திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...
irumbuthirai
November 24, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 50ம் நாள் அதாவது திங்கட்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த நபர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது கொவிட் தொற்றாளர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
- 3ம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகூடிய அதாவது 55% மாணவர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
- வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் நபர் தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சுகாதார வழிமுறைகளுக்கு அமைய LPL மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும்.
- அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை.
- மேலும் 03 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 60 மற்றும் 86 வயது பெண்கள். 60 வயது ஆண். இத்துடன் மொத்த மரணம் 90 ஆக உயர்வு.
- இன்றைய தினம் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 24, 2020
Rating: