அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு..
irumbuthirai
December 13, 2020
புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பொன்று கடந்த 11 அன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதமர்,
பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள், இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என சுட்டிக்காட்டினர்.
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு..
Reviewed by irumbuthirai
on
December 13, 2020
Rating:
