தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்..
irumbuthirai
December 25, 2020
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்
அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே குறித்த பிரதேச சபைத் தலைவர் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டார். PCR முடிவுகளின்படி அவருக்கு கொரோனா உறுதியானது. பின்னர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிரதேச சபைத் தலைவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்..
Reviewed by irumbuthirai
on
December 25, 2020
Rating: