திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை...
irumbuthirai
November 16, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 42ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த 5 பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- அனைத்து சிறைச்சாலை ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நாளை காலை 8 மணிக்கு அவர்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு சேவைக்கு வருமாறும் அறிவிப்பு.
- கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலுள்ள BOI மற்றும் EDB நிறுவனங்கள், அரச அத்தியாவசிய சேவைகள் மற்றும் நீதிமன்ற அலுவல்கள் நாளை காலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு.
- பேலியகொடை மீன் சந்தையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மக்கள் கடல் உணவுகளை கொள்வனவு செய்யாமை காரணமாக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய கடற்றொழில் உதவியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.
- கட்டார் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 128 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.
- சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக அதிகரிப்பு.
- இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு.
- நாளை (15) முதல் ரயில் சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானம்.
- கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெற இருந்த தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர் சான்றிதழுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் தெரிவிப்பு.
- கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு.
- கடந்த ஒக்டோபர் 4ம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் 5127 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. அதாவது கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
- கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவிப்பு.
- மேலும் 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் 2) கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண் 3) கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண் 4) கொழும்பு - 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண் 5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 மரணங்கள் அறிவிக்கப்பட்ட 3ஆவது முறை இதுவாகும்.
- இன்றைய தினம் மாத்திரம் 704 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,287 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 16, 2020
Rating: