வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது...

November 21, 2020

வார இறுதியில் அதாவது, இன்று(21) மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. பெர்னான்டோ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு...

November 20, 2020

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 02 வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்...

November 20, 2020

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஜும்ஆத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் ஒப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளனர். 
சகல முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தினத்தில், ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது சமய ரீதியான கடமையொன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். 
இதனடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ளும் பொருட்டு நேர ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இதுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போதும், முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜப்னாமுஸ்லிம்.
ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...

November 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

November 19, 2020

அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த சேவையை பெற எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து Online மூலமாக கிழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்ஸ்அப் இலகத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். 

இணையத்தளம் - www.ntc.gov.lk 
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk 
வட்ச் எப் இல - 0704361101 
தொலை நகல் - 0112503725 
மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை...

November 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 45ம் நாள் அதாவது புதன்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பழைய 
  • போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைது, ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பிராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 
  • 30 வருடகால யுத்தத்தை விடவும் கொரோனா வைரஸ் பரவலானது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர், களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார். 
  • கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. என்று தான் பதவியேற்று ஓராண்டு நிறைவுக்காக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். 2) கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண். 3) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 327 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...

November 18, 2020

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டத்தை நேற்றையதினம் (17) நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார். 
அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக... 

  • 5.5% பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். 
  • கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 
  • 2021 ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்மொழிவு. இதை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
  • பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு. 
  • ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25% ஆல் குறைவடைந்துள்ளது.  வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
  • பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை. 
  • விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை 05 வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
  • 2021 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50% வருமான வரி சலுகை. 
  • Covid-19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம். 
  • பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் காலநிலை தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படும். 
  • சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும். 
  • தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல் 
  • தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு 
  • மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை. 
  • மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி. 
  • திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி. 
  • நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 1,500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம். 
  • பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை. 
  • வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை. 
  • அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கு தடை. 
  • குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது. 
  • வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள். 
  • சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு. 
  • சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி. 
  • உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
  • கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டம்.
  • கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள். 
  • இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடல்.
  • அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7% மாக குறைக்கப்படுகிறது. 
  • அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு. 
  • மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும். 
  • 25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு, 
  • இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு.
  • கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்.
  • இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கம்.
  • எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
  • 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 1,886 பில்லியன் ரூபாவாகும் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3,441 பில்லியன் ரூபா. வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.
  • Irumbuthirainews
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை...

November 18, 2020

Drone கருவிகள் ஊடான கண்காணிப்பின் மூலம், நேற்றும் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்...

November 18, 2020

சுமார் 20 - 30 நிமிடங்களில் கொரோனாவை அறியக்கூடிய துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று (18) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் தெரிவித்தார். 
இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். வைத்தியசாலைகளுக்கு வரும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளை உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 18, 2020

16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி....

November 18, 2020

நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி.... நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி.... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை...

November 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 44ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி. அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
  • வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றுறுதியானவர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள இருவரால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்பதோடு கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 
  • கடந்த 2 வாரகாலங்களுக்குள் சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரசோதனை மேற்கொள்ள வேண்டும் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே. சிங்காராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். 
  • இதுவரை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் 2) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் 3) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் 4) கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் 5) தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண். இத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 401 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்...

November 17, 2020

வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. 
இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல, 
அதே வேளை தொற்று ஒருவரிடம் இருந்து பொதுமக்களுக்கு பரவுவது தடுக்கப்பட வேண்டும். அதனை மேற்கொள்வது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.