திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை...

November 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 44ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி. அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
  • வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றுறுதியானவர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள இருவரால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்பதோடு கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 
  • கடந்த 2 வாரகாலங்களுக்குள் சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரசோதனை மேற்கொள்ள வேண்டும் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே. சிங்காராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். 
  • இதுவரை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் 2) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் 3) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் 4) கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் 5) தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண். இத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 401 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்...

November 17, 2020

வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. 
இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல, 
அதே வேளை தொற்று ஒருவரிடம் இருந்து பொதுமக்களுக்கு பரவுவது தடுக்கப்பட வேண்டும். அதனை மேற்கொள்வது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு...

November 17, 2020

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் 15 ஆம் திகதி மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 
இதில் மாத்தளை மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பின்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன... 
  • முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 
  • எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும். 
  • மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.
6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு... 6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்:

November 17, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
இதேவேளை Covid -19 வைரசு தடுப்பு விசேட செயலணிக்குழுவின் சிசுபாரிகளின் அடிப்படையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்: Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை...

November 17, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 43ம் நாள் அதாவது திங்கட்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய 28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு. ஏற்கனவே இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்பிய கடுகன்னாவை பிரதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி இன்று (16) தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார். 
  • துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவிப்பு. 
  • பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் புறக்கோட்டை பஸ் மற்றும் ரயில் நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸமா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 
  • கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
  • பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன் லைன்) மேற்கொள்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆராயப்பட்டது. 
  • தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார். 
  • பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து இன்று (16)போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்ற போதிலும் பஸ், ரயில் என்பனவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது 
  • உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவு. 
  • இதுவரை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14 பணிக்குழாமினருக்கும் சிகிச்சை பெற்று வந்த 20 சிறார்களுக்கும் 12 தாய்மார்களுக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கடந்த 14 நாட்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்தவொரு விற்பனை நடவடிக்கையும் இன்றி பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பெரும் சோகத்தில் வாடியுள்ளதாக அவர்கள் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள துற்றுலாத்துறை சார்ந்த வாகன சாரதிகளுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
  • கொவிட்19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு புதிய விசாரணைத் திகதிகளை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானம். 
  • போகம்பறை - பழைய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரியது. 
  • கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு. 
  • மீன் சாப்பிடுவதனால் கொரோனா வைரஸ் பரவும் என கூறமுடியாதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்தன ஹேரத் தெரிவிப்பு. 
  • கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. வேறு பகுதிகளில் இருந்து மரக்கறிகள் கொண்டு வந்தால் அதனை நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) மொரட்டுவை பகுதி. 84 வயது பெண் ( வீட்டிலேயே உயிரிழப்பு) 2) கொழும்பு 10 ஐ சேர்ந்த 70 வயது ஆண் (ஐடிஎச் மருத்துவமனையில் உயிரிழப்பு) 3) கொழும்பு 13 , 75 வயது ஆண் (கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 61 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 387 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர்

November 16, 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 உயர்தர பரீட்சை நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதுவே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வரும் நடைமுறையாகும். இந்த நடைமுறை குறித்து எந்த வகையிலும் திருப்திக் கொள்ள முடியாது. நாம் இதில் ஏற்படும் தாமதத்தை முற்றாக நீக்குவதற்கு முடிந்த வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். படிப்படியாக இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை திட்டமிட்ட வகையில் விரைவாக தொடர்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்:

November 16, 2020

நேற்று (15) வெளியான 2020 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், இந்த பெறுபேறுகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களத்தின் இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டன. 
பரீட்சைக்கு சுமார் 336,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த வருடத்தில் இந்த பரீட்சை பெறுபேறுகளை 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. 
ஆனால் முன்னர் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பல மாதங்கள் செல்லும். இந்த துறைச்சார்ந்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட க்கூடியதாக இருந்தது. 
இதுமாத்திரமன்றி மற்றுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால், இம்முறை இந்த பரீட்சையில் 10 பேர் 200 புள்ளிகளை பெற்று சித்திப்பெற்றமை பாராட்டத்தக்கதாகும் என்று தெரிவித்தார். 
எமது நாட்டின் பெறுமதி மிக்க சொத்து மாணவர் சமூகமாகும். அவர்களின் முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்வதே நோக்கமாகும் என்றும்; கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார். 
மேற்படி விடயங்களை இன்று (16) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் தெரிவித்தார்.
33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: 33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு

November 16, 2020

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இன்று (16) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பின்வருமாறு தெரிவித்தார். 
அதாவது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.
3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு பின்னர் தாமதித்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதாவது நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதாக நாம் அறிவித்தோம். 
 பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் ஆகியோரின் ஆலோசனைகளும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களது கருத்துக்களும் இது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது:

November 16, 2020

வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய 28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 ஏற்கனவே இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்பிய கடுகன்னாவை பிரதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது: வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது: Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்...

November 16, 2020

நேற்றைய தினம் (15) வெளியான 2020ற்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு ஸாஹிரா கல்லூரிகள் 02 உயர் சாதனைகளை சொந்தமாக்கியுள்ளன. 
ஒன்று கொழும்பு ஸாஹிரா மற்றையது புத்தளம் ஸாஹிரா ஆகும். 
கொழும்பு ஸாஹிராவைச் சேர்ந்த Mohamed Ammar 200 புள்ளிகளைப் பெற்று சிங்கள மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். 
அதே போன்று புத்தளம் ஸாஹிராவைச் சேர்ந்த Arshad Zaina 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். 
அந்தவகையில் இரு மொழி மூலங்களிலும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்ற இரு பாடசாலைகளும் ஸாஹிரா கல்லூரிகள் என்பது விஷேட அம்சமாகும்.
2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்... 2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்...

November 16, 2020

இலங்கை விமானப் படையின் 69 வருட வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 
அதாவது இன்றைய தினம் பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த வைபவம் திருகோணமலை - சீனக்குடா (China Bay) விமானப் படை முகாமில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்... இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்..

November 16, 2020

ஒக். 4 முதல் நவம்பர்14 வரை மாவட்ட ரீதியான கொரோனா தொற்றாளர்களை இங்கு தருகிறோம். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 
கொழும்பு - 5,127. 
கம்பஹா - 4,917. 
களுத்துறை -595 
இரத்தினபுரி - 107 
காலி - 118 
கேகாலை - 182 
குருணாகலை - 234 
கண்டி - 134 
மாத்தளை - 28 
அனுராதபுரம் - 14 
அம்பாறை - 22 
மாத்தறை - 27 
திருகோணமலை - 11 
மட்டக்களப்பு - 63 
யாழ்ப்பாணம் - 19 
மொனராகலை - 8 
பொலன்னறுவை - 5 
கிளிநொச்சி - 3 
மன்னார் -10 
வவுனியா - 14 
ஹம்பாந்தோட்டை - 29 
முல்லைத்தீவு - 01 
புத்தளம் - 59 
நுவரெலியா - 47 
பதுளை- 31
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே குறைந்த தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 
ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்.. ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்.. Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை...

November 16, 2020

2020 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 10 மாணவர்கள் உயர் சாதனை படைத்துள்ளனர். 
அதாவது 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று இந்த சாதனையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை... 2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5
Powered by Blogger.