Vacancies: University of Moratuwa

December 27, 2020

Vacancies in the University of Moratuwa. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on December 27, 2020 Rating: 5

அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்..

December 26, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீண்டெழும் வீதத்தை மையமாகக் கொண்டு கூறப்படும் 
எதிர்வுகூறலின்படி, பொருளாதார வளர்ச்சியில் சீனா இன்னும் 8 வருடங்களில் அமெரிக்காவை பின்தள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுகள் தொடர்பான நிலையத்தின் வருடாந்த அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

December 26, 2020


Vacancy in the Urban Development Authority. 
Closing date: 30-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Teacher Vacancies (Sujatha Vidyalaya)

December 26, 2020

Teacher Vacancies @ Sujatha Vidyalaya. 
Closing date: 7 working days from 20-12-2020. 
See the details below.

Source: 20-12-2020 Sunday Observer.
Teacher Vacancies (Sujatha Vidyalaya) Teacher Vacancies (Sujatha Vidyalaya) Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு

December 26, 2020

புதுவகையான கொரோனா வைரசுடன் பிரான்சில் முதலாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 கடந்த 19ஆம் திகதி லண்டனில் இருந்து நாடு திரும்பிய இவருக்கு புதுவகை வைரஸ் தொற்று தொடர்பில் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக பரவக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் 
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பல நாடுகள் பிரித்தானிய விமானங்களுக்கு தடை விதித்தன. பிரான்சும் அவ்வாறு தடை விதித்தாலும் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் அதை தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்..

December 26, 2020

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளராக முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும் ஒலிபரப்பாளருமான திருமதி M.J. பாத்திமா ரினோஸியா நியமிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை ஐந்து பேர்கொண்ட ஆலோசகர் குழுவை 
பிரதமரின் பரிந்துரையின் கீழ் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் நியமித்திருந்தார். 
முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர், ஜனாதிபதி கவுன்சில் ராசிக் சரூக், கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் உபதலைவர் முஸ்லிம் சலாஹுதீன், கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவர் அஷ்ஷேஹ் பஸ்லுர் ரஹ்மான், கண்டி லைன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையை சேர்ந்த அப்சல் மரிக்கார் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ...

December 26, 2020

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு தருகிறோம். 
1) இலங்கைக்கு வருபவர்கள் கட்டாயம் Covid-19 காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் பதிவு அல்லது விமான டிக்கெட் கொள்வனவின் போது இதை பெற வேண்டும். 
2) நாட்டிற்கு வருகை தந்து 02 வார காலப்பகுதியில் 03 பிசிஆர் பரிசோதனைகள் அதுவும் ஒரே மருத்துவ கூடத்தினால் செய்யப்படவேண்டும். 
3) சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரம் தங்க வேண்டும். 
4) முதல் இரு வாரங்களுக்கு சுதந்திரமாக நடமாட தடை. ஹோட்டலில் இருந்து வெளியே செல்ல ஒரு வாரத்துக்கு தடை. 
5) விமான நிலையத்திற்கு புறப்பட 96 மணித்தியாலங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் PCR செய்ய வேண்டும்
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி...

December 26, 2020

இந்தியாவின் பாரத் பயோடெக்கின் ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட கோவெக்சின் (Covaxin) தடுப்பூசி எதிர்வரும் ஜனவரி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது இதன் மூன்றாம் கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. 
இரண்டாம் கட்ட சோதனையின்போது கடுமையான பக்கவிளைவுகள் 
எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுடன் கொரோனாவுக்கு எதிராக 6 - 12 மாதங்கள் வரை பாதுகாப்பைப் பெறலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்..

December 26, 2020

ஐபிஎல் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் புதிய 2 அணிகளை சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 
அந்த வகையில் 2022 முதல் 
ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. 2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

December 26, 2020

இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வரியை அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 
இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ...

December 26, 2020

தேர்தல்களின் போது வாக்களிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்குபவவர்களுக்கு வாக்களிக்க கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்க பிரதமர் உடன்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோர்,  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர், 
சிறைக்கைதிகள் போன்றோருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. 
இது மாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் நாளாந்தம் தமது கடமைகளை செய்ய வேண்டி இருப்பதனால் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.  
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வகுக்கப்பபடவிருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

பிற்போடப்பட்ட இடமாற்றம்

December 26, 2020

தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படவிருந்த போலீஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பிற்போடப்பட்ட இடமாற்றம் பிற்போடப்பட்ட இடமாற்றம் Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப்

December 26, 2020

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னரை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கமைய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 
கொரோனா விடுமுறை காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் சகல மாணவர்களுக்கும் 
இணையதள வசதி இன்மையாலும் பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் முறையான கற்றல் கற்பித்தல் சந்தர்ப்பம் இல்லாமையாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5
Powered by Blogger.