போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு:
irumbuthirai
November 07, 2020
Covid-19 நிலைமைக்கு மத்தியில் மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை (Sopt Fine) செலுத்த முடியாத பொது மக்களுக்காக நிவாரணக் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இது வரையில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக சுகாதார பரிந்துரையின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள பிரதேசம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களை போன்று பல்வேறு நடைமுறை நிலைமைக்கு மத்தியில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படாத பிரதேசங்களில் பொலிஸ் போக்குவரத்து வாகன பிரிவினால் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் (Spot Fine) தண்டப்பணத்தை பலரால் செலுத்துவதற்கு முடியாதுள்ளது.
சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் (Sop Fine)) தண்டப்பணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சின் செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதற்கமைவாக கொவிட் - 19 இரண்டாவது அலையின் காரணமாக அலுவலக பணிகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை திகதி தொடக்கம் நாடு முழுவதிலும் தற்போதுள்ள பயணத்தடை நீக்கும் வரையிலான திகதி வரையிலுமான தினங்களை தவிர்த்து, தவறு இழைத்த தினம் தொடக்கம் நாட்கள் கணக்கிடபட்டு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என்று தபால்மா அதிபர். ரஞ்ஜித் ஆரியரத்ன இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு:
Reviewed by irumbuthirai
on
November 07, 2020
Rating: