Driver Vacancy in the European Union

December 25, 2020

Driver Vacancy in the European Union. 
Closing date: 06-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Driver Vacancy in the European Union Driver Vacancy in the European Union Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

December 25, 2020

Vacancies in the Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 12-01-2021. 
See the details below.
Source : 20-12-2020 Sunday Observer.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancies: State Printing Corporation

December 25, 2020

Vacancies in the State Printing Corporation. 
Closing date: 04-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: State Printing Corporation Vacancies: State Printing Corporation Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை...

December 25, 2020

கொரோனா காரணமாக கொள்கலன்களுக்கு (Containers) பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 கொரோனா காரணமாக சில நாடுகளிலிருந்து கொள்கலன் கப்பல்களுக்கு வந்துகொள்ள முடியாமை காரணமாகவே 
இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்கலன்களுக்கான குத்தகை கட்டணம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. 
 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல் உரிமையாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச கப்பல் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை... கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container)  ஏற்பட்ட நிலை... Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்..

December 25, 2020

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 
அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே குறித்த பிரதேச சபைத் தலைவர் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டார். PCR முடிவுகளின்படி அவருக்கு கொரோனா உறுதியானது. பின்னர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
பிரதேச சபைத் தலைவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்.. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்.. Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு

December 25, 2020

நத்தார் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் உரிய பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்...

December 25, 2020

எதிர்வரும் ஜனவரி 01 முதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகளின் மொத்த ஆசன எண்ணிக்கையில் 25 வீத அளவான எண்ணிக்கையினருக்கு திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்... மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்... Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு)

December 24, 2020

Covid-19 தொற்றின் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க வேண்டும் என கோரி சிவில் அமைப்புகள் இன்று 24 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பும் நிலையம் முன்பாக போராட்டமொன்றை நடத்தினர். 
இந்த போராட்டத்தை 
மலையக சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தியது. அதற்கு தலைமை வகித்து பேசிய தங்கவேல் கணேசலிங்கம் கூறுகையில் 
சுதந்திர இலங்கையில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்க வேண்டும். அவர்களில் மத கோட்பாட்டிற்கு இடமளிப்பது தற்போதைய காலத்தின் தேவை எனவும், சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாமெனவும் இதனால் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோய் உள்ளதுடன் இது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது எனவும் அரசாங்கத்துக்கு நாம் எடுத்து கூறுகின்றோம். 
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றில் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்ய செய்வதா? புதைப்பதா? என்று பாரிய பிரச்சினையை அரசாங்கம் முன்வந்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என சாத்வீக போரட்டத்தை மலையக சிவில் அமைப்புகள் நடத்தியது. 
-மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.







ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு) ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 24, 2020 Rating: 5

Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

December 24, 2020

பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப் புள்ளியின் (Z Score) அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்ய நேற்று (23) உயர் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. 
குறித்த மனுக்களானது 2019 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் 
அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, S. துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Reviewed by irumbuthirai on December 24, 2020 Rating: 5

சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...

December 23, 2020

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாகின்றது. ஆனால் ஒரு மாத காலத்திற்கு சிவனொளிபாதமலை 
யாத்திரையை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட Covid-19 தடுப்புக் குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இதேவேளை தற்போதைய கொவிட் பெருந்தொற்று சூழலில் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்வது ஆபத்தானதெனவும் நுவரெலியா மாவட்த்தில் அட்டன் தோட்டப் பகுதிகளில் கொவிட் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சில பகுதிகளில் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவும் இணைந்து பயணத்தடையை விதிக்கின்றனர். 
எனவே இவற்றை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management

December 23, 2020

Courses at the Sri Lanka Institute of Tourism and Hotel Management. 
Closing date of application: 27-12-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை..

December 22, 2020

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் சகலரும் நாளை (23) முதல் ரேபிட் ஆன்டிஜென் (Rapid Antigen) பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
குறித்த இந்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 
11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மமேலும் தெரிவித்தார்.
நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு...

December 22, 2020

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி, 
தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5
Powered by Blogger.