வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம்

December 11, 2020

இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமையே இதுவரையுள்ள வழமையாகும். 
ஆனால் புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் 28 நாட்கள் 14 நாட்களாக குறைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் முறையில் மாற்றம் Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்..

December 11, 2020

50 ற்கு மேட்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு நேற்றைய தினம் (10) பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். 
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுடனான சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், 
பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் இன்றைய தினம் கடமையில் இணைத்துக்கொண்டமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் சகலரும் நமது சமூகத்திற்கு மிகப் பெறுதியானவர்கள். 
மேலும் பெருந்தோட்ட சமூக மக்களுக்கும், இந்நாட்டிற்கும் உங்களின் கடமை பெறுமதியானது. நீங்கள் சகலரும் இளைஞர்கள் எனவே அனைவரும் தங்களது கடைமைகளை நேர்த்தியாக செய்வீர்கள் என நம்புகின்றேன். உங்களுடைய கடமைகளை செய்ய ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் அதனை என்னால் நிவர்திசெய்து தரமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்.. ஜீவன் தொண்டமானின் அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள்.. Reviewed by irumbuthirai on December 11, 2020 Rating: 5

கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி

December 10, 2020

கொரோனா நோய்த்தொற்று நிலைமையை முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தடையாக கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள சகல இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்.. 
"சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும். 
நாட்டின் வருங்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5

Vacancies (Management Trainee): Bank of Ceylon

December 10, 2020

Vacancies for Management Trainees in the Bank of Ceylon. 
Closing date: 19-12-2020. 
See the details below.
Source : 06-12-2020 Sunday Observer.



Vacancies (Management Trainee): Bank of Ceylon Vacancies (Management Trainee): Bank of Ceylon Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5

Vacancies: Ministry of Justice

December 10, 2020

Vacancies in the Ministry of Justice. 
Closing date: 21-12-2020. 
See the details below.
Source : 06-12-2020 Sunday Observer
Vacancies: Ministry of Justice Vacancies: Ministry of Justice Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5

Degree Courses: SLT Training Center

December 10, 2020

Degree Courses in the Sri LanSLT Training Center. (With industrial Training) 
See the details below.


Degree Courses: SLT Training Center Degree Courses: SLT Training Center Reviewed by irumbuthirai on December 10, 2020 Rating: 5

04-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

December 09, 2020

04-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 04-12-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
04-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 04-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on December 09, 2020 Rating: 5

07-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 08, 2020

07-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
07-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 07-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 08, 2020 Rating: 5

Vacancies: Sir John Katalewela Defence University

December 08, 2020

Vacancies in the Sir John Katalewela Defence University. 
Closing date: 21-12-2020. 
See the details below.


Vacancies: Sir John Katalewela Defence University Vacancies: Sir John Katalewela Defence University  Reviewed by irumbuthirai on December 08, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Tea Board

December 08, 2020

Vacancies in the Sri Lanka Tea Board. 
Closing date: 21-12-2020. 
See the details below.



Vacancies: Sri Lanka Tea Board Vacancies: Sri Lanka Tea Board Reviewed by irumbuthirai on December 08, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை...

December 08, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 63ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நாளை (7) தொடக்கம் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 
  • காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (07) தொடக்கம் 03 தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
  • மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரையில் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு. சிறைச்சாலை கொத்தணியில் 
  • கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • களனி, சபுகஸ்கந்த பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விகாரையின் தேரர்கள் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகொல பொது சுகாதார பரிசோதகர் எஸ்.பெரேரா தெரிவித்தார். 
  • நாளை (7) அதிகாலை 05 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் கொம்பனித்தெரு காவல்துறை அதிகார பிரசேதத்தில் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பகுதியும், கறுவாத்தோட்ட காவற்துறை அதிகார பிரிவில் 60ம் தோட்டமும் வெள்ளவத்தை காவற்துறை அதிகார பிரிவில் கோகிலா வீதியும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவற்துறை அதிகார பிரிவின் கெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடை முல்ல ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் பேலியாகொடை காவற்துறை அதிகார பிரதேசத்தில் பேலியாகொடை வத்த, பேலியாகொரட - கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதுதவிர, கிரிபத்கொடை காவற்துறை அதிகார பகுதியின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில இடங்கள் நாளை அதிகாலை 05 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் காவற்துறை அதிகார பிரதேசங்களும், வெல்லம்பிட்டி காவற்துறை அதிகார பிரதேசத்தின் விஜயபுர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரதேசத்தில் வேகந்த கிராம சேவகர் பிரிவும், பொளை காவற்துறை அதிகார பிரதேசத்தில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி காவற்துறை காவற்துறை அதிகார பிரதேசத்தில் சால முல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 
  • நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றும், ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி. கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 649 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
uo
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 08, 2020 Rating: 5

PCR செய்தவர்களை இனம் காண புதிய App

December 07, 2020

PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுபவர்களை பதிவு செய்வதற்காக புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, ஆய்வு கூட கட்டமைப்பு, சுகாதார அமைச்சு மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொற்று நோய் விசேட நிபுணர்கள் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கையடக்க தொலைபேசி செயலியை அடுத்த வாரம் முதல் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
PCR செய்தவர்களை இனம் காண புதிய App PCR செய்தவர்களை இனம் காண புதிய App Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5

MBA: Sabaragamuwa University of Sri Lanka.

December 07, 2020

MBA (weekend) in Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 15-01-2021. 
See the details below.


MBA: Sabaragamuwa University of Sri Lanka. MBA: Sabaragamuwa University of Sri Lanka. Reviewed by irumbuthirai on December 07, 2020 Rating: 5
Powered by Blogger.