுலாக்கும் அனுமதி வழங்கப்பட்டது. நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்களை விநியோகிக்கலாம். அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பான தகவல்களைப் பெற முடியும். 
  • மொத்தமாக 89 அரச நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவிப்பு. 

  • பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி (Online) மூலம் இன்று (2) நடைபெற்றது. இதில் தற்போதைய கொரோனா நிலையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பித்தலை 2 வாரங்களால் அதாவது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிற்போட தீர்மானிக்கப்பட்டது. 
  • வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பு. 
  • நாடளாவிய ரீதியில் சதொச நிறுவனத்தின் இணையத்தளத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பொருட்களை சலுகை விலையில் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவின் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. 
  • மேல்மாகாணத்தில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் (மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம்) நாளை மறுதினம் (04) திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, இரத்மலானை, நாராஹென்பிட, போகுந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலைய ஊழியர்களுக்கு நாளை பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைக் கண்காணிக்க சிவில் உடையில் உளவுச் பிரிவு உத்தியோகத்தர்களையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (02) இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 
  • கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தற்கொலை செய்த நிலையில் பானந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட 27 வயதுடைய நபரின் பிரேத பரிசோதனையின் போது செய்யப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இன்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே இது 22 ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் தற்கொலை செய்தவர் என்பதனால் அந்த அறிவிப்பு பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. 
  • ஊரடங்கு அனுமதிப்பத்திரம் அவசியமானவர்கள் secretary@mws.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிப்பு. 
  • கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாதகம, மாவனல்லை, புளத்கொஹூபிடிய காவற்துறை அதிகாரப் பிரிவுகள் கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் கிரிஉல்ல காவற்துறை அதிகாரப் பகுதிகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் 275 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

MA / PG DIP. IN ENGLISH & EDUCATION (University of Sabaragamuwa)

November 04, 2020

MA / PG DIP. IN ENGLISH & EDUCATION (University of Sabaragamuwa) 
Closing date: 07-12-2020. 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


MA / PG DIP. IN ENGLISH & EDUCATION (University of Sabaragamuwa) MA / PG DIP. IN ENGLISH & EDUCATION (University of Sabaragamuwa) Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

Courses: NIBM (National Institute of Business Management)

November 04, 2020

Courses at NIBM (National Institute of Business Management) 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


Courses: NIBM (National Institute of Business Management) Courses: NIBM (National Institute of Business Management) Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை...

November 04, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 28ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எஹலியகொடை பொலிஸ் பிரிவு, குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாபிடிய பொலிஸ் பிரிவிற்கு நாளை காலை 05 மணி முதல் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 05.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. இதேவேளை, 011 7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

  • பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 
  • பங்குச் சந்தையின் அனைத்து வித செயற்பாடுகளும் நாளை திங்கட் கிழமை (02) முதல் வழமைக்கு திரும்புவதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. 
  • கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையானது 125ஆக அதிகரிப்பு. 
  • கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • கொழும்பு-புதுகடை நீதிமன்ற வளாக பகுதிக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. 
  • வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனையை 10 ஆவது நாளில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கினார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி நுவரெலியா பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள 15 நபர்களை அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென ஐக்கி தேசி கட்சி தெரிவிப்பு. 
  • நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களில் 90 வீதமானவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்றால் நாட்டில் 21 ஆவது மரணம் சம்பவித்துள்ளது. வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 
  • இன்றைய தினம் 397 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 04, 2020 Rating: 5

02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 03, 2020

02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 02-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை...

November 03, 2020

#அரசியல், பொருளாதார சிக்கல்களை மிஞ்சிய கோவிட் 19

கோவிட் 19 ஐ மிஞ்சிய 20 என்ற தலைப்பில் கடந்த கடைசி கட்டுரையில் முதல் உபதலைப்பை இட்டிருந்தோம். இன்று அதன் மறுதலையான தலைப்பை இடும் அளவிற்கு கோவிட் 19 இன் தீவிரம் அதிகரித்துள்ளது. 
கோவிட் 19 இன் இரண்டாம் அலை மிக மோசமாக இலங்கையை தாக்கியுள்ளது. சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பரவலானது இரண்டாம் அலை காரணமாக தறிகெட்டு பரவும் நிலை உருவாகியுள்ளது. 
குறிப்பாக இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகையை விட கோவிட் 19 தொடர்பான விவகாரங்களே ஊடகங்களில் முதன்மை இடம் பெற்றன. 
#அமைச்சரவைக் கூட்டம்
கடந்த வாரத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வழமையாக ஓரிரு மணித்தியாலங்களில் நிறைவடையும் அமைச்சரவைக் கூட்டம் இம்முறை சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. கோவிட் 19 இன் இரண்டாம் அலை மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகை பற்றிய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளமையால் இது நீண்ட நேரம் நீடித்துள்ளது. இவை தொடர்பில் நீண்ட விளக்கங்களை ஜனாதிபதி வழங்கினார். 
எதிர்க்கட்சிகள் சொல்வது போன்று அமெரிக்க இராஜாங்க செயலரின் வருகை MCC ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கானது அல்ல என்றும், அது தொடர்பில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியதுடன், 
கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், முழு நாட்டையும் மீண்டும் லொக் டவுன் செய்யும் நோக்கம் இல்லையென்றும், நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். 

#பொம்பியோ வருகை
கடந்த புதன் கிழமை இரவு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தார். இந்தியா, மாலைதீவு மற்றும் இந்தோனேஷிய விஜயத்தில் திடீர் என்று இலங்கையையும் இணைத்துக் கொண்டு, சுமார் 12 மணிநேர விஜயமாக இலங்கைக்கு வந்து சென்றார் பொம்பியோ. புதன் கிழமை காலை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். 
MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் அல்லது அது தொடர்பான தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படலாம் என்று பலரும் எதிர்வு கூறிய போதிலும் நாம் ஏற்கனவே சொன்னது போன்று அவ்வாறான எவையும் இங்கே நடைபெறவில்லை. டிரம்ப் ஜனாதிபதியின் பின்னரான அமெரிக்க சீன உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமே இந்த பயணத்திற்கான காரணமாகும். 
பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர் "இருவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்" என்று சொன்னமை, "சீன கடன் பிடியில் இலங்கை சிக்க வைக்கப்பட்டுள்ளது" என்று சொன்னமை மற்றும் அவற்றுக்கான சீன அரசின் பதில்கள் என்பன சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. சந்திப்பின் போது "யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப சீனா எமக்கு உதவியது. அவ்வாறில்லாமல் சீனாவின் கடன் பிடியில் நாம் சிக்கவில்லை" என்று பொம்பியோவிடம் ஜனாதிபதி தெரிவித்தமை முக்கிய திருப்பமாக இருந்தது. 
அவ்வாறே அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இலங்கை தொடர்ந்தும் அணிசேராக் கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்தார். 

#பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக கோவிட் 19# 
இம்மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகின்றது. பொதுவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுவது வழமை. எனினும் இவ்வாரம் ஒரு நாளுக்கு அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது கோவிட் 19 காரணம் காட்டி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தினேஷ், ஜோன்ஸ்டன், கிரிஎல்ல, டலஸ், பீரிஸ், வாசு, அமரவீர, அலி சப்ரி, டிலான், ஹக்கீம், மஹிந்த சமரசிங்க ஆகியோர் பங்குபற்றிய கட்சித்தலைவர் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட் 19 சவாலிடையே பாராளுமன்றத்தை நடாத்திச் செல்வது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், வாரம் முழுவதும் பாராளுமன்ற கூட்டத்தை நடாத்திச் செல்வது பொருத்தமானது அல்ல என்று எல்லா கட்சித் தலைவர்களுமாற் போல் கருத்து தெரிவித்தனர். 
3 ஆம் திகதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மருத்துவ சட்டமூலத்தின் விதிகளை விவாதித்து நிறைவற்றிக் கொள்வது என்றும் 2 மணித்தியாளங்களுக்கு மட்டும் கூட்டத்தை மட்டுப்படுத்துவதுடன், வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களாக மாத்திரம் பாராளுமன்றிற்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே இவ்வாண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்புப் பிரேரணையை எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. 

#பட்ஜெட்க்கு தடையாகும் கோவிட் 19#
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. முன்னர் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஒரு வார காலமும், குழு நிலை விவாதம் ஒரு மாத காலமும் நடைபெறுவது வழக்கம். எனினும் இம்முறை அவற்றுக்கான கால எல்லைகள் குறைக்கப்படுவதற்கான சாத்தியமே உள்ளது. அவற்றிலும் சில அமைச்சுக்களின் செலவுத் தலைப்புகள் தொடர்பில் குழு நிலை விவாதம் நடத்தாமல், நிலையியற் குழுக்களுக்கு அனுப்பி கலந்துரையாடலின் பின்னர் குழு நிலையில் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தி வருகிறது.  

#சஜித் ஆனந்த தேரர் சந்திப்பு
 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டு மெதமூலன வலவ்வ ஜன்னலில் தொங்கி மக்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் போஷித்து, புது வழிகாட்டி, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு கொழும்பு அபயாராம விகாராதிபதி மேல் மாகாண சங்க நாயக்க முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் பங்களிப்பு மறுக்க முடியாதது. 
20 க்கு எதிராக பகிரங்கமாக முரண்பட்டு நின்ற தேரரை கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்தித்தமை முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. அதன் போது மத மறுமலர்ச்சிக்காக சஜித் மேற்கொள்ளும் "சசுனட அருண' வேலைத்திட்டம் குறித்தும் தேரருக்கு தெளிவுபடுத்தினார். கொரோனா, 20க்கு ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் சஜித் தேரரிடம் பேசினார். 

#சஜித்க்கு நன்றி தெரிவித்த சவேந்ர# 
இறுதி யுத்தம் நடைபெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி, இலங்கை இராணுவத்தின் முக்கிய படைப்பிரிவு ஒன்றின் கமாண்டராக கடமையாற்றிய தற்போதைய இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பயணத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. 
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது குறித்த தடையை நீக்க கோருமாறு எதிர்க்கட்சியினர் அரசிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் தொடர்ச்சியாக இது குறித்து பேசினார். இது குறித்து தமது நன்றிகளை சஜித்க்கு தெரிவித்துக் கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா. 

#ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமை யாருக்கு
கடந்த வாரம் ஐமச இன் கூட்டம் நடைபெற்றது. "Sir டயானா (கமகே) சொல்கிறார் இந்தக் கட்சி அவருடையது என்று" என ஆரம்பித்தார் ஹேஷா எம்பி. "கட்சி தாவியவர்களை கட்சியை விட்டு நீக்க எடுத்த முடிவு நல்லது. கட்சி தாவித் திரியும் தவளைகளுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்" என்று சொன்னார் சாமிந்த விஜேசிறி எம்பி. 
 "அது மட்டுமல்ல எம்மைப் பற்றியும் ஒவ்வொரு வதந்திகள் உலாவுகின்றன" என இணைத்து கொண்டார் மயந்த எம்பி. "ஆளாளுக்கு சொல்லும் கதைகளுக்கு நாம் பதிலளிக்க அவசியமில்லை. அவர்கள் பொய்களை ஏந்திக்கொண்டு சுற்றட்டும். இறுதியில் அவர்களுக்கு எஞ்சுவது பொய்களை எடுத்துக்கொண்டு சுற்றிய களைப்பு மட்டுமே" என சஜித் கூறினார். 
தொடர்ந்தும் "இந்த வதந்திகளை பரப்பும் நபர்கள் யார் என்பதையும், அவர்கள் என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். எமது வேலை மக்களை வெற்றியடையச் செய்வது" என்றும் கூறினார். 
 
#ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து சஜித்க்கு வந்த முறைப்பாடு
கம்பஹா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர் சஜித் ஐத் தொடர்பு கொண்டு தமது குறைகளைக் கூறி வருகின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் "நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நாட்டிற்கு வெளிநாட்டு செலாவனியைக் கொண்டு வருகிறோம். இப்போது எம்மை யாருமே கவனிப்பதில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. போடிங்களில் எம்மை வெளியேற்றி விட்டார்கள். வீதிக்கு இறங்கினால் போக முடியாது. நாங்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். குறைந்த பட்சம் அவர்களைப்பற்றியாவது யாரும் சிந்திப்பதில்லை" எனக் கூறினார். உடன் இது தொடர்பில் விசாரித்து அறிந்து கொண்ட சஜித் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சில பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். 
அத்துடன் இது தொடர்பில் ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கும் விளக்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன் சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் கட்டளை பிறப்பித்தார். இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. கொரோனா பரவலின் தீவிரம் இவ்வாரம் குறையலாம். கூடலாம். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசியல் விவகாரங்களின் சூடு தங்கியுள்ளது. காலம் பதில் சொல்லும். 
- fபயாஸ் MA f பரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5
Powered by Blogger.