நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள்

November 08, 2020

நாளை (9) காலை 5:00 மணியுடன் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 
இதேவேளை தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்ட பிரதேசங்களை இங்கு தருகிறோம். 
கொழும்பு மாவட்டம்: மோதர, மட்டக்குளி ,புளூமெண்டல், மாளிகாவத்த, பொரள்ள, தெமடகொட, கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டிய, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, வாழைத்தோட்டம் மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்டம்: பேலியகொட, வத்தளை, கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும் வேகட கிராம் சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

குருநாகல் மாவட்டம்: குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், குளியாப்பிட்டிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். 

கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாகவே பேணப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள் நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படாத பிரதேசங்கள் Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்..

November 07, 2020

நீர் கட்டணங்களை செலுத்த முடியாத தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நீர் பாவனையாளர்கள் கட்டணத்தை செலுத்த முடிந்த தினத்தில் செலுத்துவதற்காக சலுகை வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்.. நீர் கட்டணங்களுக்கு சலுகை காலம்.. Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா?

November 07, 2020

8 தொடக்கம் 10 மாத காலப்பகுதிக்கு தேவையான போதுமானளவு மருந்து வகைகள் நாட்டில் இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 
இலங்கையில் மருந்து வகைகளை தயாரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் பல மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் எதிர் காலத்தில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதை குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா? மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடா? Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்...

November 07, 2020

இம்மாத இறுதியில் அதாவது ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில் இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளது.
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்... இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை...

November 07, 2020

கொரோனா 3வது அலை அடுத்த வருட ஆரம்பத்தில் உருவாகும் என்று ஆய்வுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு 02 வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை உலக மக்கள் எதிர்கொண்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
இந்த மூன்றாவது வைரசு அலை முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளிலும் பார்க்க மிக பயங்கரமானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கொரோனா அலை உருவாகும் சூழலில் 55 துறைசார் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடைத்தொழிற்துறை, போக்குவரத்து, வாடகை போக்குவரத்து சேவை, வருமானமீட்டும் சேவைகள், அரச அலுவலகங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரி, வீதியோர விற்பனை கூடங்கள், நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத் தொகுதிகளில் ஏற்பாடுகளை செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது. 
இதேவேளை கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், உள்ளக நிகழ்வுகள், திறந்தவெளி நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள், விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கரையோர விருந்துகள், நீர் தடாகங்கள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
(அ.த.தி)
அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை... அடுத்த வருட ஆரம்பத்தில் கொரோனா 3வது அலை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு:

November 07, 2020

Covid-19 நிலைமைக்கு மத்தியில் மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை (Sopt Fine) செலுத்த முடியாத பொது மக்களுக்காக நிவாரணக் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 
 இது வரையில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் காரணமாக சுகாதார பரிந்துரையின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள பிரதேசம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களை போன்று பல்வேறு நடைமுறை நிலைமைக்கு மத்தியில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படாத பிரதேசங்களில் பொலிஸ் போக்குவரத்து வாகன பிரிவினால் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் (Spot Fine) தண்டப்பணத்தை பலரால் செலுத்துவதற்கு முடியாதுள்ளது. 
சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் (Sop Fine)) தண்டப்பணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சின் செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
 இதற்கமைவாக கொவிட் - 19 இரண்டாவது அலையின் காரணமாக அலுவலக பணிகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை திகதி தொடக்கம் நாடு முழுவதிலும் தற்போதுள்ள பயணத்தடை நீக்கும் வரையிலான திகதி வரையிலுமான தினங்களை தவிர்த்து, தவறு இழைத்த தினம் தொடக்கம் நாட்கள் கணக்கிடபட்டு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என்று தபால்மா அதிபர். ரஞ்ஜித் ஆரியரத்ன இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு: போக்குவரத்து விதி மீறல் (Spot Fine): தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு: Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை...

November 07, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 32ம் நாள் அதாவது வியாழக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வெலிக்கடை சிறையில் 4 பெண் கைதிகள், 2 ஆண்கைதிகள், ஒரு சிறை அதிகாரி ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று. 
  • தனிமைப்படுத்தப்பட்டிருந்த புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு. 
  • கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
  • மேலும் 11 துறைமுக ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  • கல்பிட்டி ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீட்டுக்கு வரும்பொழுது திடீரென விழுந்து உயிரிழப்பு. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடுமையான முறையில் கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறுவுறுத்தியுள்ளார். 
  • நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் உயிரிழந்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாகவும் வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • மாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கடந்த தினம் மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணமக்களும் அடங்குவதாகவும் தெரிவிப்பு. 
  • தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR செய்தவருக்கு POSITIVE. ஆனால் அவர் பிழையான தகவல்களை வழங்கியமையால் அவரைத் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • பெரண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாததால் அது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு தொடர்வில் உடன் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதால் அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்று முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவிப்பு. இதன் காரணமாக ஜும்ஆவுக்கு பதிலாக லுஹர் தொழுகையை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டது. 
  • கொரோனாவினால் இன்றைய தினம் மாத்திரம் 05 பேர் மரணம். அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உயிரிழப்பு. விபரம் இதோ: (1) கொழும்பு-2. 46 வயது ஆண். (திபுரு ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-12. 58 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (3) கொழும்பு-14 73 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (4) கொழும்பு-15. 74 வயதுடைய ஆண். (வீட்டில் உயிரிழப்பு) (5) வெல்லம்பிட்டிய. 68 வயதுடைய பெண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
i
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை...

November 07, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 31ம் நாள் அதாவது புதன்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சவூதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
  • கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என சுகாதர அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் கிளினிக் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமானது.
  • பொரளை பொலிஸின் இதுவரை 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் என்பனவற்றில் அனுமதி வழங்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள, வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடுகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் www.motortraffic.wp.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, அதன் ஊடாக வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5 பேருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) - 94 ரூபா, பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை) - 94 ரூபா, நாட்டரிசி - 92 ரூபா, பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) - 89 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

  • இதுவரை கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (03) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் 24 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதேவேளை, கொழும்பு 13 ஐச் பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நபரின் மரணம் covid-19 தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தினால் அதனை கொவிட் 19 மரணமாக கருத முடியாது என சுகாதார சேவை பணிப்பாளர் அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்...

November 06, 2020

மேல் மாகாணத்திற்குள் வாகன அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இதை Online முறையில் பெறலாம். விபரத்தை கீழே காணலாம்.
மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்... மேல் மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரம் Online முறையில்... Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

November 06, 2020

Vacancies in the Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 20-11-2020. 
See the details below.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

November 06, 2020

Vacancy in the Urban Development Authority 
Closing date: 10 days from 01-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 01-11-2020.


oop
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

Vacancies: Ceylon Shipping Corporation Ltd.

November 06, 2020

Vacancies in the Ceylon Shipping Corporation Ltd. 
Closing date: 14-11-2020. 
See the details below:


Vacancies: Ceylon Shipping Corporation Ltd. Vacancies: Ceylon Shipping Corporation Ltd. Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5

ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

November 06, 2020

ஜுமுஆத் தொழுகை தொடர்பான வழிகாட்டலை அ.இ.ஜ.உலமா பின்வருமாறு தனது ஊடக அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 

ACJU/FRL/2020/21-238 
2020.11.05 
1442.03.17 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ 

எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளினால் 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்ற ஒரு வழிகாட்டல் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 2020.06.16 ஆம் திகதி “கோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலக்கம் 2 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவ வயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுது கொள்ள வேண்டும்.” https://acju.lk/news-ta/acju-news-ta/item/1964-19 

இந்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஆலிம்கள் பல வருடகாலங்களாக இவ்வடிப்படையிலேயே ஜுமுஆவுடைய இந்த அடையாளத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது. 

நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலைமை எதிர்காலத்தில் நீடிக்காமல் அவசரமாக நீங்கி, நல்ல நிலைமை உண்டாகி, ஜுமுஆவை வழமை போன்று நிறைவேற்ற அல்லாஹூ தஆலா அனுகூலம் புரிய வேண்டும் என்றும், அல்லாஹூ தஆலா உங்களது கவலைகளுக்கு பூர்த்தியான கூலிகளைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். 

வஸ்ஸலாம். 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் 
செயலாளர், பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் ஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல் Reviewed by irumbuthirai on November 06, 2020 Rating: 5
Powered by Blogger.