Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய

December 19, 2020

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஒன்று இருப்பதாக அறிகின்றோம் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 
சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் காரணமான அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு உண்டு. இதற்கமைவாக சகல சமூக ஊடகங்களும் அதாவது முகபுத்தகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் எமது அமைச்சில் தயாரித்துள்ளோம். 
தற்பொழுது சமூக ஊடகங்களுக்கு மாத்திரமே இதனை நாம் தயாரித்துள்ளோம். சுயகட்டுப்பாடு தொடர்பில் நான் முன்னர் 2010ஆம் ஆண்டில் முயற்சித்தேன். அப்பொழுது அமைச்சராக இருந்த வேளையில் நான் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். 
எதிர்வரும் திங்கட்கிழமையும் (21) இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவையும் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancy: Colombo Urban Regeneration Project

December 19, 2020

Vacancy for the Colombo Urban Regeneration Project. 
Closing date: 23-12-2020. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancy: Colombo Urban Regeneration Project Vacancy: Colombo Urban Regeneration Project Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancies: University of Moratuwa

December 19, 2020

Vacancies in the University of Moratuwa. 
Closing date: 03-01-2021. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancy: Department for Registration of Persons.

December 19, 2020

Vacancy in the Department for Registration of Persons. 
Closing date: 13-01-2021. 
See the details below.
Source: 13-12-2020 Sunday Observer.


Vacancy: Department for Registration of Persons. Vacancy: Department for Registration of Persons. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

Vacancies for Doctors in Oman

December 19, 2020

Vacancies for Doctors in Oman. 
See the details below.

Source: 13-12-2020 Sunday Observer.

Vacancies for Doctors in Oman Vacancies for Doctors in Oman Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா?

December 19, 2020

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார அமைச்சரையும் சுகாதாரத்துறை நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்படி அது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது இம்மாதம் 21ஆம் திகதி அறிவிக்க முடியும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை 
இம்மாதம் 23ஆம் தேதி வழங்கப்படுவதனால் அதற்குள் குறித்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா? மேல் மாகாண பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படுமா? Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம்

December 19, 2020

திரிபோஷா விநியோக தடை தொடர்பான விளக்கத்தை சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். 
அதாவது சோளத்திற்கான தட்டுப்பாடு காரணமாக 
திரிபோஷா தயாரிப்பு தடைபட்டிருக்கிறது. மாறாக இதை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பபடவில்லை. தயாரிப்பு தொடர்பிலேயே சிக்கல் இருக்கிறது. 
தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் குழந்தைகளின் போசாக்கு நிலை குறைவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளினதும், தாய்மார்களினதும் போசாக்கு அவசியமாகும். இதன் காரணமாக போசாக்கு உற்பத்திக்கானவற்றை விரிவுப்படுத்தி பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அதேபோன்று போசாக்கு குறைப்பாடுள்ள பிள்ளைகளுக்கும் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என நாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம் திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம் Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

December 19, 2020

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதியே மீள திறக்கப்படும் என தென் மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு காலி பிரதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை...

December 19, 2020

கண் பிரச்சினைக்கு சிகிச்சை பெற வரும் மாணவர் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காண முடிவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் வைத்தியர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார். 
கண் பிரச்சினைகள் காரணமாக தற்போது தினமும் 20 தொடக்கம் 30 வரையான மாணவர்கள் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா தொற்று காரணமாக Online கல்வியில் அதிக கவனம் செலுத்துவதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கணினி அல்லது மொபைல் தொலைபேசி திரையை பார்க்க வேண்டாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும். 
குறிப்பாக வாந்தி, தலைசுற்றல், கண் வலி மற்றும் கண்ணீர் போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் சிலர் CT SCAN களுக்கும் வேறு சிலர் MRI SCAN போன்ற உயர் பரிசோதனைகளுக்கும் உட்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்: டீச்மோ.
திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை... திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை... Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 19, 2020

11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
Official gazette released on 11-12-2020. 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette.
11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 11-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு..

December 18, 2020

நாளை இரவு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் ஒன்று சேர்வதைக் காணும் அரிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். 
நாளை மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும். இதனை வெற்றுக் கண்களால் 
மற்றும் தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம். 800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. 800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்..

December 18, 2020

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அபே ஜனபல பக்ஷய / எங்கள் மக்கள் சக்தி / Our People's Power Party (OPPP) கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. 
 இதற்காக கட்சி சார்பாக நியமிக்கப்படும் உறுப்பினரின் பெயரை அனுப்புவதற்கான இறுதி தினத்திற்கு முந்தைய நாள் இந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனார். 
அதன் பின்னர் தானே அந்த பதவிக்கு பொருத்தமானவர் என அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 
இதேவேளை ஞானசார தேரர் 
மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் இந்த பதவி தமக்கே வேண்டுமென முயற்சித்தனர். அந்தவகையில் இதற்காக மும்முனை போட்டி நிலவியது. 
தற்போது இவ்வளவு நாட்களாக இழுபறியாக இருந்த இந்த விடயம் முடிவுக்கு வந்துள்ளது. 
குறித்த தேசிய பட்டியல் உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று விசேட வர்த்தமானியையும் வெளியிட்டுள்ளது. இதேவேளை ரத்ன தேரருக்கு எதிர்கட்சியில் ஆசனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. எதிர்க்கட்சி ஆசனம் பெற்ற அத்துரலிய ரத்ன தேரர்.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது..

December 18, 2020

கொரோனா பாதிப்பினால் 46 நாள் பூர்த்தியான குழந்தையொன்று மரணம் அடைந்துள்ளதாக லேடி ரிஜ்வே வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கொரோனாவினால் ஏற்பட்ட 
நிமோனியா காய்ச்சலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது கொரோனாவினால் இடம்பெற்ற இரண்டாவது இளவயது மரணம் ஆகும். ஏற்கனவே இம்மாதம் டிசம்பர் 8ஆம் திகதி 20 நாட்கள் பூர்த்தியான குழந்தை Covid இனால் இதே வைத்தியசாலையில் மரணமாகியது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையும் எரிக்கப்பட்டது. 
அந்தவகையில் இந்த 46 நாட்கள் பூர்த்தியான குழந்தையும் இன்று மாலை பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டது. (நிவ்ஸ்வய)
மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. மற்றுமொரு சோகம்... 46 நாள் குழந்தையும் எரிக்கப்பட்டது.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5
Powered by Blogger.