யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு!

December 14, 2020

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவும் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் யாழ் மாவட்ட வலிகாமம் கல்வி வலயம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை (15) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். 
யாழில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

Computer Based Accounting Courses (University of Sri Jayawardanapura)

December 14, 2020

Computer Based Accounting Courses (University of Sri Jayawardanapura) 
Closing date: 31-12-2020. 
See the details below.


Computer Based Accounting Courses (University of Sri Jayawardanapura) Computer Based Accounting Courses (University of Sri Jayawardanapura) Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள்

December 14, 2020

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்ட பாடசாலைகள் மற்றும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்ட பாடசாலைகள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். 
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
அந்த வகையில் உடுவில் கல்விக் கோட்டத்தில் 33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகளும் மொத்தமாக 73 பாடசாலைகள் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் 73 பாடசாலைகள் Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

Vacancy: The Open University of Sri Lanka.

December 14, 2020

Vacancy in the Open University of Sri Lanka. 
Closing date: 11-01-2021. 
See the details below.


Vacancy: The Open University of Sri Lanka. Vacancy: The Open University of Sri Lanka. Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

Vacancies: National Insurance Trust Fund

December 14, 2020

Vacancies in the National Insurance Trust Fund. 
Closing date: 21-12-2020. 
See the details below.


Vacancies: National Insurance Trust Fund Vacancies: National Insurance Trust Fund Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

Vacancy: People's Bank

December 14, 2020

Vacancy in the People's Bank. 
Closing date: 21-12-2020. 
See the details below.


Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

Vacancy: American Embassy (Tamil Translator)

December 13, 2020

Vacancy in the American Embassy (Tamil Translator) 
Appllication method: through embassy web site. 
Closing date: 18-12-2020. 
See the details below.


Vacancy: American Embassy (Tamil Translator) Vacancy: American Embassy (Tamil Translator) Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர்

December 13, 2020

தேசிய மட்டத்தில் கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
அந்தவகையில் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் மருந்து பானி, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருந்து, கலாநிதி ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோரினால் விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை என்பவற்றை ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் விரைவாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்?

December 13, 2020

விரைவில் உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொரொனா தடுப்பு மருந்தை தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். 
அனுராதபுரத்தில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்..

December 13, 2020

நிலையான அட்டவணையின்றி செல்லும் விமான சேவையே இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். 
இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 
சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. நிலையான அட்டவணையின்றி ஆரம்பமாகும் விமான சேவைகள்.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள்

December 13, 2020

தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படும் மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 

 ஊடக அறிக்கை 
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டம் 
(01) டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்:

• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்) 
• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்) 
• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை பொலிஸ் வலயம்) 
• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்) 
 
(02) தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்:  
• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு) 
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு 
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு 
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு 
• டேம் வீதி பொலிஸ் பிரிவு 
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு 
• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு 
• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு 
• மருதானை பொலிஸ் பிரிவு 
• கெரம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு 
• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு  
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம் 
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி 
 
(03) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்:  
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ் 
 
கம்பஹா மாவட்டம் 
(01) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்: 
வத்தளை பொலிஸ் பிரிவு 
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு  
• ஹெவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு பேலியகொட பொலிஸ் பிரிவு 
• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு 

(02) தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள் பேலியகொட பொலிஸ் பிரிவு:
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு. 
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு கிரிபத்கொட பொலிஸ் பிரிவு 
• வெலேகொட வடக்கு நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு 
• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி வெயங்கொட பொலிஸ் பிரிவு 
• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை  
(03) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்: 
வத்தளை பொலிஸ் பிரிவு 
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம் 
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம் பேலியகொட பொலிஸ் பிரிவில் 
• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் 
• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் 
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள் 

களுத்துறை மாவட்டம் 
(01) நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம். 
 • புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு 
• குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி 

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார். 

நாலக கலுவௌ. 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் தனிமைப்படுத்தல் தொடர்பாக விடுக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு..

December 13, 2020

புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பொன்று கடந்த 11 அன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 
இதன்போது பிரதமர், பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். 
அதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள், இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என சுட்டிக்காட்டினர்.
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka

December 13, 2020

Applications are called for Level 5/ Level 6 of the Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme. This Degree Programme is a four academic years programme especially planned for Science / Mathematics teachers. 
Online Applications : 06th December 2020 
Closing Date for Applications : 06th January 2021 
Click the link below for more details.
B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka B.Ed Honours in Natural Sciences: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5
Powered by Blogger.