சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை...

November 13, 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
கொவிட்-19 தொற்றுப் பரவல் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, சிறையில் அல்லது தடுப்புக்காவலில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றக் கூட்டங்களுக்கு அழைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்ததற்கமைவாக இவர்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை. 
எவ்வாறேனும், முக்கியமான வாக்கெடுப்புகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரித்து, அவர்களை சபைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... சிறையில்/தடுப்புக்காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

Vacancies: University of Peradeniya.

November 13, 2020

Vacancies: University of Peradeniya. 
Closing date: 28-11-2020: 
See the details below.

Source : 08-11-2020 Sunday Observer.
Vacancies: University of Peradeniya. Vacancies: University of Peradeniya. Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்...

November 13, 2020

இலவசக் கல்வி உரிமைக்கான மாணவர் இயக்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று காலி நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. 
பல்கலைக்கழக நுழைவுக்கு வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
-ஹிரு.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்... பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை...

November 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 39ம் நாள் அதாவது வியாழக்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான இயலுமை உள்ளது. குறிப்பாக எவரெனும் இன்றைய தினத்திற்குள் மேல் மாகாணத்தில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மீண்டும் தமது பகுதிகளுக்கு செல்ல நினைத்தால் அது முடியாது. அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திற்குள் தங்கியிருந்து அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார். 
  • தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டவுடன் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 
  • டிரோன் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு, மோதர பகுதியில் வைத்து தனிமைப்படுத்தலை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும் மரண பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில்தான் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு. 
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார். 
  • தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டலை சுகாதார அமைச்சு வெளியிட்டது. 
  • தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்தார். 
  • மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக அதிகரிப்பு. 
  • கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்றும் அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் நாரா டி அருள்காந்த் தெரிவிப்பு. 
  • எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிப்பு. 
  • காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி. இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரிப்பு. 
  • பத்தரமுல்லை பகுதியில் யாசகர் ஒருவருக்கு கொரோனா. அத்துடன் குறித்த யாசகருடன், தொடர்புகளை பேணிய 8 பேர் நிட்டம்புவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு-12, 54 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) மீகொட பகுதி. 45 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 48 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 13, 2020 Rating: 5

குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன?

November 12, 2020

கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குதல் தொடர்பான கதைகள் கடந்த வாரத்தில் இருந்து சமூகத்தில் அடிபட ஆரம்பித்தன. 
பாராளுமன்றத்தில் சஜித் ஆற்றிய உரையில் அது குறித்து குறிப்பிட்டதும், அமைச்சர் பவித்ரா அது குறித்து மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டமையை ஏற்றுக்கொண்டமையும் முஸ்லீம் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
அவ்வாறே 20 ஆம் சீர்திருத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளித்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நாம் ஆதரவு வழங்கியதன் நன்மையை சமூகம் கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளும் என்று எரிப்பு தடை நீக்கத்தையே குறிப்பிட்டதாக அவர்தம் ஆதரவாளர்கள் அடித்து விட ஆரம்பித்தனர். அப்படி என்றால் ஜனாசா விவகாரத்துக்கு மாத்திரம் 20 ன் பக்கம் சாய்ந்திருப்பார்களா?  அப்ப தலைவர்கள் இருவரும் இதற்கு எதிர்ப்பா? என்று பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைய முஸ்லீம் சமூகம் மீண்டும் ஏமாற்றப்பட்டது. 
இச்சந்தர்ப்பத்தில் குறித்த ஒரே நேரத்தில் அனைவரும் துஆ இஸ்திஹ்பார் செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே இரு அமைப்புக்கள் கொழும்பில் குறித்த தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தன. மீண்டும் விழித்துக் கொண்ட எமது அறைவேற்காட்டு வாட்சப், பேஸ்புக் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவரவர் சிற்றறிவை பிரயோகித்து அதன் சாதக பாதகங்களை எழுதித் தள்ளினர். தடை நீக்கப்படும் சாத்தியம் உள்ளமையையும், அவ்வாறு நீக்கப்பட்டால் ஏற்படும் எதிர் வினைகளையும் நன்றாக விளங்கிக் கொண்ட பலர் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூகம் என்ற அடிப்படையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றனர். 
இந்நிலையில் யாருமே எதிர்பாராத தருணத்தில் ஜம்இய்யதுல் உலமா தலைவரின் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி முஸ்லீம் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது. கடந்த திங்கள் (9) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாஸா அடக்கம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், மன்னார் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடம் ஒன்றில் அடக்கம் செய்யுமாறு சொல்லப்பட்டதாகவும் அந்த தகவல் சொன்னது. 
அதன் பின்னர் மேலே சொன்ன சமூக ஆர்வலக் குஞ்சுகளுக்கு, ஸ்மார்ட் போன் ஊடக பருப்புகளாலும் பொறுப்பற்ற விதமாக நன்றி தெரிவிக்கவும், வெற்றிக் கொண்டாட்ட பதிவுகளையும் இட்டு வேலையை ஆரம்பித்தனர். 
இனவாத செயற்பாட்டாளர்கள் தம் பங்கிற்கு மறுபுறம் ஆரம்பித்தனர். சுகாதார தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி எவ்வாறு தனித் தீர்மானம் எடுப்பார்? IDH வைத்தியசாலைக்கு மிக அண்மையிலுள்ள தகனசாலையில் எரிக்கும்போது கொழும்பிலிருந்து மன்னாருக்கு எப்படி அவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம்? அது பாதிப்பை ஏற்படுத்தாதா? தேர்தலுக்கு முன் முடியாது என்றால் தற்போது மாத்திரம் எவ்வாறு முடியும் ? அன்று கிருமி பரவும் என்றால் இன்று கிருமி பரவாதா? போன்ற பல்வேறு கோணங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
உடனே சுதாகரித்துக் கொண்ட அரசு சார்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்னொரு புறம் அமைச்சர் அலி சப்ரி தான் அவ்வாறான தகவலை ரிஸ்வி முப்திக்கு சொல்லவில்லை என்று கூறிய தகவல்களும் வெளியாகின. இவ்விடயம் குழம்பிப்போன பின்னர் அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் இருந்ததாகவும் தகவல். 
எனவே இந்த விவகாரம் இன்னும் நீண்டு கொண்டு செல்லலாம். 
இங்கே அமைச்சர் அலி சப்ரி உண்மையில் அவ்வாறான செய்தி ஒன்றை ரிஸ்வி முப்தியிடம் சொன்னாரா? அவ்வாறு சொல்லியிருப்பின் அது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மறந்த செயலாகும். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லி இருப்பின் அதனை பகிரங்கப்படுத்தியமையும் தவறாகும். ஆ
ஆனால் அலிசப்ரி சொல்லாத ஒரு விடயத்தை தானாக நினைத்து ரிஸ்வி முப்தி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. இங்கு அலிசப்ரி கூட்டுப்பொறுப்பை மீறினார். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லப்பட்ட ஒரு விடயத்தை உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் பகிரங்கப் படுத்தினார் ரிஸ்வி முப்தி என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இரு பக்கமும் தவறு என்றே தோன்றுகிறது. 
இது மாத்திரமன்றி எமது அரசியல்வாதிகளின் அல்லக்கைகளும், ஊடக பருப்புக்களும் கொஞ்சம் கூட அறிவு இன்றி செயற்பட்டமை அதை விட பிழையாகும். ஏனென்றால் உரிய வர்த்தமானி வெளியிடப்படும் வரை இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு எந்தளவு பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதற்க்கு இது சிறந்த உதாரணம். 
அல்லாஹ்வின் நாட்டம் இருப்பின் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கலாம். ஆனால் அது வரை எத்தனை ஜனாஸாக்களை எரித்து விடுவார்களோ... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 ஒருவேளை நாளையோ, இன்னும் ஓரிரு தினங்களிலோ அனுமதி கிடைத்தாலும் அடக்கம் செய்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே தவிர வெட்டி பீற்றல் மூலம் சமூகம் அடைய போகும் நன்மைகள் எதுவும் இல்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப் பெரிய பாடமாக உள்ளது. 
அவசரத்தின் விளைவுகளை அறிந்து  நிதானமாக செயற்படுவோமாக! 
குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை...

November 12, 2020

#நாட்டை ஸ்தம்பிக்க செய்த கொரோனா
கடந்த வாரம் இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார பேசு பொருள் கொரோனா.
வார அடிப்படையில் நோக்கின் மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்ட வாரம் இதுவாகும். தினமும் 200, 300 என்று நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணம் முழுவதற்கும் போடப்பட்ட ஊரடங்கு கடந்த திங்கள்தான் நீக்கப்பட்டது.
இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விநியோக மையம் கொழும்பு. அங்கே ஊரடங்கு என்பதால் அதன் பிரதிபலிப்புகள் நாடு பூராகவும் அவதானிக்கத் தக்கதாக இருந்தது. 

#வேலையில் இறங்கினார் பசில்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ. மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டிய பொருளாதார உதவிகள் குறித்து ஆராய்வதற்காக பசில் தலைமையில் அலரி மாளிகையில் ஒன்று கூடியது. 
பவித்ரா, பந்துல, பிரசன்ன ரணதுங்க, ரோஹித, காமினி லோகுகே போன்ற அமைச்சர்களும், மேல் மாகாணத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அதில் கலந்து கொண்டனர். 
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா வழங்குதல் போன்ற அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டது. 
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவு அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசப்பட்டது. 
 கட்டுநாயக்க உட்பட சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் செய்யும் விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் பற்றிய விடயத்தை ஆரம்பித்தார் அமைச்சர் பிரசன்ன. "அவர்களுக்கு சாப்பிடக் கூட எதுவும் இல்லையென்று பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது" என அவர் தெரிவித்தார். விடுதிகளில் உள்ளவர்களில் பலர் Man Power தொழிலாளர்கள். அவர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

#கேபினட் கூட்டம்
02/11/2020 கேபினட் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 
வழமையாக கூட்ட மேசையை சூழ ஒரு வரிசையாக அமரும் அமைச்சர்கள் அன்றைய தினம்  மீட்டர் இடைவெளி பேணியமை காரணமாக இரு வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர். 
அந்த கேபினட் கூட்டத்தின் பிரதான பேசு பொருளாக இருந்தது கோவிட்19 பிரச்சினை. "நிறைய பேர் சொல்வது போல லொக் டவுன் செய்து பிரச்சனை தீரப்போவதில்லை. அவ்வாறு மூடினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். பாடசாலைகளை மூடினால் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதனால் எமக்கு இப்போது இருக்கும் தெரிவு இதனுடன் வாழ்வது. நோயினால் பீடிக்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், ஏனையவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அதனாலாகும்" என ஜனாதிபதி நீண்ட விளக்கம் வழங்கினார். 

#போலீசுக்கு வாகனம் கேட்ட சமல்
போலீஸ்க்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச. போலீஸ்க்கு போதுமான வாகனங்கள் இல்லாமையினால் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கேபினட் இல் சொன்னது மாற்று ஏற்பாடு தொடர்பிலும் விளக்கியாகும். 
அமைச்சரின் கையில் அரசுடைமையாக்கப்பட்ட, சுங்கத்தின் கைவசம் உள்ள வாகனங்களின் பட்டியல் ஒன்றை கேபினட் இல் முன் வைத்த அமைச்சர் சமல் அவற்றை போலீஸ் திணைக்களத்திற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். 

#டிவியில் நேரம் கேட்ட பீரிஸ்
கொரோனா காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை நிவர்த்தி செய்வதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முன்வைத்தார். 
தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடசாலை பாடங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அது உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 

#அரிசி மாபியாவிற்கு எதிராக பந்துல
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அரிசி விலைகள் அதிகரித்துள்ளன. அரிசி உற்பத்தியாளர்கள்/அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு அரிசி கிடைப்பதால் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
அமைச்சர் பந்துல சில முறை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சந்தித்து விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 
இதனால் அமைச்சர் பந்துல நுகர்வோர் அதிகார சபை ஊடாக அரிசிக்கான உச்ச சில்லறை விலையை நிர்ணயித்தார். என்ற போதிலும் விலை குறைவதாக இல்லை. அரிசி விலை நாட்டில் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது. அதே போன்று சீனிக்கான வரி குறைக்கப்பட்டு ஒரு மாதம் அளவு கடந்து விட்டது. ஆனால் குறைந்த விலையில் சீனி நாட்டில் இல்லை. சதோச இல் கூட மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடக்கிறது. அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத் தலைவர் அது தொடர்பில் அரசு மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். அவற்றில் முக்கியமானது நாட்டில் தேவையான சீனி கையிருப்பில் இருக்கும் போது துறைமுகத்தை அண்டியிருந்த அரசுக்கு ஆதரவளிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சீனியை வரியின்றி நாட்டுக்குள் கொண்டு வர அரசு செய்த சதியே இதுவென அவர் தெரிவித்தார். 
சீனிக்கான விலையை குறைக்கும் நோக்கில் வரிக் குறைப்பு செய்ததாகவும், அதன் நன்மை பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்றும் இந்நிலை தொடருமாக இருப்பின் வரியை மீண்டும் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமைச்சர் பந்துல ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
ஏற்கனவே இவ்வரசு வந்த பின்னர் அரிசி உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்த போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை 

##வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு குறுக்கே வந்த கொரோனா
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ளது. 
வழமையாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதற்கான விவாதங்கள் சுமார் ஒரு மாதம் நீடிக்கும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்தல் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் 4 நாட்களும், குழுநிலை விவாதம் 6 நாட்களும் நடைபெறும் என் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

#சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சந்தித்த சீன கமியூனிஸ்ட் கட்சி
சிறிலங்கா பொது ஜன பெரமுனவிற்கும் சீன கமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. 
சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பில் அதன் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் சேமசிங்ஹ ஆகிய அமைச்சர்களும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவும் கலந்து கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா நிலைமை காரணமாக எவரும் இங்கு வரவில்லை. சீனாவில் இருந்து நிகழ்நிலை (Online) சந்திப்பாக இது நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் இதில் பங்குபற்றுவதாக இருந்த போதிலும் அவர் புதிதாக நியமனம் பெற்று இலங்கை வந்து தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக பங்குபற்றவில்லை. 
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்ஷ இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, சீனாவின் கமியூனிஸ்ட் கட்சி பாணியில் தமது கட்சியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த பின்னணியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

#தம்புள்ளையில் தேங்கிய மரக்கறிகள்#  
இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார மத்திய நிலையம் தம்புள்ளை. பல விவசாயிகள் மட்டுமன்றி ஏனைய பிராந்திய பொருளாதார மத்திய நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மரக்கறி, பழ வகைகள் நாடுபூராக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தம்புள்ளையில் உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவானது. 
உடனடியாக ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பா.உ பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சிக்கல்களை கேட்டறிந்தனர். அறுவடைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்ந்த அவர்கள் அவசரமாக செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவோடு தொடர்பு கொண்டு விடயத்தை எத்தி வைத்தார். 
பசில் உடனடியாக செயல்பட்டு மேல் மாகாணத்தில் உள்ள எல்லா பொருளாதார மத்திய நிலையங்களையும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையிலும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் காரணமாக தம்புள்ளை நிலைமைகள் பெரும்பாலும் சீரடைந்தன. 

#குருணாகளில் இருந்து பிரதமருக்கு முறைப்பாடு
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குருநாகல் மாவட்டமும் ஒன்றாகும். எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 10 பரிசோதனைகளையாவது செய்ய முடியாதுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்த பா.உ சாந்த பண்டார முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். 
 "Sir, குருநாகல் வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தின் கொள்ளளவு போதாது. ஏற்கனவே குருநாகல் மாவட்டத்தில் பல போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. எனவே, 5000 ரூபாய் நிவாரணம் குருநாகல் மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். பதிலளித்த பிரதமர் "இது தொடர்பில் பசிலுடன் கதைக்க வேண்டும். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்." என்று கூறினார். 

#மீண்டும் அபயாராமவில் மஹிந்த# பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் குமாரசிரி ஹெட்டிக்கே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தப்பனத்தின் தலைவர் சுமித் விஜேவிங்க ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி நரஹேன்பிடவில் உள்ள அபயாராம விகாரைக்கு சென்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தனர். 
அப்போது வேறு அலுவல் விடயமாக சென்று வரும் வழியில் பிரதமரும் அங்கே வந்து சேர்ந்தார். 
 தேரரை விழித்த பிரதமர் "வேறு அலுவலாக இந்தப் பக்கமாக வந்தேன். தங்களை தரிசித்து செல்ல எண்ணி இங்கே வந்தேன்" என்று கூற "நீங்கள் ஒரு போதும் மாறாத தலைவர். அதனால்தான் நாங்கள் இன்னும் உங்களை கவனிக்கிறோம்" என மிக பரிவுடன் கூறினார். 
"Sir தலைமை பிக்கு இப்போதெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராகவும் கொஞ்சம் காரமாக பேசுகிறார். அதனால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்" என குமாரசிரி ஹெட்டிக்கே கூறினார். 
 "ஆனந்த தேரரின் குணம் அப்படித்தான். குறைபாடுகள் உள்ள இடத்தில் பேசுவார். நாங்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை. உங்களுக்கு வேண்டியது வேகமாக வேலைகள் நடக்க. அப்படித்தானே! " என பிரதமர் கூற, "பிரதமர் அவர்களே! எதற்கும் சுற்றுப்புறம் குறித்து அவதானமாக இருங்கள். சில அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் செய்யும் வேலை அவ்வளவு நல்லதல்ல. அரசின் மீது மக்கள் வெறுப்படைய அவையும் ஒரு காரணம்" என தேரர் குறிப்பிட்டார். 

#அனுராதபுரத்தில் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பல விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அந்த விஜயத்தின் போது விகாரைகளின் குறைபாடுகள் தொடர்பில் தேடிப் பார்க்கவும் அவர் தவறவில்லை. 
இசுருமுனிய விகாரைக்கு சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். "Sir நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி விடயங்கள் உண்மையாகிக் கொண்டே வருகின்றன. பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பெற்றுக்கொண்டாலும் இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறியதுடன் கடந்த தேர்தல்களில் தான் மொட்டுவின் வெற்றிக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார். 
"அரசு நினைக்குமானால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று அது நடக்கப் போவதில்லை. எந்த ஆட்சிக்கும் ஏற்பட்ட தவறு மக்கள் பிரச்சினைகளை மறந்தமையே" என சஜித் பதிலளித்தார். 
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஜித் "அரசு முன்னுரிமை அளிப்பது தேவையான விடயங்களுக்கு அல்ல. தேவையற்ற விடயங்களுக்கு. 20 கொண்டு வர இருந்த அவசரம் வெள்ளையர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக புதிய ஒன்றைக் கொண்டு வருவதில் இல்லை" எனவும் தெரிவித்தார். 
 தொடர்ந்து மிரிசவெடிய விகாரைக்கும் சென்றார். அங்கே இருந்த ரோஹன பண்டார சஜித் இடம் "Sir அரசு கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளது" என்று ஒரு வீடியோவை கட்டினார் அதில் சுகாதார அமைச்சர் பவித்ரா, இன்னும் சில அமைச்சர்கள் குடங்களை ஆற்றில் வீசும் காட்சி இருந்தது. "இவ்வாறுதான் இந்த அரசாங்கம் கோரோணாவை ஒளிக்கப் போகிறது" எனக் கூற "ஒவ்வொருவரினதும் நம்பிக்கையை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. ஜனாதிபதி தேர்தலின் போது பாம்பு ஒன்றை வைத்து ஆட்டம் போட்டவர்கள் இவர்கள்" எனக் கூறினார். 

 #சஜித் இன் பாராளுமன்ற உரைக்கு கிடைத்த பாராட்டு
 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சுமார் ஒரு மணி நேர உரையொன்றை ஆற்றியிருந்தார். சுகாதரத்துறை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள சமூக சிக்கல்கள் குறித்தும் அந்த உரையில் கருத்து தெரிவித்த அவர், தான் நல்ல நோக்கில் சொன்ன பல ஆலோசனைகளை அரசு தட்டிக் கழித்ததுடன், தன்னை எள்ளி நகையாடி, தனக்கு சேறு பூசிக்கொண்டு இருந்ததையும் நினைவுபடுத்தினார். இந்த உரையிலேயே முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் குறித்தும் அரசை காரசாரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார். கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த உரையை பாராட்டியிருந்தனர். 

 #ருவன் விஜேவர்த்தனவின் கட்சிப் பணி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை காரணமாக அவரால் கொழும்பை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனினும், Zoom தொழில் நுட்பத்தை ஊடாக பல முக்கியஸ்தர்களோடு தனியாகவும், கூட்டாகவும் கலந்துரையாடல்களை நடத்தினார். கடந்த போயா தினத்தை முன்னிட்டு கட்சித் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் தர்ம உபதேசம் ஒன்றையும் ருவன் ஏற்பாடு செய்திருந்தார். 
அதன் பின்னர் அங்கே சேர்ந்திருந்தவர்களோடு பேசிய ருவன் "கட்சியை மீள கட்டியெழுப்ப மக்களிடையே செல்ல வேண்டும். அவ்வாறெல்லாமல் மக்களில் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியாது" என்று தெரிவித்தார். 
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று ஒன்லைன் மூலம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்தினார். 
இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. அடுத்த வாரம் ஜனாஸா எரிப்பு, Rapid Test தொடர்பான வாத விவாதங்கள் அரசியல் களத்தில் மேலோங்கலாம். அவை பற்றிய சுவையான உள்ளக தகவல்களோடு அடுத்த வாரம் மீண்டும் வரும். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்...

November 12, 2020

ட்ரோன் கெமரா (Drone Camera) உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்...

November 12, 2020

பழைய போகம்பர சிறைச்சாலையில் 800 இற்கு அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இந்நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த...

November 12, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். 
அதாவது 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலமும் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. 
இந்த ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய மற்றும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். 
19ம் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுகின்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது பெயர்கள், அப்போது நடைமுறையில் இருந்து அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். 
ஆனால் 20ம் திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்களது எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த உறுப்பினர்களது பெயர்களை ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்ற பேரவை மீண்டும் தமது ஆய்வினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். இந்த ஆய்வு கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற பேரவையை புறக்கணித்தேனும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. 
இந்தநிலையில், 20ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக புதிய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தவாரமளவில் நியமிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த... இன்றுடன் ஓய்வுபெறும் மஹிந்த... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்...

November 12, 2020

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. 
கொரோனா தொற்றுக்கு பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் அதிகாரசபையில் பதிவு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்புக்கு உகந்தது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்க அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... 40 இற்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சான்றிதழ்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT)

November 12, 2020

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) 
See the details below.
Source: 08-11-2020 Sunday Observer.

British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) British Degrees @ Sri Lanka Institute of Information Technology (SLIIT) Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

Vacancies for Medical Officers (Navy General Hospital)

November 12, 2020

Vacancies for Medical Officers (Navy General Hospital) 
Closing date: 25-11-2020: 
See the details below.
Source : 08-11-2020 Sunday Observer.

Vacancies for Medical Officers (Navy General Hospital) Vacancies for Medical Officers (Navy General Hospital) Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை...

November 12, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 38ம் நாள் அதாவது புதன்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவிப்பு. 
  • பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? என்ற வழிகாட்டல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்தது. 
  • ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதன் காரணமாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
  • கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. இவர் கடந்த சில தினங்களாக பிரதேசங்களில் சிலவற்றில் அமைந்துள்ள விகாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு. 
  • இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படது. 
  • அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இ.போ.ச. தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு. ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு தொடருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் தொடருந்து சேவைகள் அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை. 
  • சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு துறைமுக நகர் (Port city) கட்டுமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • இன்று 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) பாணந்துரை பிரதேசம். 80 வயது ஆண். (பொலிஸ் வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-11. 40 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) களனி பிரதேசம். 45 வயது ஆண் (அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) (4) மாளிகாவத்தை பகுதி. 68 வயது பெண். (வீட்டில் உயிரிழப்பு) (5) இம்புல்கொட பகுதி. 63 வயது ஆண். (அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 635 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5
Powered by Blogger.