முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை..
irumbuthirai
December 18, 2020
முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உள்ள பிசிஆர் இயந்திரத்தில் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் தோன்றி உள்ளதாக அந்த வைத்தியசாலை பணிப்பாளர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயன பதார்த்தம் ஒன்றின் பற்றாக்குறையே இதற்கு காரணம். சுமார் 2,000 பரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலையில் 1,000 பரிசோதனைகளே தற்பொழுது இடம்பெறுகின்றன. குறித்த இரசாயன பதார்த்தத்தை அரசிடம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது உள்ள நிலைமையில் இதை வெளிநாட்டிலிருந்து தருவித்து தருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும் தற்போது 1000 பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் இது மேலும் குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லேரியா வைத்தியசாலை PCR இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை..
Reviewed by irumbuthirai
on
December 18, 2020
Rating: