திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை...

November 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 50ம் நாள் அதாவது திங்கட்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த நபர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான 22 வயது கொவிட் தொற்றாளர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • இன்று 5 வீதமான மாணவர் வருகையே பதிவானதாக ஆசியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 
  • 3ம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகூடிய அதாவது 55% மாணவர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். 
  • வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் எல்பிட்டி-நவதகல பிரதேசத்தில் வசித்து வரும் நபர் தமது வீட்டுக்கு திரும்பியிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • சுகாதார வழிமுறைகளுக்கு அமைய LPL மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
  • பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும். 
  • அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
  • மேலும் 03 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 60 மற்றும் 86 வயது பெண்கள். 60 வயது ஆண். இத்துடன் மொத்த மரணம் 90 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 24, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 49ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொரல்ல, கோட்டை, கொம்பனி வீதி மற்றும் வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவுளும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஜா-எல மற்றும் கடவத்தை பொலிஸ் பிரிவுகளும் நாளை (23) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படுவதாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • குருணாகலை பிரதேச தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் குருணாகலை பிரதான தபால் அலுவலகத்தின் அலுவலக ஊழியர்கள் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குருணாகலை மாவட்டத்தின் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
  • பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
  • பச்சையாக மீனை உண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சியை வரவேற்கும் நிகழ்வொன்று தங்காலை மீன்பிடி துறைமுக மீனவர்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி பச்சையாக மீனை உண்ட சம்பவத்தை தொடர்ந்து மீன் வியாபாரம் இத்தினங்களில் வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெரிவித்தே அவருக்கு இந்த வரவேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  • நாளை முதல் ஒரு வாரக்காலத்திற்கு பாடசாலைகளை திறந்து குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு வகையில் பாடசாலை கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் அரசாங்கத்தின் சார்பாக தான் அந்த பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
  • நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  • நாளை முதல் ஆரம்பமாவுள்ள மூன்றாம் தவணைக்கு பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து முறைகளை பொலிஸ் ஒழுங்குபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • பாடசாலைகளில் கொரோனா அச்சம் அதிகரிக்காமல் இருக்க சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. 
  • கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 4 கொரோனா மரணம் அறிவிப்பு. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 400 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்...

November 23, 2020

தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன. 
ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை. 
இதேவேளை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு.கமகே தெரிவிக்கையில், 
ஹட்டன் வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளும் கண்டி–அக்குறனை மற்றும் மஹிய்யாவ பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் சிலவற்றின் கற்றல் செயற்பாடுகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 
இதேவேளை உரிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொள்வார்கள் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்... இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை...

November 23, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 48ம் நாள் அதாவது சனிக்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (20) முதல் 14 நாட்கள் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • இதுவரையில் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநயக்க தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • முறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளன. 
  • நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.
  • கொரோனாவினால் மேலும் 9 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த மரணம் 83 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 491 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews


திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்...

November 22, 2020

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் வலையத்திற்குள் அமைந்துள்ள பாடசாலைகள், கிழக்கு மாகாண 5 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பாடசாலைகள் தவிர்ந்த சுமார் 5,100 பாடசாலைகளில் நாளை (23 ஆம் திகதி) முதல் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15 / 2020 என்ற சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
விசேடமாக இதில் குறிப்பிடப்பட்ட வகையில் சுகாதார மேம்பாட்டு குழுவை முன்னிலைப்படுத்தி மிகவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 
நாட்டில் உள்ள 91% ஆன பாடசாலைகள் 1000 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும். சமூக இடைவெளி உள்ளிட்ட ஏனைய சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை முன்னெடுப்பதில் நடைமுறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்... நாளை (23) பாடசாலை ஆரம்பிக்கப்படாத பகுதிகள்... Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு:

November 22, 2020

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசியல் களத்தில் Top Ten List இல் முதலில் இருந்த கொரோனா விவாகாரம் இவ்வாரம் கொஞ்சம் சறுக்கியிருந்தது. 
கடந்த தொடரின் இறுதியில் நாம் குறிப்பிட்டிருந்தது போல வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் கொரோனா விவகாரத்தை தள்ளி முக்கிய செய்திகளாக இடம் பிடித்தன. 

 #முப்பெரும் விழா கொண்டாடிய அரசு
கடந்த வாரம் அரசுக்கு மிக முக்கியமான வாரமாக அமைந்தது. மூன்று முக்கிய நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து ஒரு வருடம் பூர்த்தியாதல், SLPP அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75 ஆவது பிறந்த தினம் என்பனவே அம்மூன்று விடயங்களுமாகும். 

#அனுராதபுரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் மத நிகழ்வுகள் மாத்திரம் நடைபெற்றன. இதற்கென ஜனாதிபதி, பிரதமர் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை அனுராதபுரத்தில் தங்கினர். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும், பிரதமர் மஹிந்த வணிகரான முதித குணசேகரவின் வீட்டிலும் தங்கினர். 
பிரதமர் மஹிந்தவை சந்திக்க மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தந்ததுடன், ஜனாதிபதியை சந்திக்க யாருமே செல்லவில்லை. 
அடுத்த நாள் இவர்கள் இருவரும் தனித்தனியாக மத சடங்குகளில் ஈடுபட்டனர். மஹிந்த முதலில் புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்க சென்றார். அவருடன் மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளான SM சந்திரசேன, துமிந்த, ஷெஹான், ஆகிய அமைச்சர்களோடு, முன்னாள் வடமேல் மாகாண முதல்வர் SM ரஞ்சித் உம் இணைந்து கொண்டனர். 
 அதனைத் தொடர்ந்து அங்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் மாத்திரம் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அனுராதபுரத்தில் உள்ள 8 தலங்களுக்கும் ( அட்டமஸ்தான) இவர்கள் வெவ்வேறாகவே சென்ற போதிலும் மிரிசவெடிய விகாரையில் நடைபெற்ற பூஜையில் இணைந்து கலந்து கொண்டனர். 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
இவ்வார அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 9 மணி வரை நீண்டு சென்றது. அதிகமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை இவ்வார கூட்டம் மிக நீண்டு செல்ல காரணமாக அமைந்தது. 

** மீண்டும் சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்** 
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கோவிட் 19 காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல் பரவி பாரிய சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. 
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவசங்ச இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி முக நூலில் இட்டிருந்த பதிவு ஒன்றே காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். 
அதனை மறுத்த அலி சப்ரி தான் அவ்வாறு எந்த பதிவையும் இடவில்லை என்றும், முடிந்தால் தான் இட்ட அவ்வாறான பதிவு ஒன்றைக் காட்டுமாறும் அமைச்சர் விமல்க்கு சவால் விடுத்தார். 

 **டக்ளஸ், விமல் இன் ஆயுதங்களுக்கு ஏற்பட்ட சோதனை
ஆயுதங்கள் தொடர்பான ஒரு தொல்பொருள் காட்சிச்சாலையை உருவாக்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்திருந்தார். 
இலங்கையின் பாரம்பரிய ஆயுதங்கள், சம்பிரதாயப்பூர்வமாக பரம்பரை பரம்பரையாக வீடுகளில் உள்ள ஆயுதங்களை திரட்டி இதனை பிரதமர் முன் மொழிந்தார். இதன் மூலம் இவற்றை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச "அப்படியென்றால் அதில் டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்திய ஆயுதங்களையும் வைக்கலாம்" எனக் கூற குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே "ஏன் டக்லஸ் இனுடையது மட்டுமே. விமல் பயன்படுத்தியதைக் கூட வைக்கலாமே" என்று குறிப்பிட்ட ஒட்டு மொத்த அமைச்சரவையும் சிரிப்பலையால் நிறைந்தது. 

**சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு பதிலளிக்க தயாராகும் அரசு** 
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. 
அரசுக்கு எதிரான சில சக்திகள் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு சேறு பூசி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செய்ய முடியுமான சகலதையும் செய்திருக்கும் நிலையில் கோவிட் பாதிப்பினால் மக்கள் வீதிகளில் இறந்து விழுவது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் உட்பட அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 
இறுதியாக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 

#நிதியமைச்சர் மஹிந்தவின் சாதனை
கடந்த 17 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச. இது அவர் சமர்ப்பிக்கும் 11 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதற்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை மஹிந்த சமப்படுத்தினார். 
அத்துடன் இம்முறை மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கையின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதனை சமர்ப்பித்த மறுநாள் சமர்ப்பித்தவரின் 75 ஆவது பிறந்த தினம் வந்தமை விதியின் விளையாட்டு என்று அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார். 
 #வரவு செலவுத் திட்ட உரை
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக பிரதமர் பி.ப 1 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். சபை முதல்வர் தினேஷ், ஆளும் கட்சி பிரதம கொரடா ஜோன்ஸ்டன் ஆகியோர் அவரை வரவேற்றனர். 
உரை ஆரம்பம் செய்வதற்கான சுப வேளை பி.ப 1.40 க்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமையால் பிரதமர் நேரடியாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கே நிதியமைச்சின் செயலாளர் ஆடிகல மற்றும் சில அமைச்சர்களோடு கலந்துரையாடினார். சரியாக 1.40 க்கு பிரதமர் உரையாற்ற ஆரம்பித்தார். இந்த உரை சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் அளவுக்கு நீண்டு சென்றது. 
 வழக்கமாக உரையின் பின்னால் நிதியமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துபசாரம் இம்முறையை உரையின் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதில் பரவலான பங்குபற்றல் இடம்பெறவில்லை. சுமார் 10 வருடங்களாக இந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றாமல் இருந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இம்முறை தனது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்து கலந்து கொண்டார். 

 #பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் இவ்வாரம் கொண்டாடப்பட்டன. இவர்களில் பிரதமரின் பிறந்த தினம் மிக முக்கியமானதாக இருந்தது. பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அபயாராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் ஏற்பாடு செய்திருந்த பாட்டிமாருக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று அபயாராமவில் நடைபெற்றது. 
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்க சென்ற பிரதமருக்கு SLPJP இன் மொட்டு சின்ன வடிவில் பிறந்தநாள் கேக் தயாரித்து வழங்கி அசத்தினார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. கேக் வெட்டிய மஹிந்த முதல் துண்டை பிரசன்னவுக்கு வழங்கி மகிழ்ந்தார். 
 இது தவிர ஆளும் கட்சி உறுப்பினர்களான பிரேம்நாத் தொளவத்த, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரின் பிறந்த தினங்களும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டன. பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர் உறுப்பினர்கள். 
அரசியலமைப்பின் 20 ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்த அரவிந்த் குமார் இன் பிறந்த தினமும் இவ்வாரம் வந்திருந்தது. இவ்வாரம் இடம் பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் அவர் முதல் முறையாக கலந்து கொண்டார். அங்கே அவருக்கு ஒரு பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். பல ஆண்டுகள் நான் எதிர்க்கட்சியின் இருந்தேன். ஆனால் எனக்கு இவ்வாறான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. காலையில் பிரதமர் நேரடியாக என்னை வாழ்த்தினார். நான் அடைந்த மிகச்சிறந்த பிறந்தநாள் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அரவிந்த குமார். 

 #சஜித் ஐ சந்திக்க வந்த விருந்தினர்
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வருகை தரும் போது அவரை சந்திக்க ஒரு விருந்தாளி காத்திருந்தார். 
அவர் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐதேக சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய. சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் அவர் வருகை தந்திருந்தார். அவருடன் சுமார் அரை மணிநேரம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றத்துடன், SJB இன் புத்திஜீவிகள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ள முன்வருமாறு சஜித் வேண்டிக் கொண்டார். அதன் பின்னர் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவோடும் கிரிஷ்மால் கலந்துரையாடினார். 

 #குறைகேள் எதிர்க்கட்சி
கிரிஷ்மாலுடன் கலந்துரையாடிய சஜித் நேரடியாக சென்றது தொலைபேசி அழைப்பு நிலையத்திற்காகும். கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளமை குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு எதிர்பாராத மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக ஹரீன், மனுஷ, மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் போன்றோர் தொடர்ந்து மக்களின் குறைகளைக் கேட்டு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் குறைகளை பாராளுமன்ற உறுப்பினர்களே நேரடியாக கேட்டு பதிவு செய்து வருகின்றனர். 
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த சஜித் இந்த செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். நீண்ட நேரம் மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்த அவர் "இவ்வாறு பதிவு செய்யும் விடயங்கள் ஒரிஜினல் ஐ இங்கே வைத்துக் கொண்டு பிரதி ஒன்றை எனக்கு தாருங்கள். வண்டியில் செல்லும் போது வாசித்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்" எனத் தெரிவித்தார். 
"பாராளுமன்ற கூட்டம் உள்ளது. இல்லையென்றால் நாள் முழுவதும் இருந்து பொது மக்களின் குறைகளைக் கேட்டிருப்பேன்" என்று சொன்ன எதிர்க்கட்சி தலைவர் சஜித், குறித்த செயற்பாடு இடம்பெறும் பொறிமுறை தொடர்பிலும் ஹரீனிடம் விபரங்களை கேட்டறிந்தார். "நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் இங்கே வருகிறோம். மக்களின் குறைகளை கேட்கிறோம். அவற்றை பதிவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அதன் பின்னர் உரிய தரப்பிற்கு அவற்றை வழங்கி தீர்வினை வழங்க தேவையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம்" என ஹரீன் விளக்கினார். 
 "இந்த வேலை அரசுக்கு மிகுத்த பாதிப்பை உருவாக்கியுள்ளது. இன்று நாம் மக்களின் குறைகேள் அதிகாரிகளாகியுள்ளோம்."என்று சஜித் கூறினார். 

 #பச்சை மீன் சாப்பிட்ட திலீப்
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியைத் தொடர்ந்து இலங்கையின் மீன் விற்பனை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் சிறிய, பெரியாளவிலான மீன் வியாபாரிகளின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னமும் மக்கள் மீன் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 
இந்நிலையில் மீனவர்களுக்காக துணிந்து குரல் கொடுத்தால் SJB பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி. "மீன் சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவும் என்று சிலபேர் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையில் அது பொய். அதனை நிரூபிக்க நான் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டுகிறேன் என்று தெரிவித்த திலீப் தான் கொண்டு வந்திருந்த மீனின் ஒரு பகுதியை பச்சையாக உண்டு காட்டினார். இவ்விடயம் ஊடகங்களில் வெளியானது. சிலர் இதனை மோசமான செயலாக கூறினார். 
 இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் "உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மீனவ சமூகம் மிக சிக்கலான நிலைமையில் உள்ளது. அரசு அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இவ்வாறான நிலையில் அவர்களுக்காக பேச நீங்கள் முன் வந்துள்ளீர்கள்" என்றார். 
"பச்சையாக மீன்களை உண்ணும் வழக்கம் ஜப்பான் உட்பட கீழைத்தேய நாடுகளில் உள்ளது. இது தெரியாத சிலர் இதனை விமர்சனம் செய்கின்றனர்." என மனுஷ எம்பி கூறினார். 
"திலீப் பயமில்லாமல் செய்த இவ்விடயம் மிகப்பெரிய ஒரு விடயம். அரசு செய்ய வேண்டிய வேலையை நாம் செய்துள்ளோம். இது பையாக்களுக்கு (மொட்டு கட்சியினரை குறிக்க பயன்படும் சொல்) நகைச்சுவையாக இருந்தாலும் சர்வதேச ஊடகங்களில் நல்ல விதமாக எடுத்துக் கொள்வார்கள்" என்று எதிர்வு கூறினார் ஹரீன். அவர் சொன்னவாறே சர்வதேச ஊடகங்கள் பல இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. 

#ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்த சஜித்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பாரிய வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்றில் தெரிவித்தார் சஜித். 
"இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. அரசின் தோல்வி ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அடக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அவர்களை சிறைக்கு அனுப்ப கொண்டு செல்லும் ஊடக வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஒரு போதும் நாங்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அதற்கு எதிராக நாம் போராடுவோம். அரசியலமைப்பை ஒரு முறை படிக்குமாறு அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எந்த வகையிலான ஊடக அடக்குமுறைக்கு அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு நாங்கள் எதிராவோம். அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அரசு மீறுகிறது" என காரசாரமாக விமர்சனம் செய்தார். 

 #பட்ஜெட் பற்றிய எதிர்க் கட்சிக் கூட்டம்
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி சமரதுங்க உட்பட அறிஞர் குழாம் ஒன்று வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தனர். "இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு உணரத்தக்க எந்த சலுகையையும் அரசு வழங்கவில்லை" என கலந்துரையாடலை ஆரம்பித்தார் இரான் எம்பி. 
 "அரசு நாம் பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து பேசுகிறது. நாம் ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொண்டதை விட அதிகமாக கடந்த ஆண்டில் கடன் பெறப்பட்டுள்ளது" என்று அசோக் எம்பி கூறினார். 
 "இந்த அரசாங்கம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேலை செய்கிறது. வெளிநாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை ஒரு வீத தண்டப் பணத்தை செலுத்தி நாட்டிற்குள் கொண்டு வர வரவு செலவுத் திட்டத்தினுடாகவே முன் மொழியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான கறுப்புப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதிக்கும் உத்தியோகபூர்வ ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார் கலாநிதி ஹர்ஷ எம்பி. இதே நேரம் சஜித் பொருளாதார விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் விளக்கங்கள் கோரி தெளிவு பெற்றுக்கொண்டார். 

 #அனுர குமாரவின் பாராளுமன்ற உரை
பாராளுமன்றத்தில் எப்போதுமே சிறப்பான உரைகளை ஆற்றுபவர் ஜேவிபி தலைவர் அனுர. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்தார். 
குறிப்பாக இலங்கை 5 விதமான பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக உதாரணங்களுடன் விளக்கிய அவர் சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு இந்நிலையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். 
 1974 ல் இலங்கையிலும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நாணயத் தாள்களை பாவனையில் இருந்து அகற்றி கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தது போல் அல்லாமல் 1 வீத தண்டம் செலுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். 
அத்துடன் கடன், தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகிய இரண்டும் தவிர வேறு அரசிற்கு மார்க்கங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மொத்த தேசிய உற்பத்தியின் விகிதமாக அரச வருமானத்தின் விகிதத்தை சுட்டிக்காட்டிய அனுர எம்பி வலயத்தில் ஏனைய நாடுகள் மற்றும் உலகின் பல நாடுகளோடு ஒப்பிட்டதுடன் இலங்கை எந்தளவு பின்தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். 
அத்துடன் மொத்த அரச செலவினத்தில் 28% மட்டுமே அரசின் வருமானங்கள் என்றும் இதற்கான தீர்வுகள் அரசிடம் இல்லையென்றும் கூறினார். புகழ் பெற்ற டைட்டானிக் விபத்தின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறி அவர் உரையை நிறைவு செய்தார். "பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கடலில் மூழ்க சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் சென்றது. அந்த இரண்டரை மணித்தியாளங்களும் கப்பலில் இருந்த வாத்தியக் குழுவினர் இசைத்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறே இலங்கையும் கடன் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் உரையை நிறைவு செய்தார். 

 #ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய யாப்பு
எங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியை வாங்கியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. இதன் யாப்பு எங்கள் தேசிய முன்னணியின் யாப்பாகவே இருந்தது. கட்சியின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு யாப்பை திருத்தி புது யாப்பு ஒன்றை உருவாக்க செயலாளர் ரஞ்சித் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு ஆரம்ப கட்ட யாப்பு முன்மொழிவை தயாரித்து முடிந்துள்ளது. இதனை கட்சி மேலிடத்திற்கு வழங்கி அவர்களின் ஆலோசனையின் பின்னர் பூரணப்படுத்தப்படும். 
SJB இற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனவரி மாதம் ஆரம்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது. 

 #கொழும்பில் தரித்த ருவன்
பிரயாண கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாரம் ஐதேக பிரதித் தலைவர் ருவன் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். எனினும் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. கம்பஹா மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வாயிலாக தமது குறைபாடுகளை முன்வைத்தனர். 
5000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்கும் சிரமங்களை பல குறிப்பிட்டனர். அவற்றை பொறுமையாக கேட்ட ருவன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

 #பாடசாலை மீள ஆரம்பம்
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தமையைத் தொடர்ந்து அது தொடர்பான வாத விவாதங்கள் சூடு பிடித்தன. 
தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளை மையப்படுத்தி புதிய கொத்தணி ஒன்று உருவானால் பொறுப்பேற்பது யார் என்ற தொனியில் கல்வி சார் தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்தன. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்யும் வாகன உரிமையாளர் சங்கமும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. 
இவை இவ்வார நடவடிக்கைகளே. அடுத்த வாரம் புதிய தலைப்புகள் சூடு பிடிக்கலாம். ஏனைய தலைப்புகளை மிஞ்சி கொரோனா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கலாம். பாடசாலை ஆரம்பித்தல் விவகாரம், வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் போன்ற தலைப்புகள் பேசப்படலாம். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா?

November 22, 2020

அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று (21. 11.2020) இரவு 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது. 
அதாவது அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்...

November 21, 2020

மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படுவதுடன் அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் மத்ரஸா பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டது. 
இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார். 
மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை...

November 21, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 47ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கொவிட்19 தொற்றுகாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 02 பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார். தாய் தொடர்ந்தும் தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
  • இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வடமேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படமாட்டாது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்த இடங்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
  • மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது. 
  • நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. 
  • சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானித்ததாக தெரிவித்தார். 
  • பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன. 
  • கொரோனா 2வது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள E-Channel இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,280 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது...

November 21, 2020

வார இறுதியில் அதாவது, இன்று(21) மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. பெர்னான்டோ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு...

November 20, 2020

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 02 வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்...

November 20, 2020

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஜும்ஆத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் ஒப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளனர். 
சகல முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தினத்தில், ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது சமய ரீதியான கடமையொன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். 
இதனடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ளும் பொருட்டு நேர ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இதுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போதும், முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜப்னாமுஸ்லிம்.
ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...

November 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.