திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-11-2020 நடந்தவை...
irumbuthirai
December 01, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 53ம் நாள் அதாவது வியாழக்கிழமை (26) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- தொற்றா நோய் கிளினிக் சிகிச்சைக்கான மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சூழ்நிலையில் நாம் இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை WhatsApp, Viber மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
- கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
- வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.
- சில நபர்களை PCR பரிசோதனைகாக அழைத்திருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- COVID-19 நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு உசிதமான பரிசோதனை PCR முறைமையே என்று அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரெபிட் எண்டிஜென் என்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனை முறைமை, PCR பரிசோதனைக்கு மாற்றீடாக அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
- ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்று வந்த வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார்.
- கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- 03 மணித்தியாலங்களுக்குள் PCR முடிவுகளை பெற்றுக்கொள்ளகூடிய PCR பரிசோதனை கருவிகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான தளத்தில் பொருத்துவதற்கு சுவிட்ஸர்லாந்து உதவியளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் நாளொன்றுக்கு 1300 PCR பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும்.
- அடுத்த வருடம் ஜனவாரி மாதம் வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- கடந்த இரண்டு வாரங்களில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சிலாபம் காவற்துறை பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவக பிரிவுகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகொடவத்த கடற்கரை,வடக்கு கடற்கரை,தென் கடற்கரை,குருசபாடுவ மற்றும் வெரலபட ஆகிய பகுதிகளுக்கு கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. 80 மற்றும் 87 வயதுடைய ஆண் இருவர் மற்றும் 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 559 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
December 01, 2020
Rating: