திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை...
irumbuthirai
December 06, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 62ம் நாள் அதாவது சனிக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- இவ்வருடம் வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு 6ம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சகல சிறைச்சாலைகளிலும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
- ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேற முடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
- Covid-19 தொற்று பரவல் தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலேயே இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
- நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள், எந்தவித நோய் அறிகுறியும் இன்றி கொரோனா தொற்றுறுடன் இருக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது..
- காலி, பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில் தரம் 12 மாணவி ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார்.
- சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
- சிறைக்கைதிகள் உட்பட மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமடகொட பிரசேத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 669 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் இலங்கையின் மொத்த தொற்றாளர்கள் 27,228 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
December 06, 2020
Rating: